இந்தியாவின் சிலிக்கான் வேலியாக விளங்கும் பெங்களூரில் டிராபிக் பற்றி யாருக்கு சொல்ல தேவையில்லை, வெளியூர்காரர் பெங்களூர் வந்தால் முதலில் புலம்பும் விஷயம் டிராபிக். பெங்களூர்வாசிகளுக்கு இது பழகிப்போன ஒரு விஷயமாக இருந்தாலும் அவ்வபோது டிராபிக்-ல் சம்பவம் நடக்க தான் செய்கிறது. இதில் ஒரு சம்பவம் தான் தற்போது ரெடிட்ட தளத்தில் 1200 பேரை லைக் செய்யும் அளவுக்கு மாறியது.
பெங்களூருவின் நந்தி துர்கா சாலையில் வெயில் உச்சிக்கேறும் நேரம் இதில் சரியான டிராபிக் ஜாம் வேற. வாகன ஓட்டிகள் நெருக்கியடித்துக் கொண்டு காதை பிளக்கும் வகையில் ஹாரன் அடித்துக் கொண்டே இருந்தார்கள். போக்குவரத்து நெரிசல் சரியாகுவதாகத் தெரியவில்லை. ரோட்டில் காத்திருந்தவர்கள் ஏகப்பட்ட கடுப்பானார்கள்.

அங்கே நடுரோட்டை அடைத்தபடி கோணல்மாணலாக ஒரு கார் நின்று கொண்டிருந்தது. அதன் பின்னால் நின்றிருந்த பைக் ஓட்டுநர் பலக்கா ஹாரன் அடித்தார். ஆனால் காரில் இருந்த டிரைவரோ திரும்பிக்கூட பார்க்கவில்லை. கடுப்பான பைக் ஓட்டுநர் பக்கத்தில் சென்று கொஞ்சம் முன்னாடி நகர்த்துங்க. நந்தி மாதிரி கார் நிக்குது என்று கத்தினார்.
ஆனால் அதற்கும் கார் டிரைவர் கலங்கவில்லை, லேசாகத் திரும்பிப் பார்த்துவிட்டு தம்பி, கார் ஸ்டார்ட் ஆகாது. நீங்க ரைட் சைடுல ஏறிப்போய்டுங்க என்றார். அந்தப் பக்கம் வழியே இல்லங்க எப்படி போகுறது என்று பைக் காரர் கோபத்தோடு சொன்னார். ஆனாலும் பைக்காரர் தொடர்ந்து திட்டிக் கொண்டே இருந்தார்.
இதேவிட பெரிய விஷயம் என்னவென்றால் கார் ஓட்டுனர் பைக் ஓட்டுனருக்கு டெஷன் ஆகாதீங்க, உடம்புக்கு நல்லது இல்லை என அட்வைஸ் செய்துள்ளார். இதன் பின்னர் கார் ஓட்டுனர் தவறான வார்த்தைகளில் திட்டவும் துவங்கினார். பெரும் சண்டை வருவதற்கு முன்பு பைக் ஓட்டுனரும் காரில் பிரச்சனையை இருப்பதை புரிந்துக்கொண்டு நகரந்தார்.
இதற்கு அசராத கார் டிரைவர் எதுக்கு தம்பி திட்டி உடம்ப டயர்டா ஆக்குறீங்க என கூற அடுத்த நொடியே காருக்குள் இருந்து பயங்கர சப்தத்துடன் பாட்டு வந்தது உயிரே படத்தில் நடிகர் ஷாரூக் கான் நடித்த தைய்ய தைய்ய தைய்யா பாடல் தான் அது. கார் டிரைவர் பைக் காரரிடம் தம்பி கோபப்படாம இந்தப் பாட்டைக் கேளுங்க கூல் ஆயிடுவீங்க என்ற தொனியில் பாட்டை ப்ளே செய்தார் என இப்பதிவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதைக் கேட்டுக் கொள்ளாமல் பைக் ஹாரனை அடித்து அடித்து ஓய்ந்துபோன அந்த டிரைவர் சிறிதுநேரம் பேசாமல் இருந்தார். பின்னர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை. பைக்கை உருட்டி அங்கிருந்து நகர்த்தி வெளியே எடுத்து சென்று விட்டார்.

பெங்களூரு டிராபிக்கை ஒரு பாட்டு மூலம் கூலாக சமாளித்த சந்தோஷத்தில் அந்த கார் ஓனர் பொறுமையுடன் காத்திருந்தார். இந்த விடியோ இப்போது டெலிட் செய்யப்பட்டாலும் சுமார் 1200 பேர் இதற்கு லைக் செய்துள்ளனர். ஒருபுறம் கார் ஓனரை திட்டி தீர்த்தவர்கள் ஏராளமாக இருக்க. மறுபுறம் பொறுமையாக சிச்சுவேஷனை சமாளித்தார் என்று பாராட்டு மழை.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!



Click it and Unblock the Notifications