இன்று சமுக வலைத்தளம் மக்களின் பல பிரச்சனைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வருவது மட்டும் அல்லாமல் அரசியல் தலைவர்களும், நிர்வாக பொறுப்பில் இருப்பவர்களும் தொடர்ந்து கவனிக்க துவங்கியுள்ளனர். இதனால் மக்கள் பிரச்சனை தொடர்பான ஒவ்வொரு வீடியோ, போட்டோ பெரிய அளவில் பகிரப்பட்டு டிரெண்டாகி வருகிறது.
அந்த வகையில் தற்போது பெங்களூர் ஆட்டோ ஓட்டுனர் ஒருவரின் வீடியோ சமுக வலைத்தளத்தில் காட்டு தீ போல பரவி வருகிறது. இந்த வீடியோவில் ஆட்டோ ஓட்டுனர் தன்னுடைய ஒரு நாள் வருமானத்தையும், செலவுகளையும் கூறி கண்ணீர் விட்டு அழுதுள்ளார். இந்த வீடியோ-வுக்கு பலர் வருத்தம் தெரிவித்திருக்கும் இதேவேளையில் பலர் திட்டியும் உள்ளனர்.

பெங்களூர் ஆட்டோ சேவை மிகப்பெரிய கிட்டத்தட்ட 24 மணிநேரமும் இயங்கும் பல இடங்கள் உள்ளது. சில வருடங்கள் முன்பு பெரும்பாலான இடத்தில் ஆட்டோ மீட்டர் கொண்டு பயண நேரத்தை கணக்கிட்டு கட்டணம் வசூலிக்கப்பட்டது. ஆனால் தற்போது பெரும்பாலான இடத்தில் மீட்டரை தாண்டியும், மீட்டர் இல்லாமலும் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இப்படியிருக்கும் சூழ்நிலையில் ஆன்லைன் டாக்சி சேவை, பைக் டாக்சி சேவை வாயிலாக பல பிரச்சனைகளை எதிர்கொண்ட ஆட்டோ ஓட்டுனர்கள் தற்போது புதிய பிரச்சனையை எதிர்கொள்வது இந்த வீடியோ மூலம் தெரிய வந்துள்ளது. இந்த வீடியோ முழுவதும் கன்னட மொழியில் உள்ளது...
A Bengaluru auto driver in tears after collecting just Rs 40/- from 8 am to 1 pm. This is the result of free bus rides given by the new Cong govt in #Karnataka .
— Megh Updates 🚨™ (@MeghUpdates) June 26, 2023
Pushing people into poverty!!#freebiespic.twitter.com/T1t0XyLTCh
ஆட்டோ ஓட்டுனர் இந்த வீடியோவில் காலை 8 மணி பணிக்கு வந்த நான் 1 மணி ஆகிறது, வெறும் 40 ரூபாய் மட்டுமே சம்பாதித்துள்ளேன். ரொம்ப கஷ்டமாக உள்ளது என சட்டை பையில் இருக்கும் 40 ரூபாயை எடுத்து காட்டுகிறார். பொதுவாக 400 500 ரூபாய் வரையில் சம்பாதிப்பேன், ஆனால் இப்போது 40 ரூபாய் சம்பாதித்து சவாரி இல்லாமல் வீட்டுக்கு செல்ல வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
பெண்களுக்கு இலவச பஸ் வசதி கொடுப்பது மூலம் எங்களுடைய வருமானம் பெரிய அளவில் பாதித்துள்ளது, இதேபோல் மின்சார கட்டணமும் அதிகரித்துள்ளது என வீடியோவில் அழுதுள்ளார். பெண்களுக்கு இலவச பஸ் வசதி கொடுப்பது மூலம் ஆட்டோவில் பயணிப்பவர்கள் எண்ணிக்கை பெரிய அளவில் குறைந்துள்ளது. இதனால் ஆட்டோ ஓட்டும் பணியை விட்டுவிட்டு வேறு தொழில்களுக்கு செல்ல முடிவு செய்துள்ளேன் என தெரிவித்தார்.

இந்த வீடியோவுக்கு ரிப்ளை கொடுத்துள்ள அன்கூர் என்பவர் இலவச பஸ் மூலம் ஆட்டோ, கேப் சேவைகளுக்கு பெரிய பாதிப்பு என்றாலும், பெங்களூர் ஆட்டோ ஓட்டுனர்கள் எப்போதும் திமிருடன், அதிக கட்டணம் வசூலிப்பார்கள் என கமெண்ட் செய்துள்ளார்.
பெங்களூர், மும்பை, டெல்லி ஆட்டோ ஓட்டுனர்கள் மீது எனக்கு எந்த அனுதாபமும் இல்லை. அவர்கள் ஒருபோதும் மீட்டர் / ரேட் கார்டைப் பின்பற்றுவதில்லை, அரசாங்கத்தால் எதுவும் செய்ய முடியாது என்று எப்போதும் நினைக்கிறார்கள் என்று மற்றொரு டிவிட்டர்வாசி.

எது எப்படியிருந்தாலும் ஒரு ஊழியர் தான் செய்யும் வேலையில் வருமானம் இல்லை, குழந்தைகள் கல்வி, வீட்டு செலவுகளை எப்படி சமாளிப்பது என தெரியவில்லை என கண் கலங்கும் போதும் எல்லோருக்கும் மனம் நெருடுகிறது.
More From GoodReturns

வெறிச்சோடி போன பெங்களூரு விமான நிலையம்.. 42 விமானங்கள் ரத்து..!!

துபாய் எடுத்த முடிவிலால் இந்தியாவுக்கு புது பிரச்சனை..!!

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!



Click it and Unblock the Notifications