பெங்களூரு: அண்மையில் ஆஷிஷ்ஜா என்ற ஒரு தொழில்நுட்ப வல்லுனர் நொய்டாவிலிருந்து பணி நிமித்தமாக பெங்களூருக்கு குடி பெயர்ந்து உள்ளார். 80 ஆயிரம் ரூபாய் வாடகைக்கு ஒரு வீட்டினை எடுத்து தங்கி உள்ளார். இந்த வீட்டில் அனைத்து வசதிகளும் இருக்கின்றன ஆனால் இந்த ஒரு வசதி மட்டும் இல்லை என அவர் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு இருக்கக்கூடிய பதிவு ட்ரெண்டாகி உள்ளது.
இதற்கு முன்பு நொய்டாவில் வேலை செய்து கொண்டிருந்தபோது நொய்டாவிற்கும் டெல்லிக்கும் தினமும் பயணம் செய்துள்ளார் ஆஷிஷ் ஜா. பயண நேரமே பாதி வாழ்க்கையாக போய்விட்ட நிலையில் பெங்களூருக்கு குடி பெயர்ந்த போது அவர் எடுத்த ஒரு முடிவு என்னவென்றால் அலுவலகத்திற்கு அருகிலேயே வீடு இருக்க வேண்டும் என்பது தான்.

இதற்காக பெங்களூருக்கு மாறியவர் பின்னிப்பேட் பகுதியில் உள்ள பூர்வா சன்ஃப்ளவர் என்ற கேட்டட் கம்யூனிட்டியில் மூன்று படுக்கை அறைகள் கொண்ட ஒரு பிளாட்டினை வாடகைக்கு எடுத்துள்ளார்.
வாடகை மட்டும் மாதத்திற்கு 80 ஆயிரம் ரூபாயாம். இருந்தாலும் அங்கிருந்து தன்னுடைய அலுவலகத்திற்கு 15 நிமிடங்களில் சென்று வந்து விட முடியும் என்பதால் அவர் வாடகை அதிகமாக இருந்தாலும் பரவாயில்லை, தினமும் 2- 3 மணி நேரம் போக்குவரத்து நெரிசலில் பயணிக்க நான் தயாராக இல்லை என கூறுகிறார்.
அண்மையில் சமூக வலைத்தளத்தில் வானவில் படத்தை பதிவிட்டிருந்த அவர், 80,000 ரூபாய் வாடகை தருவதும் சில நேரங்களில் மகிழ்ச்சியை தருகிறது என கூறி இருந்தார்.
உடனே சமூக வலைதளங்களில் 80,000 வாடகையா? என அனைவரும் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்துள்ள அவர், நான் இரண்டு நண்பர்களுடன் வசிக்கிறேன் மூன்று பேரும் வாடகையை பகிர்ந்து கொள்வோம் என கூறியுள்ளார்.
இருப்பினும் ”நான் என்னுடைய அலுவலகத்திற்கு சீக்கிரமாக சென்று வர முடிகிறது, இது அனைத்து வசதிகளும் இருக்கக்கூடிய வீடு என்பதால் வீட்டிற்கு தேவையான பொருட்களை நான் வாங்க வேண்டிய தேவை இல்லை. வீட்டுக்கு அருகிலேயே பேருந்து நிலையம், மெட்ரோ நிலையம் இருக்கிறது எந்த ஒரு விஷயத்திற்காகவும் நான் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியதில்லை ” என கூறியுள்ளார்.
” நான் பணத்தை விட என்னுடைய நேரத்தை பெரிதாகவும் மதிப்புடையதாகவும் கருதுகிறேன். குறைந்த வாடகைக்கு வீடு கிடைக்கிறது என்பதற்காக அலுவலகத்தில் இருந்து நீண்ட தூரத்தில் வாடகைக்கு வீடு எடுத்து அங்கிருந்து தினமும் 3 மணி நேரத்தை நான் போக்குவரத்து நெரிசலில் வீணாக்க விரும்பவில்லை.
நான் நொய்டாவிலிருந்து பெங்களூருக்கு குடிப்பெயரும் போது அலுவலகத்திற்கு அருகில் தான் வீடு எடுக்க வேண்டும் அது எவ்வளவு வாடகையாக இருந்தாலும் சரி என்ற முடிவுடன் தான் வந்தேன்” என தெரிவித்துள்ளார்.
இந்த 80 ஆயிரம் ரூபாய் வாடகை வீட்டை வாடகைக்கு எடுத்து விட்டோமே என எப்போதாவது நீங்கள் வருத்தப்பட்டது உண்டா என ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்துள்ள அவர், இங்கே அனைத்துமே இருக்கிறது ஆனால் என்னுடைய நண்பர்கள் யாரும் இங்கே இல்லை. அனைவரும் தூரமாக இருக்கிறார்கள் நான் அவர்களை சந்திக்க வேண்டும் என்றாலோ அல்லது அவர்கள் என்னை சந்திக்க வேண்டும் என்றாலும் நீண்ட நேரம் பயணம் செய்துதான் சந்தித்துக் கொள்ள முடிகிறது அந்த ஒரு வருத்தம் இருக்கிறது என தெரிவிக்கிறார்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications