இந்தியாவில் ஆட்டோமொபைல் உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக்கு பெயர்போன மாநிலமாக இருக்கும் தமிழ்நாட்டில் எல்கட்ரிக் வாகனங்களை தயாரிக்க பல நிறுவனங்கள் திட்டமிட்டு வரும் வேளையில் Tresa Motors மெகா திட்டத்தை தீட்டியுள்ளது. ட்ரெசா மோட்டார்ஸ் எப்போது வரும் என எதிர்பார்க்கப்படும் வேளையில் ட்ரெசா மோட்டார்ஸ் வருகிறது.
ட்ரெசா மோட்டார்ஸ் - நடுத்தர மற்றும் கனரக எலக்ட்ரிக் டிரக்குகளின் முக்கிய OEM தயாரிப்பு நிறுவனம், உற்பத்தி மற்றும் R&D வசதிகளை அமைக்கும் திட்டத்திற்காக 500 முதல் 1000 கோடி ரூபாய் வரையிலான தொகையை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக, புதிதாக நியமிக்கப்பட்டு உள்ள தலைவர் வினோத் கே. தாசரி தெரிவித்துள்ளார்.

ட்ரெசா மோட்டார்ஸ் நிறுவனத்தின் சேர்மன் ஆக உடனடியாக பதவிக்கு வர உள்ள வினோத் கே. தாசரி இதற்கு முன்பு ராயல் என்ஃபீல்டு மற்றும் அசோக் லேலண்ட் உள்ளிட்ட முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களில் தலைமைப் பொறுப்பு வகித்துள்ளார் மற்றும் SIAM அமைப்பின் முன்னாள் தலைவராகவும் இருந்துள்ளார்.
இந்த நிலையில் வினோத் கே. தாசரி தலைமையிலான ட்ரெசா மோட்டார்ஸ் புதிய உற்பத்தி மற்றும் R&D வசதிகளை அமைக்க கர்நாடாகா மற்றும் தமிழ்நாட்டில் சரியான இடத்தை தேடி வருகிறது. ட்ரெசா மோட்டார்ஸ் இந்த பணியை அடுத்த 2 அல்லது 3 மாதத்திற்குள் முடிக்க திட்டமிட்டு உள்ளது.
இந்தியாவில் எலக்ட்ரிக் வர்த்தக வாகனங்களுக்கு பெரிய அளவிலான வரவேற்பு கிடைத்துள்ளது, குறிப்பாக பல முன்னணி ஈகாமர்ஸ், ரீடைல் சேவை நிறுவனங்கள் தற்போது தனது டெலிவரி வாகனங்கள், சரக்கு வாகனங்களை எலக்ட்ரிக் வாகனங்களாக மாற்றியுள்ளது. முக்கியமாக அமேசான், டிமார்ட், போன்றவை தனது ஹோம் டெலிவரிக்காக எலக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்தி வருகிறது.
இந்த நிலையில் 2022 இல் பெங்களூரில் ரோஹன் ஷ்ரவன் மற்றும் ரவி மச்சானி இணைந்து உருவாக்கிய ட்ரெசா மோட்டார்ஸ் தொழில்துறை வடிவமைப்பு, மின்சார பவர்டிரெய்ன்கள் மற்றும் பேட்டரி தொடர்பான தொழில்நுட்பங்களில் முக்கிய சேவைகளை வழங்குகிறது.
தற்போது 18 - 55 டன் GVM பிரிவு எலக்ட்ரிக் டிரக்குகளை உருவாக்கி வருகிறது, ஜூலை 3 ஆம் தேதி தான் தனது முதல் வாகனத்தை அறிமுகம் செய்தது. இந்த வாகனம் ஒரு முறை சார்ஜ் செய்தால் 400 முதல் 500 கிலோமீட்டர் வரையில் இயக்க கூடிய திறன் கொண்டவை.
ட்ரெசா மோட்டார்ஸ் தற்போது 40 முதல் 50 ஊழியர்களை மட்டுமே கொண்டு இயங்கி வரும் வேளையில், அடுத்த இரண்டு வருடத்தில் இந்த 500 முதல் 1000 கோடி ரூபாய் முதலீட்டு திட்டத்தின் வாயிலாக நிறுவனத்தில் 1000 ஊழியர்களை பணியில் சேர்க்க திட்டமிட்டு உள்ளது.


Click it and Unblock the Notifications