தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்து விடுவதை கண்டித்து கர்நாடக விவசாயிகள் அமைப்புகள், பல்வேறு கன்னட ஆதரவு அமைப்புகள் மற்றும் எதிர்க்கட்சிகள் இணைந்து இன்று செப்டம்பர் 26-ம் தேதி முழு பெங்களூர் பந்த் நடத்த அழைப்பு விடுத்துள்ளன.
இதன் மூலம் பெங்களூரில் இன்று காலை 6 மணி முதல் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது மட்டும் அல்லாமல் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் பெங்களூரில் பல பகுதிகளில் போராட்டம் நடத்தப்பட்டது குறிப்பாக டவுன்ஹாலில் இருந்து எஸ்பிஎம் சர்கிள் வரையில் பல அமைப்பினர் கண்டன அணிவகுப்பை நடத்தினர்.

பெங்களூரில் அழைக்கப்பட்ட இரண்டு பந்த்களுக்கு தொழில்துறையின் தலைவர்கள் பலர் மறுப்பு தெரிவித்தனர். இதற்கு முக்கிய காரணம் இந்த பந்த் மூலம் பெரும் நிதி இழப்புகள் மற்றும் மாநிலத்தின் பொருளாதாரத்திற்கு மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும் என கூறுகின்றனர். பெங்களூரில் இன்று நடக்கும் 12 மணிநேர பந்த் மூலம் சுமார் 4000 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாக தொழில் அமைப்புகள் கணித்துள்ளது.
இன்று பெங்களூரில் அனைத்து நிறுவனங்களின் ஊழியர்களுக்கும் வொர்க் ப்ரம் ஹோம் கொடுக்கப்பட்டு உள்ளது, வீட்டில் இருந்து பணியாற்ற முடியாத ஊழியர்களுக்கு விடுமுறை. இந்த ஒரு நாள் பந்த் மூலம் பலர் தங்களுடைய வேலைவாய்ப்பை இழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று இன்போசிஸ் முதல் கூகுள், வால்மார்ட், மைக்ரோசாப்ட் வரையில் அனைத்து அலுவலகங்களும் மூடப்பட்டு உள்ளது. பெங்களூரில் மட்டும் சுமார் 3500 பெரிய டெக் நிறுவனங்கள் உள்ளது, ஸ்டார்ட்அப் பிரிவில் 50000 நிறுவனங்கள் உள்ளது. மேலும் பெங்களூர் நகரம் முழுவதும் 79
டெக் பார்க் உள்ளது, அனைத்தும் மூடப்பட்டு உள்ளது.
இதேபோல் பள்ளி, கல்லூரி, மெட்ரோ ரயில் என அனைத்தும் மூடப்பட்ட நிலையில் இதை சார்ந்த அனைத்து வர்த்தகமும் இன்று பாதிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக டாக்சி சேவை, ஆன்லைன் டெலிவரி சேவைகள் முடங்கியுள்ளது.

பொதுவாக வேலை நாட்களில் கிடைக்கும் ஆர்டர்களை காட்டிலும் பந்த் நேரமான காலை 6 முதல் மாலை 6 வரையிலான காலக்கட்டத்தில் ஆர்டர்களின் அளவும் எண்ணிக்கையும் குறைவாக உள்ளதாக தெரிகிறது. மாலை 6 மணிநேரத்திற்கு பின்பு ஆன்லைன் ஆர்டர்கள் சூடுபிடிக்க வாய்ப்புகள் உள்ளது.
இப்படி பல வகையில் பெங்களூர் 12 மணிநேர பந்த் மூலம் கர்நாடக அரசுக்கு சுமார் 4000 கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தக பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாக கணிக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications