பெங்களூரு: மற்ற மாநில விமான நிலையங்களுக்கெல்லாம் முன் உதாரணமாக பெங்களூருவின் கெம்பகவுடா சர்வதேச விமான நிலையம் 20 லட்சம் சதுர அடியில் பிரம்மாண்டமான வர்த்தக பூங்காவை அமைக்க இருக்கிறது.
இந்த வர்த்தக பூங்கா விமான நிலைய வளாகத்திற்கு உள்ளேயே அமைக்கப்பட உள்ளது. இந்த வர்த்தக பூங்காவின் மூலம் சுமார் 3.5 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தன் துணை நிறுவனம் தான் பெங்களூரு ஏர்போர்ட் சிட்டி லிமிடெட். இந்த நிறுவனம் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் வர்த்தக பூங்காவினை அமைக்க இருக்கிறது.

இந்த பூங்காவில் பன்னாட்டு நிறுவனங்களின் இந்திய கிளைகள் எனப்படும் gcc மையங்கள் பெரும்பாலும் அமைக்கப்படும் என சொல்லப்படுகிறது. அண்மையில் தான் கர்நாடகா அரசு தங்கள் மாநிலத்திற்கு என புதிதாக ஜிசிசி கொள்கையை வகுத்தது.
இதன் ஒரு பகுதியாக பெங்களூரு கெம்பகவுடா சர்வதேச விமான நிலைய வளாகத்திற்கு உள்ளேயே புதிதாக தொழில் பூங்கா அமைக்கப்படுகிறது. 18 கோடி ரூபாய் செலவில் இந்த தொழில் பூங்கா அமையும் என சொல்லப்படுகிறது.
கர்நாடக மாநில அரசின் புதிய குளோபல் கேப்பபிலிட்டி சென்டர் கொள்கை 2024 -29 இன் படி 3.5 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கி மாநில பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பதற்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என பெங்களூரு சர்வதேச விமான நிலையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதன்படி சர்வதேச விமான நிலைய வளாகத்தில் ஏர்போர்ட் சிட்டி என்ற பெயரில் 20 லட்சம் சதுர அடியில் வர்த்தக பூங்கா அமைக்கப்பட உள்ளது. எனவே விமான நிலையம் விமானங்கள் போக்குவரத்துக்கான மையமாக மட்டுமில்லாமல் வர்த்தக பூங்கா, கல்வி, சுகாதாரம், பல்வேறு தொழில் மையம் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட ஒரு நகரமாக மாறும் என சொல்லப்படுகிறது. இதற்காக 18 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பெங்களூர் சர்வதேச விமான நிலையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
பெங்களூரில் உருவாகக்கூடிய இந்த ஏர்போர்ட் சிட்டியானது இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களின் விமான நிலையங்களுக்கு முன்னோடியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ஏர்போர்ட் மேற்கு மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கப்பட்டு வருவதால் இங்கிருந்து நடந்து செல்லும் தொலைவிலேயே வர்த்தக பூங்கா அமையும். மேலும் இந்த மெட்ரோ ரயில் நிலையத்திற்கும் வர்த்தக பூங்காவிலிருந்து இணைப்பு வசதி செய்து தரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
4 பிளாக்குகளை கொண்டதாக இந்த ஏர்போர்ட் சிட்டி இருக்கும். தற்போது இந்தியாவின் gcc தலைநகரமாக பெங்களூரு உருவாகியுள்ளது. அதாவது பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் இந்திய கிளைகளை அமைக்க பெங்களூருவையே தேர்வு செய்கின்றன.
ஜிசிசி மையங்கள் தவிர, பெங்களூரு விமான நிலைய வளாகத்திற்கு உள்ளேயே பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான அரங்கம் மற்றும் 5200 அறைகள் கொண்ட ஹோட்டல்கள் உள்ளிட்டவை அமைக்கப்பட உள்ளன. இந்த பகுதிக்கு தேவையான மின்சாரம் அனைத்தும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்கள் மட்டுமே உருவாக்கப்பட இருக்கின்றன.
கடந்த ஆண்டு பெங்களூரு விமான நிலையம் 37. 5 மில்லியன் பயணிகளை கையாண்டுள்ளது, 2030 ஆம் ஆண்டுக்குள் இது 90 மில்லியன் ஆக அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது.
More From GoodReturns

பெங்களூரு டிராபிக் பிரச்சினைக்கு முடிவு!! உருவாகிறது இரண்டாவது ஐடி சிட்டி: கர்நாடக அரசு அதிரடி!!

துபாய் விமான நிலையத்தில் விபத்து..? எமிரேட்ஸ் சொன்ன குட் நியூஸ்..!! இந்தியர்கள் ஹேப்பி..!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications