பெங்களூரில் வீட்டு வாடகை அக்கப்போரை கேட்டு கேட்டு போர் அடித்திருக்கும் பலருக்கு சுட சுட அடுத்து ஒரு விஷயம் வந்திருக்கு. ஒரு வருடத்திற்கு முன்பு பெங்களூரில் எங்கு திரும்பினாலும் TOLET போர்டு இருக்கும், ஆனால் இப்போது வாடகை வீடு பிடிப்பது என்பது திருமணத்திற்கு பொண்ணு, பையனை பார்ப்பதை விடவும் மோசமாக உள்ளது.
ஒருப்பக்கம் வாடகை தாறுமாறாக உயர்ந்திருக்கும் வேளையில் சம்பளத்திற்கு ஏற்ற வீட்டை பார்ப்பது ஒரு தலைவலியாக இருந்தால், வீடு, வீடு இருக்கும் இடம், தண்ணீர் பிரச்சனை, கார் பார்க்கிங் என பல பிரச்சனை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இந்த நிலையில் பல்காக வாடகை வீடு கிடைத்தால் எப்படியிருக்கும்..??

பெங்களூருவின் சர்ஜாபுரா பகுதியில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட ஒரு அடுக்குமாடி குடியிருப்புகளில் சுமார் 35 வீடுகள் இருந்த நிலையில், அப்பார்ட்மென்ட் ஓனர் வீட்டு வாடகை அதிகமாக இருப்பதால் அதை விற்காமல் வாடகைக்கு விட முடிவு செய்தார். இதனால் வாடகைக்கு விடும் பணியை மொத்தமாக ஒரு ப்ரோகரேஜ் நிறுவனத்திடம் கொடுக்கப்பட்டது.
35 வீடுகளையும் ஓரே நேரத்தில் ஆன்லைன் மூலம் வாடகைக்கான விளம்பரம் செய்யப்பட்டது வெறும் 48 மணி நேரத்திற்குள் குத்தகைதாரர்கள் அனைத்து 35 அப்பார்மென்ட் வாடகைக்கு விட்டுள்ளது மட்டும் அல்லாமல் நினைத்ததை விடவும் அதிக வாடகை பெற்றுள்ளார்.
இந்தியாவின் டெக் நகரமான பெங்களூர் தெற்கு மற்றும் கிழக்கு பகுதியில் உள்ள ஐடி மற்றும் டெக் சேவை அலுவலகங்களுக்கு மத்தியில் இருக்கும் ஒரு முக்கியமான பகுதி தான் சர்ஜாபுரா அமைந்துள்ளது.
இந்த சர்ஜாபுரா பகுதியில் தான் புதிதாக கட்டப்பட்ட அப்பார்ட்மென்ட் திட்டத்தில் 35 வீடுகள் உள்ளது. இந்த வீடுகள் 850 சதுர அடி முதல் 1150 சதுர அடி வரையில் கட்டப்பட்டு உள்ளது. ஒரு வாரத்திற்கு முன்பு வாடகை சந்தைக்கு வந்த நிலையில் வெறும் 48 மணிநேரத்தில் அனைத்து வீடுகளும் புக்கிங் ஆகியுள்ளது. மேலும் புதிய வாடகைதாரர்கள் அடுத்த மாதம் முதல் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட வீடுகளில் குடியேறலாம்..
இந்த 35 வீடுகளுக்கு கிட்டத்தட்ட 100க்கும் அதிகமான கோரிக்கைகள் வந்தது என இந்த வீட்டுக்கான ஒப்பந்த தரகரான ஜான் கிறிஸ்டோபர் கூறினார். ஒவ்வொரு இரண்டு படுக்கையறை அபார்ட்மெண்ட் ரூ.35,000 வாடகைக்கு விடப்பட்டு உள்ளது. ஜனவரியில், உரிமையாளர் மாதத்திற்கு 20,000-25,000 ரூபாய்க்கு வாடகைக்கு விட திட்டமிட்டார், ஆனால் டிமாண்ட் அதிகமாக இருக்க 35000 ரூபாய் வாடகை கிடைத்துள்ளது.
சர்ஜாபுரா பகுதி திட்டத்தில் கடந்த ஒரு வருடத்தில் வாடகை சுமார் 40 சதவீத அதிகரித்துள்ளது. இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப மூலதனத்தில் இருக்கும் மாற்றத்தை பெங்களூர் ரியல் எஸ்டேட் துறையில் பிரதிபலிக்கிறது.

லாக்டவுன்-க்கு பின்பு அலுவலகங்களில் பணிபுரிய சொந்த ஊரில் இருந்து நகரங்களுக்கு திரும்பும் ஊழியர்களால் வாடகை வீடுகளுக்கான டிமாண்ட் யாரும் எதிர்பார்க்காத வகையில் உள்ளது. இதை பெங்களூர் உள்ள நில உரிமையாளர்கள், வீட்டு உரிமையாளர்கள் பயன்படுத்திக்கொள்கின்றனர் இதனால் குறைந்த வாடகையில், பிடித்த வீட்டை தேடி கண்டுபிடிக்க முடியாமல் மக்கள் திணறி வருகின்றனர்.
இதன் எதிரொலியாக தான் 35 காலி வீடுகளின் விளம்பரம் மக்கள் மத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி 48 மணிநேரத்தில் அனைத்து வீடுகளும் புக்கிங் ஆகியுள்ளது. மேலும் எம்ஜி ரோடு, கோரமங்களா, ஒயிட்ஃபீல்ட் மற்றும் இந்திராநகர் உள்ளிட்ட நகரின் பெரும்பாலான முக்கிய இடங்களில் வாடகைகள் கட்டுப்படியாகாமல், 40-50 சதவீதம் உயர்ந்துள்ளன.
உள்ளூர் தரகர்கள் கூறுகையில், ஒன்று மற்றும் இரண்டு படுக்கையறைகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் பற்றாக்குறையாகிவிட்டதாகவும், கிடைக்கும் சிலவற்றின் வாடகை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!



Click it and Unblock the Notifications