இந்தியாவில் அடுத்தடுத்து புதிய நிறுவனங்கள் துவங்கப்பட்டும், வெளிநாட்டில் இருக்கும் நிறுவனங்கள் இந்தியாவில் தனது அலுவலகத்தை திறந்து வரும் வேளையில்.. வேலையில்லாமலும், புதிய வேலைவாய்ப்புகளுக்கு மாற வேண்டும் என திட்டமிட்டுவோர் எண்ணிக்கை எப்போதும் இல்லாத வகையில் மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது.
பெங்களூர்-ஐ சேர்ந்த Springworks என்னும் மார்கெட்டிங் டெக்னாலஜி சேவை நிறுவனத்தின் சிஇஓ மற்றும் நிறுவனரான கார்த்திக் டிவிட்டரில் வேலைவாய்ப்பு சந்தையின் நிலவரத்தை புட்டு புட்டு வைக்கும் தரவுகளை வெளியிட்டு பலருக்கும் அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

இந்தியாவில் வேலைவாய்ப்பு பிரச்சனை பல வருடமாக இருக்கும் வேளையில், தற்போது நாட்டின் முன்னணி ஐடி சேவை நிறுவனங்கள் பட்டப்படிப்பை முடித்து வெளியேறும் பட்டதாரிகளை பணியில் சேர்க்கும் முக்கியமான வேலையில் தேர்வு செய்யப்பட்ட ஊழியர்களின் ஆன்போர்டிங்-ஐ 4 மாதம் வரையில் ஒத்திவைத்துள்ளது.
இதனால் பல இளைஞர்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் தவித்து வரும் வேளையில் Springworks சிஇஓ கார்திக் வீட்டில் இருந்து பணியாற்றும் ஒரு வேலைவாய்ப்பு குறித்த பதிவுக்கு 48 மணிநேரத்தில் 3000 ரெஸ்யூம் வந்துள்ளது. இதனால் நாட்டின் வேலைவாய்ப்பு சந்தை எந்த அளவுக்கு இருக்கிறது..? என தெரிவித்துள்ளார்.
இவருடைய டிவீட்-க்கு பலர் பதில் அளித்த நிலையில், கார்த்தி கொடுத்த சில பதில்களில் தங்களுடைய நிறுவனத்திற்கு இத்தனை பேர் ஆர்வம்காட்டியுள்ளது பெரும் மகிழ்ச்சி. கடந்க ஒரு மாதத்தில் பல்வேறு வேலைவாய்ப்புகளுக்கு சுமார் 13000 பேர் தங்களுடைய ரெஸ்யூம்-ஐ கொடுத்துள்ளனர்.
இந்த வேலைவாய்ப்புகளை தங்களுடைய நிறுவனம் எந்தொரு வேலைவாய்ப்பு தளத்திலும் அப்லோடு செய்யவில்லை, தற்போது சமர்ப்பிக்கப்பட்டு உள்ள 13000 ரெஸ்யூம்-ல் நேரடியாக பதிவு செய்யப்பட்டவர்கள் தான் அதிகம். Springworks தற்போது பட்டியலிட்டு உள்ள வேலைவாய்ப்பு நிரந்தரமாக வீட்டில் இருந்து பணியாற்றும் வேலைவாய்ப்பு.
Springworks சிஇஓ Kartik Mandaville தனது நிறுவன தளத்தில் தற்போது Product, Founders Office, SDE போன்ற பல பதவிகளில் வேலைவாய்ப்பு குறித்த பதிவை போட்டுள்ளார். இந்த பணிகளுக்காக தான் தற்போது ஒரு மாதத்தில் 13000 விண்ணப்பங்கள் குவிந்துள்ளது.
Springworks சிஇஓ Kartik Mandaville டிவிட்டர் பதிவுக்கு ஒருவர் பதில் அளித்த நிலையில், டெல்லியில் ஒரு நிறுவனத்தில் வெறும் 20 காலி வேலைவாய்ப்புக்கு சுமார் 700 பேர் இன்டர்வியூ-வில் கலந்துக்கொள்ள வந்திருந்தனர். இந்த வேலைவாய்ப்புக்கு வெறும் 2.5 லட்சம் ரூபாய் தான் சம்பளம், ஆனால் கூட்டம் அலைமோதுவதாக தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications