பள்ளிக் குழந்தைகளில் தங்கள் முதுகில் பெரிய பைகளில் ஏகப்பட்ட புத்தகங்களையும் நோட் புக்குகளையும் பொதிபோல சுமந்து செல்கின்றனர். ஏகப்பட்ட ப்ராஜக்ட்கள், அசைன்மெண்ட்கள், ஹோம் வொர்க்குகள் என படிப்பையே வெறுக்கும் அளவுக்கு இருக்கிறது.
ஆனால் கோபிநாத் என்னும் சிறுவனோ அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் உழைத்து தனக்கென்று ஒரு கம்பெனியைத் தொடங்கி 17 வயதில் உலகின் இளம் வயது சிஇஓ ஆகி சாதனை படைத்தார்.
எனவே நமக்குப் பிடித்தமானவற்றை முழுமனதோடு செய்தால் எதையும் சாதிக்கலாம் என்பது அவரது வாழ்க்கை எல்லாருக்கும் உணர்த்துகிறது.

பெங்களூரைச் சேர்ந்த எம்ஆர் கோபிநாத் இந்திய ராணுவத்தில் ஒரு விஞ்ஞானியாக வேலை பார்த்தார். அவரது மனைவி ஓர் இல்லத்தரசி. இவர்களது மகன் சுஹாஸ் கோபிநாத் பெங்களூரில் உள்ள விமானப்படை பள்ளியில் படித்தார். அந்த நேரத்தில் பள்ளியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் அறிமுகமாகியிருந்தது. இவர் பிறந்தது 1987 ஆம் ஆண்டு, இன்று இவருக்கு வயது 37. பள்ளியில் படித்துக்கொண்டு இருந்த போது கோபிநாத்துக்கு கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தின் மீது மிகுந்த ஆர்வம் ஏற்பட்டது.
ஆனால் பிரச்னை என்னவென்றால் சுஹாஸ் கோபிநாத்து சொந்தமாக ஒரு கம்ப்யூட்டர் வீட்டில் இல்லை. இதனால் அவர் வீட்டுக்குப் பக்கத்தில் இருந்த ஒரு சைபர் கபேக்கு சென்று கம்ப்யூட்டரில் பல நுணுக்கங்களைக் கற்றுவந்தார். சைபர் கபேயில் கட்டணம் செலுத்த போதிய பணம் இல்லாததால் அதே கபேயில் மதியம் 1 மணியிலிருந்து 4 மணிநேரம் வரை பார்ட்டைம் ஜாப் செய்தார். அதிலிருந்து கிடைத்த பணத்தை வைத்து இண்டர்நெட் கட்டணத்தை கட்டினார். இதுதான் அவர் பார்த்த முதல் வேலை. அப்போது சுஹாஸ் கோபிநாத்துக்கு வயது 12.
அந்த சைபர் கபேயில் கடுமையாக உழைத்த சுஹாஸ் கோபிநாத் தனது கம்ப்யூட்டர் திறனை வளர்த்துக் கொண்டு சொந்தமாக ஒரு வெப்சைட்டை உருவாக்கினார். இதைத் தொடர்ந்து தன்னை ஒரு ஃப்ரீலான்ஸ் வெப் டிசைனராகப் பதிவு செய்து கொண்டு வாடிக்கையாளர்களை கவர ஆரம்பித்தார். இதில் கிடைத்த வருமானத்தை வைத்து தனக்கென ஒரு கம்ப்யூட்டரை இன்டர்நெட் வசதியுடன் வாங்கிக் கொண்டார். அப்போது அவருக்கு வயது 13.
14ஆம் வயதில் அவரது coolhindustan.com என்ற வெப்சைட் அவரை உலகின் இளம்வயது சர்ட்டிபைடு புரொபஷனல் வெப்ப டிசைனராகப் பெயர் வாங்கித் தந்தது. இதனால் சுஹாஸ் கோபிநாத்தின் திறமை நாடு முழுவதும் பிரபலமாகத் தொடங்கியது. இந்நிலையில் அவருக்கு அமெரிக்காவின் ஒரு பெரிய ஐடி நிறுவனத்தில் இருந்து உள்பட நிறைய நல்ல வேலைவாய்ப்புகள் குவியத் தொடங்கின. அந்த அமெரிக்க கம்பெனி சுஹாஸ் கோபிநாத்தின் மேற்படிப்புக்கு ஸ்பான்ஸர் செய்வதாகவும் தங்கள் கம்பெனியிலேயே பார்ட் டைம் வேலை தருவதாகவும் கூறினார்.
ஆனால் சுஹாஸ் கோபிநாத்துக்கோ தானும் பில்கேட்ஸ் போல ஆக வேண்டும் என்ற கனவு இருந்ததால் அந்த கம்பெனி தந்த வாய்ப்பை மறுத்து விட்டார்.
2000 ஆம் ஆண்டில் தனது 14 ஆவது வயதில் சுயமாக Globals Inc என்ற கம்பெனியைத் தொடங்கினார். வெப் சொல்யூஷன்ஸ், மொபைல் சொல்யூஷன்ஸ், ரிசர்ச் டேட்டா சார்ந்த வேலைகளை அதன் மூலம் செய்து வந்தார்.
தொடக்கத்தில் தனது கம்பெனிக்கு 'Global' அல்லது 'Global Solutions' என்று பெயர் சூட்ட விரும்பினார். ஆனால் இந்தியாவில் அவரது வயதுக்கு நிறுவனத்தைத் தொடங்கும் உரிமை இல்லை என்பதால் அது சாத்தியம் இல்லாமல் போனது. இதனால் அவர் அமெரிக்காவின் கலிபோர்னியாவுக்குச் சென்று 'Globals Inc' என்ற பெயரில் தனது கம்பெனியை பதிவு செய்தார். பிற்காலத்தில் அவர் இந்தியாவிலும் இந்த நிறுவனத்தைப் பதிவு செய்தார்.
சுஹாஸ் கோபிநாத்துக்கு 17 வயது ஆன நிலையில் தனது நிறுவனத்தின் சிஇஓ-வாக பொறுப்பேற்றார். அந்த நேரத்தில் உலகின் இளம் வயது சிஇஓ என்ற பெருமையையும் பெற்றார். இதுபற்றி சுஹாஸ் கோபிநாத் கூறுகையில், திரு.பில்கேட்ஸின் வெற்றிப்பயணத்தால் நான் மிகுந்த உத்வேகத்தைப் பெற்றேன். 14 வயதிருக்கும்போது குளோபல் இன்க்-ஐ நிறுவினேன். இதன்மூலம் இளம்வயது திறனாளிகளுக்கு அவர்களது திறமை அடிப்படையில் வயது, படிப்பு வித்தியாசம் பார்க்காமல் உலகளவில் நல்லதொரு பிளாட்பார்மை அமைத்துக் கொடுப்பதுதான் எனது நோக்கமாகும்.
இன்றைக்கு எனது வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கையில் ஒரு தொழிலதிபராகி உலகளவில் நிறைய இளம்வயது திறமைசாலிகளுக்கு வேலைவாப்பை உருவாக்கித் தந்திருப்பதில் மிகவும் பெருமைப்படுகின்றேன் என்று நினைவுகூர்கிறார்.
அவரது நிறுவனம் முதல் வருடத்தில் ரூ.1 லட்சம் டர்ன் ஓவர் செய்தது. இரண்டாவது ஆண்டில் அது ரூ.5 லட்சம் ஆனது.
இருப்பினும் அவரது தொழிலில் ஏராளமான சிரமங்களை அவர் சந்திக்க வேண்டியிருந்தது. சுஹாஸ் கோபிநாத் ஒரு டீன் ஏஜராக இருந்ததால் யாரும் அவருக்காக முதலீடு செய்ய முன்வரவில்லை. இதுபற்றி அவர் கூறுகையில், மக்கள் என்னை ரொம்ப சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை. எனது வாடிக்கையாளர்கள், அரசு அதிகாரிகள் கூட தங்களது ப்ராஜக்ட் தொடர்பாக எனது தந்தையிடம் பேச வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கின்றார்கள். உண்மையைச் சொல்லப்போனால் நான் என்ன செய்து கொண்டிருக்கின்றேன் என்பதே எனது தந்தைக்குத் தெரியாது என்று சிரித்தபடி கூறுகிறார்.
கர்நாடக மாநிலத்தின் ராஜயோத்சவா விருது, ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் இளம்வயது சாதனையாளர் விருது உள்பட பல்வேறு விருதுகளை சுஹாஸ் கோபிநாத் பெற்றுள்ளார். வேர்ல்டு எக்கனாமிக் ஃபோரம் 2008-09 ஆம் ஆண்டுக்கான 'யங் குளோபல் லீடர்' என்ற பெருமைக்குரிய விருதை அளித்தது.
பிரபல ஊடக நிறுவனங்களான பிபிசி, வாஷிங்டன் டைம்ஸ் ஆகியவை அவருக்கு 17 வயது இருக்கும்போது உலகின் இளம்வயது சிஇஓ பட்டியலில் முதலிடத்தில் சேர்த்தன. இன்றைக்கு அவரது கம்பெனி இங்கிலாந்து, ஸ்பெயின், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா உள்பட 14 நாடுகளில் தனது கிளைகளை விரித்துள்ளது.
சுஹாஸ் கோபிநாத் நிறுவனத்தின் நிகர சொத்து மதிப்பு இப்போது ரூ.100 கோடியாகும். அவரது நெட்வொர்க் 5 மில்லியனாக உள்ளது.
சுஹாஸ் கோபிநாத்தின் வாழ்க்கையை சற்று உற்று கவனித்தால் உறுதியும், விடாப்பிடியான ஈடுபாடும் இருந்துவிட்டால் வாழ்க்கையில் சாதனையின் உச்சத்தைத் தொடுவதற்கு வயது ஒரு மேட்டரே இல்லை என்பது புரியும்.
More From GoodReturns

Work From Home.. அடுத்தடுத்து அறிவிப்பை வெளியிட்ட ஐடி நிறுவனங்கள்.. சென்னை ZOHO ஊழியர்களுக்கு 2 வார WFH..!!

திண்டுக்கல் பக்கம் வீசும் அதிர்ஷ்ட காற்று!! அமைச்சர் டிஆர்பி ராஜா சொன்ன குட் நியூஸ்!!

ஏஐ தொழில்நுட்பத்தின் கோரமுகம்.. Adode சிஇஓ சாந்தனு நாராயண் வெளியேற்றம்..!!

இண்டிகோ CEO பீட்டர் எல்பர்ஸ் திடீர் ராஜினாமா.. கண்ட்ரோல்-ஐ கையில் எடுக்கும் ராகுல் பாடியா..!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

Indane வாடிக்கையாளர்களே உஷார்!! சிலிண்டர் புக் செய்ய புதிய எண்கள், வழிமுறைகள் அறிவிப்பு!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!



Click it and Unblock the Notifications