ZestMoney நிறுவனத்திற்கு மூடுவிழா.. 150 பெங்களூர் ஸ்டார்ட்அப் ஊழியர்கள் கண்ணீர்..!!

Buy now Pay Later (BNPL) பிரிவில் ரீடைல் கடன் சேவைகளை மக்களுக்கு அளித்து வரும் பிரபலமான ZestMoney நிறுவனம் தனது செயல்பாடுகளையும், வர்த்தகத்தையும் முழுமையாக நிறுத்த முடிவு செய்து நிறுவனத்தை மொத்தமாக மூட உள்ளது. ZestMoney நிர்வாகத்தின் இந்தத் திடீர் அறிவிப்பு பின்டெக் துறையில் இருக்கும் ஊழியர்களுக்குப் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

ZestMoney நிறுவனம் தனது செயல்பாடுகளை முழுமையாக நிறுத்த முடிவு செய்துள்ள காரணத்தால் இந்நிறுவனத்தில் பணியாற்றும் 150 ஊழியர்களைப் பாதிக்கும் என்று நிர்வாகம் செவ்வாய்க்கிழமை நடந்த டவுன் ஹால் கூட்டத்தில் ஊழியர்களிடம் கூறியுள்ளது. டிசம்பர் மாத இறுதிக்குள் நிறுவனம் மூடப்படும் எனத் தெரிகிறது.

ZestMoney நிறுவனத்திற்கு மூடுவிழா.. 150 பெங்களூர் ஸ்டார்ட்அப் ஊழியர்கள் கண்ணீர்..!!

பெங்களூரூவைத் தளமாகக் கொண்ட ஸ்டார்ட்அப் ZestMoney நிறுவனத்தை, பின்டெக் துறையில் மிகப்பெரிய நிறுவனமான PhonePe வாங்குவதற்கு முயற்சி செய்து வந்த நிலையில், பெரும் தோல்வியடைந்ததை அடுத்து தற்போது நிறுவனத்தை மூட முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

போன்பே நிர்வாகம் ZestMoney நிறுவனத்தைக் கைப்பற்றும் திட்டத்தில் தீவிரமாக இருந்தாலும், அதன் நிதியியல் நிலைமை, நிர்வாகம் உட்பட அனைத்தையும் ஆய்வு செய்து பார்த்த போது, கைப்பற்ற ஏற்புடையதாக இல்லை என அறிவித்தது.

இருப்பினும் இந்த இடைப்பட்ட காலத்தில், வால்மார்ட்டுக்குச் சொந்தமான போன்பே, ZestMoney இன் ஊழியர்களில் சுமார் 130 பேரை தனது நிறுவனத்தின் பணியில் அமர்த்திக்கொண்டது. ஏப்ரல் மாதம் ZestMoney சுமார் 100 ஊழியர்களைப் பணியில் இருந்து நீக்கியது, தற்போது எஞ்சியுள்ள 150 ஊழியர்கள் ZestMoney மூடப்படுவதால் பணிநீக்கத்தை எதிர்கொள்ள உள்ளனர்.

போன்பே, ZestMoney நிறுவனத்தைக் கைப்பற்றும் திட்டம் தோல்வி அடைந்த உடன் இந்நிறுவனத்தின் 3 நிறுவனர்களும் அடுத்தடுத்து தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர். ZestMoney நிறுவனத்தில் இதுவரையில் Quona Capital, Zip, Omidyar Network India, Flourish VC மற்றும் Scarlet Digital ஆகியவை முதலீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

2015 இல் பெங்களூருவில் நிறுவப்பட்ட இதுநாள் வரையில் சுமார் 130 மில்லியன் டாலர் முதலீட்டை திரட்டியுள்ளது. ZestMoney தளத்தில் இதுவரையில் சுமார் 1.7 கோடி பதிவு செய்யப்பட்ட பயனர்கள் உள்ளனர்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+