பெங்களூரில் மட்டுமே நடக்கும் சில சம்பவங்கள் சமீபத்தில் சமூக வலைத்தளத்தில் டிரெண்டாகி வருகிறது, உதாரணமாக வீட்டில் ஏசி மாட்ட ஏணி கடன் கேட்டவர் ஒரு நிறுவனத்தின் சிஇஓ-வாக இருந்தது, வீட்டு ஓனர் வாடகைக்கு குடியிருப்பரின் ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் முதலீடு செய்வது, வாடகைக்கு வீடு தேடினால் லின்கிடுஇன் ப்ரொபைல் கேட்பது என பல சம்பவங்கள் அடுக்கிக்கொண்டே போகலாம்.
அந்த வகையில் வழக்கம் போல் பெங்களூரில் முக்கியமான டிராபிக் நேரத்தில் ரேபிடோ தளத்தில் பைக் டாக்சி புக் செய்து சென்ற Loveneesh Dhir என்பவருக்கு இப்படியொருவரை சந்திக்கப்போகிறோம், இவர் குறித்த போஸ்ட் டிவிட்டரில் டிரெண்டாகும் அவர் நினைத்திருக்க மாட்டார்.

Loveneesh Dhir எப்போதும் போல் ரேபிடோ பைக் டாக்சி புக் செய்தார். இந்த முறை அவருடைய ரைடராக ஸ்ரீநிவால் ராப்லு வந்துள்ளார், இவர் ஒரு ஜாவா டெவலப்பர் ஹெச்சிஎல் நிறுவனத்தில் பணியாற்றிக்கொண்டு இருந்தபோது இவர் பணியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார்.
இதனால் மாத வருமானத்திற்கு ஸ்ரீநிவாஸ் ராப்லு ரேபிடோ பைக் டாக்சி துவங்கியுள்ளார், இவருடைய மோசமான காலக்கட்டத்தை உணர்ந்த் Loveneesh Dhir அவருடைய ரெஸ்யூம்-ஐ வாங்கிக்கொண்டு டிவிட்டரில் இவருக்கு யாரேனும் உதவ முடியுமா என போஸ்ட் போட்டு உள்ளார்.

இவருடைய டிவீட் தற்போது 1,86,400 பேர் பார்த்துள்ளது மட்டும் அல்லாமல் 303 பேர் ரீடிவிட் செய்துள்ளனர். பலருக்கும் இதை போலியான பதிவு என கிண்டல் செய்த நிலையில் Loveneesh Dhir, ஸ்ரீனிவாஸ் உடனான வாட்ஸ்அப் ஸ்கிரீன்ஷாட் பதிவிட்டு உள்ளார், மேலும் அவருடைய ரெஸ்யூம்-ஐ கூகுள் டிரைவ்-ல் அப்லோடு செய்து பொதுவெளியில் ஷேர் செய்துள்ளார்.
இந்த பதிவு வைரல் ஆனது தொடர்ந்து பலர் ஸ்ரீநிவாஸ் ராப்லு-வுக்கு உதவ முன்வந்துள்ளது மட்டும் அல்லாமல் பலர் இந்த டிவீட்டை புக்மார்க் செய்து உள்ளனர். விரைவில் ஸ்ரீநிவாஸ் ராப்லு-க்கு தனது பிடித்தமான நிறுவனத்தில், தனக்கு பிடித்த வேலையை கிடைக்கும் என நம்புவோம். பெரு நகரங்களில் பல பிடித்த பட்டதாரிகள் மட்டும் அல்லாமல் வேலை இழந்து தவிக்கும் பலருக்கு இந்த ரேபிடோ பை டாக்ஸ், ஸ்விக்கு, சோமேட்டோ டெலிவரி என பல வேலைகளை செய்கின்றனர்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications