இந்தியாவில் ஈகாமர்ஸ் என்னும் ஆன்லைன் வர்த்தக தீயை மூட்டிவிட்ட சச்சின் பன்சால் தான் உருவாக்கிய பிளிப்கார்ட் நிறுவனத்தை விட்டு வெளியேறிவிட்டு, நிதி சேவை நிறுவனமான நவி டெக்னாலஜிஸ் (Navi Technologies) உருவாக்கி வேகமாக வளர்ந்து வரும் வேளையில் ஐபிஓ கூட வெளியிட திட்டமிடப்பட்டது.
இந்த சூழ்நிலையில் நவி டெக்னாலஜிஸ் நிர்வாகம் சுமார் 200 ஊழியர்களைப் பல துறைகளிலிருந்து பணிநீக்கம் செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி FINTECH பிரிவில் இருக்கும் ஊழியர்களுக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

தற்போது பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ள 200 ஊழியர்களுக்கு முன் அறிவிப்பு இல்லாமல் severance package மட்டுமே கொடுத்து நிறுவனத்தை விட்டு வெளியேற்றியுள்ளது. இதுவரையில் சச்சின் பன்சால் உருவாக்கிய நவி டெக்னாலஜிஸ் எவ்விதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.
தற்போதைய வர்த்தக சந்தையில் ஸ்டார்ட்அப் நிறுவனமாக இருந்தாலும் சரி, பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டு உள்ள நிறுவனமாக இருந்தாலும் சரி லாபத்தில் இயங்க வேண்டும், இது மட்டும் அல்லாமல் லாபத்தில் தொடர்ந்து சிறப்பான வளர்ச்சியைப் பதிவு செய்ய வேண்டும் என இல்லையெனில் முதலீட்டாளர்களை கைவிட்டு விடுவார்கள்.
குறிப்பாக ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் இது மிகவும் மோசமான நெருக்கடியாக மாறியுள்ளது. லாபம் ஈட்டக்கூடிய அளவுக்கு இல்லாத நிறுவனங்களால் புதிய முதலீடுகளைத் திரட்ட முடியவில்லை, இதனாலேயே பல நிறுவனங்கள் பணிநீக்கம், வர்த்தகத்தில் சில பகுதிகளை மூடல், வர்த்தக சந்தையை விட்டு வெளியேறுதல் என பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
நவி டெக்னாலஜிஸ் நிர்வாகம் சில வாரங்களுக்கு முன்பே தனது பணிநீக்கத்தைத் தொடங்கியதாகவும், மேலும் பல ஊழியர்கள் நிறுவனத்தில் இருந்து நீக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் டிஜிட்டல் கடன் சேவை அளிக்கும் நிறுவனங்களுக்குக் கடுமையான கட்டுப்பாடுகளும், விதிமுறைகளும் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நவி டெக்னாலஜிஸ் நிர்வாகம் தற்போது பணிநீக்கம் செய்துள்ள 200 ஊழியர்களில் சுமார் 60 முதல் 70 சதவீதம் பேர் தங்களுடைய வேலையை இழந்தது ப்ராடெக்ட் டெவலப்மென்ட் மற்றும் நிர்வாக பிரிவில் இருந்து தான் என தெரிய வந்துள்ளது. இந்த பணிநீக்கம் இந்த வார இறுதி வரையில் தொடரும் என யுவர்ஸ்டோரி தெரிவித்துள்ளது.

நவி டெக்னாலஜிஸ் ஐபிஓ வெளியிடுவதற்காகக் கொடுக்கப்பட்ட அறிக்கையில் டிசம்பர் 31, 2021 நிலவரப்படி இந்நிறுவனத்தில் 4680 ஊழியர்கள் இருந்துள்ளனர். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சச்சின் பன்சால் தலைமையிலான நவி டெக்னாலஜிஸ் சுமார் 3,350 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டைத் திரட்டும் ஐபிஓ விண்ணப்பத்திற்குச் செபி ஒப்புதல் அளித்தது குறிப்பிடத்தக்கது.
நவி டெக்னாலஜிஸ்-ன் 3,350 கோடி ரூபாய் ஐபிஓ திட்டத்தில் இந்நிறுவனம் ரூ.2,370 கோடியை நவி டெக்னாலஜிஸ் முதலீடு செய்யும், ரூ.150 கோடியை நவி ஜெனரல் இன்சூரன்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் முதலீடு செய்யத் திட்டமிட்டு இருந்தது. இதேநேரத்தில் மீதமுள்ள தொகையை பொது கார்ப்பரேட் நிர்வாக பணிகளுக்காகப் பயன்படுத்த உள்ளதாகச் செபி-க்கு கொடுக்க அறிக்கையில் தெரிவித்திருந்தது.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!



Click it and Unblock the Notifications