பெங்களூர் எலக்ட்ரானிக் சிட்டி மக்கள் அதிர்ச்சி.. Yellow Line மெட்ரோ சேவை வரும் முன் இப்படியா..?

பெங்களூரின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள எலக்ட்ரானிக் சிட்டி பகுதியில் மெட்ரோ ரயில் சேவை விரைவில் துவங்க உள்ள வேளையில் அதிரடியாக மெட்ரோ கட்டணத்தை உயர்த்தும் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. மஞ்சள் லைன் திட்டம் பல தாமதங்களை எதிர்கொண்டு செயல்பாட்டுக்கு வரும் வேளையில் இந்த கட்டண உயர்வு பெங்களூர் மக்களை குறிப்பாக எலக்ட்ரானிக் சிட்டி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

பெங்களூரு மெட்ரோவின் மஞ்சள் லைன் பொம்மசந்திரா டூ ஆர்.வி. சாலை வரையில் இணைக்கப்பட உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் பெங்களூரின் தெற்கு பகுதியில் வசிக்கும் மக்கள் மிகவும் எளிதாகவும் விரைவாகவும் பயணிக்க முடியும். பெங்களூரில் கேப் சேவைகளை ஒப்பிடும் போது மிகவும் மலிவான கட்டணத்தில் வேகமாக பயணிக்கும் வசதி மெட்ரோவில் கிடைக்கிறது.

பெங்களூர் எலக்ட்ரானிக் சிட்டி மக்கள் அதிர்ச்சி.. Yellow Line மெட்ரோ சேவை வரும் முன் இப்படியா..?


அனைத்திற்கும் மேலாக பெங்களூரின் தொழில்நுட்ப மையமான எலக்ட்ரானிக் சிட்டியை நகரின் பிற பகுதிகளுடன் இணைக்கும் காரணத்தால் அதிகப்படியான மக்கள் தினமும் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்ப்படுகிறது.

இந்த மாத துவக்கத்தில் மஞ்சள் லைனில் இயக்கப்படுவதற்கான முதல் ரயில் கொல்கத்தாவில் உள்ள டிட்டாகர் ரயில் சிஸ்டம்ஸ் தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட்டு பெங்களூருக்கு வந்தது. இந்த நிலையில் கட்டண உயர்வு அறிவிப்பு வந்துள்ளது. எலக்ட்ரானிக் சிட்டி மக்கள் அதிர்ச்சி அடையும் அளவுக்கு எவ்வளவு கட்டணம் உயரப்போகுது தெரியுமா..?


ஐடி நகரமான பெங்களூரின் சாலை போக்குவரத்து பிரச்சனையை தீர்க்கும் பொறுப்பை கொண்டுள்ள பெங்களூரு மெட்ரோ ரயில் கழகம் (BMRCL) விரைவில் தனது கட்டண உயர்வை அமல்படுத்த தயாராகி வருகிறது. கர்நாடக மாநிலம் முழுவதும் பேருந்து கட்டணம் சமீபத்தில் 15% உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, இயக்கச் செலவுகள் அதிகரித்துள்ளதைக் காரணம் காட்டி மெட்ரோ சேவை கட்டணத்தையும் BMRCL உயர்த்த உள்ளது.

BMRCL அமைப்பு 30 முதல் 40% வரை கட்டணத்தை உயர்த்தும் வாய்ப்புள்ளது. இந்த கணிசமான உயர்வு பயணிகளை பாதிப்பது மட்டும் அல்லாமல் மெட்ரோ சேவையை தினமும் பயன்படுத்தும் மக்கள் இந்த கட்டண உயர்வால் மலிவான மாற்று போக்குவரத்து சேவையை பயன்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


கர்நாடக அமைச்சரவை சமீபத்தில் அனைத்து வகையான பேருந்து கட்டணங்களிலும் 15% உயர்வை அங்கீகரித்தது. இந்த நடவடிக்கையால் மாநில அரசுக்கு மாதம் ரூ.74.85 கோடி மற்றும் ஆண்டுக்கு சுமார் ரூ.784 கோடி வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

BMRCL இன் இயக்குநர்கள் குழு கட்டண உயர்வு பரிந்துரைக்கு தங்களின் ஆரம்பக்கட்ட ஒப்புதலை வழங்கியுள்ளது. இருப்பினும், கட்டண உயர்வின் துல்லியமான விவரங்கள் மற்றும் அமலுக்கு வரும் தேதி ஆகியவை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இதேவேளையில் இந்த மாத இறுதியில் அமலாக்கம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த கட்டண உயர்வு மெட்ரோ-வின் இயக்கச் செலவுகளை ஈடுசெய்ய தேவை என்பதை BMRCL வலியுறுத்தினாலும், பயணிகள் இந்த உயர்வு தங்கள் பயணச் செலவுகளில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து கவலை தெரிவித்து வருகின்றனர்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+