தென்னிந்தியாவின் முக்கிய பொருளாதார மாநிலமாக இருக்கும் கர்நாடகா அமெரிக்காவில் இருந்து முதலீட்டை ஈர்க்கும் நோக்கில் தொடர் கூட்டங்கள் நடந்து வருகிறது. கர்நாடகாவில் பெரிய மற்றும் நடுத்தர தொழில்கள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு அமைச்சரான எம்.பி. பாட்டீல் அமெரிக்க நிறுவனங்களிடம் இருந்து முதலீடுகளை ஈர்க்க முக்கிய தலைவர்களை சந்தித்து வருகிறார்.
அமெரிக்காவைச் சேர்ந்த செமிகண்டக்டர் சிப் உற்பத்தியாளர் அப்ளைடு மெட்டீரியல்ஸ் தற்போது கர்நாடகாவின் பெங்களூருவில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மையத்தை (R&D) அமைக்கும் பணிகளுக்காக கர்நாடக அரசு மற்றும் அரசு அமைப்பில் தேவையான அனுமதிகளை பெறும் பணியில் ஈடுபட்டுள்ளது.

கட்டிங் எட்ஜ் டெக்னாலஜி மற்றும் இன்னோவேஷன் ஹப் ஆக மாற வேண்டும் என்ற நோக்கில் கர்நாடக மாநிலம் தனது வளர்ச்சி பாதையை அமைத்து வரும் வேளையில் அப்ளைடு மெட்டீரியல்ஸ் மற்றும் ஜுனிப்பர் போன்ற முன்னணி நிறுவனங்கள் வருவது பெரும் முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.
அப்ளைடு மெட்டீரியல்ஸ் நிறுவனம் பெங்களூருவின் ஒயிட்ஃபீல்ட் பகுதியில் இன்னோவேஷன் சென்டர் மற்றும் ஆர்&டி ஆய்வகத்தை நிறுவும் பணியில் தீவிரமாக உள்ளது. மேலும் செமிகண்டக்டர் தயாரிப்புக்கு தேவையான ரசாயனங்கள் மற்றும் முக்கிய வாயுக்கள் போன்ற தேவையும், செமிகண்டக்டர் எகோசிஸ்டம் உருவாக்கும் பணிகளை துவங்க அரசு அதிகாரிகள் உடன் ஆலோசனை துவங்கியுள்ளது. அப்ளைடு மெட்டீரியல்ஸ் இதற்காக அடுத்த நான்கு ஆண்டுகளில் 400 மில்லியன் டாலர் முதலீட்டை செய்ய திட்டமிட்டு உள்ளது.
இதேவேளையில் சான் பிரான்சிஸ்கோ தலைமையிலான ஜினிப்பர் நெட்வொர்க்ஸ் கர்நாடகாவில் ஹார்ட்வேர் உற்பத்தி மற்றும் மேம்பட்ட R&D சென்டர் அமைக்கும் திட்டத்தை கையில் எடுத்துள்ளது. இந்தியாவில் நெட்வொர்க்கிங் சேவை வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் வேளையில் ஜினிப்பர் போன்ற நிறுவனங்கள் இந்தியாவில் உற்பத்தி தளத்தை அமைப்பது நெட்வொர்க்கிங் கருவிகள் விலை குறையும்.
ஜினிப்பர் நெட்வொர்க்ஸ் கர்நாடகாவில் ஏற்கனவே மிகப்பெரிய டேட்டா சென்டரை நிர்வாகம் செய்து வருகிறது, இதில் சுமார் 4000 பேர் பணியாற்றி வரும் வேளையில் புதிய உற்பத்தி மற்றும் R&D சென்டர் அமைப்பது மூலம் தனது இருப்பை பலப்படுத்துகிறது.
கர்நாடகா மாநில அரசு தற்போது அமெரிக்க நிறுவனங்களில் இருந்து முதலீட்டை ஈர்க்கும் திட்டத்தை கையில் எடுத்து பல முயற்சிகளை செய்து வருகிறது. புதிய ஆட்சியின் கீழ் கர்நாடகா மாநில வர்த்தகம், வரி வருவாய், புதிய முதலீடுகள் அதிகரிக்க துவங்கியுள்ளது.


Click it and Unblock the Notifications