பெங்களூர் வீட்டு ஓனர்கள் அட்டகாசம்.. ஏன் இப்படி..? வீடு தேடி போனால் அய்யய்யோ..!!

மெட்ரோ நகரங்களில் வாடகை வீடு தேடுவது எவ்வளவு சிக்கலான விஷயம் என்பது யாருக்கும் விவரிக்க தேவையில்லை வீடு அளவு, வாடகை, பார்க்கிங், தண்ணீர் பிரச்சனை, வீடு இருக்கும் ஏரியா என பல விஷயங்களை சமரசம் செய்துக்கொண்டு ஒரு வீட்டுக்கு சென்றால் வீட்டு ஓனருக்கும் நமக்கும் செட் ஆகாது.

எல்லாம் ஓகே ரொம்பவும் பிடித்துபோனால் வீட்டு ஓனர் ஏகப்பட்ட வாடகையை கேட்பார்கள். ஆனால் தற்போது வீட்டு ஓனர்களின் அட்டகாசம் எல்லையை கடந்து போய்கொண்டு இருக்கிறது, குறிப்பாக பெங்களூரில் இருக்கும் வீட்டு ஓனர்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

பெங்களூர் வீட்டு ஓனர்கள் அட்டகாசம்.. ஏன் இப்படி..? வீடு தேடி போனால் அய்யய்யோ..!!

வாடகைக்கு வீடு பெற வேண்டுமெனில் வேலை செய்யும் இடம் முதல் பேஸ்புக், லின்கிடுஇன் ப்ரொபைல் என பல விபரங்களை கேட்பது மட்டும் அல்லாமல் நாள் கணக்கில் காக்க வைத்து பல சுற்று இண்டர்வியூ வைத்த பின்பு தான் வீடு கிடைக்குமா கிடைக்காதா என கூறுகின்றனர். இதற்கு லேட்டஸ்ட் உதாரணம் ஸ்டார்ட்அப் நிறுவனமான Neeraj Menta-வின் டிவிட்டர் பதிவு.

பெங்களூர் வீட்டு ஓனர்களின் இந்த கடுமையான முறைக்கு என்ன காரணம்..? எதற்காக இந்த அட்டகாசம் நடக்கிறது..? பொதுவாக அதிக வாடகைக்கு தான் வீட்டு ஓனர்கள் ஆசைப்படுவார்கள், ஆனால் இந்த இண்டர்வியூ, தகவல் சேகரிப்பை பார்த்தால் அப்படி தெரியவில்லை.. ஏன் இந்த நிலை..? பெங்களூர் முழுவதும் இந்த பிரச்சனை இருக்கிறதா..?

பெங்களூர் - இந்தியாவின் மாபெரும் டெக் நகரம், இந்தியா முழுவதிலும் இருந்து மக்கள் பெங்களுருக்கு வருவதை தாண்டி தற்போது வெளிநாட்டவர்களும் இந்தியாவில் தொடங்கும் திட்டத்துடன் பெங்களூர்-க்கு வருகின்றனர். இதனால் பெங்களூரின் முக்கிய பகுதிகள், மையப் பகுதிகளில் இருக்கும் வீடுகளுக்கு வீட்டு ஓனர்களின் கெடுபிடி அதிகமாக உள்ளது.

Neeraj Menta-வின் டிவிட்டர் பதிவு-க்கு கீழ் பெங்களூரில் வீட்டு ஓனர்களின் கெடுப்பிடி குறித்த விளக்கத்தை கொடுத்துள்ளனர். இதில் coolg3r என்ற டிவிட்டர்வாசி, எங்களுடைய குடும்ப நண்பர் சில வருடங்களுக்கு முன்பு சரியாக Background-ஐ செக் செய்யாமல் வாடகைக்கு வீட்டை கொடுத்தார். அன்று முதல் இன்று வரையில் வாடகைக்கு வந்தவர் வாடகை கொடுக்காமலும், வீட்டை காலி செய்யாமலும் உள்ளார்.

இந்த பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டுமெனில் நீதிமன்றம், வழக்கு, போலீஸ் வழக்குகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என coolg3r டிவிட்டர்வாசி தெரிவித்தார். இதற்கு Neeraj Menta-ம் இப்போ புரிகிறது ஏன் வீட்டு ஓனர்கள் background செக் செய்யாமல் வீடுகளை வாடகைக்கு விடுவதில்லை என்று என தெரிவித்துள்ளார்.

இதேபோல் மற்றொருவர் இதேபோன்ற பிரச்சனையால் அமெரிக்காவில் இருக்கும் வீட்டு ஓனர் வீட்டில் குடியிருக்கும் நபரை காலி செய்ய வழக்கு தொடுத்த நிலையில் தற்போது வழக்கை எதிர்கொள்ள வருடத்திற்கு 3 முறை அமெரிக்காவில் இருந்து இந்தியா வந்து செல்கிறார் என தெரிவித்துள்ளார். இது மட்டும் அல்லாமல் பல இடத்தில் இப்படிப்பட்ட ஆட்கள் பல வருடங்களாக அதே வீட்டில் தங்கியிருக்கும் வேளையில் வீட்டை சொந்தம் கொண்டாட திட்டமிடுகின்றனர்.

பெங்களூர் வீட்டு ஓனர்கள் அட்டகாசம்.. ஏன் இப்படி..? வீடு தேடி போனால் அய்யய்யோ..!!

இதேபோல் எனிட் ஜூடித் டிசோசா என்ற பெண் செய்த பதிவில் விசாகப்பட்டினத்தில் நான் வாடகைக்கு இருக்கும் வீட்டின் உரிமையாளர் எங்களின் வங்கி ஸ்டேட்மென்ட் மற்றும் சேலரி ஸ்லிப் ஆகியவற்றை கேட்டதாகவும், நிறுவன ஐடியையும், ஆவணங்கள் நிறுவனத்தின் மின்னஞ்சல் ஐடி வழியாக அனுப்பப்பட வேண்டும் என உறுகியாக கூறினார் என தெரிவித்துள்ளார்.

இப்படி ஒவ்வொரு வீட்டு ஓனர்களும் தங்களுடைய வீட்டு வாடகை சரியான முறையில் பெற முடியுமா என்பதை உறுதி செய்ய பல்வேறு முறையை கையாண்டு வருகின்றனர். குறிப்பாக பெங்களூரில் HSR Layout, கோரமங்களா, ஆடம்பர அப்பார்ட்மென்ட் போன்ற முக்கியமான பகுதியில் இருக்கும் வீடுகளுக்கு அதிகப்படியான வாடகை கேட்பது மட்டும் அல்லாமல் அதிகப்படியான கேள்விகள் கேட்பது, இதை ஒரு நிறுவவனத்தின் இண்டர்வியூ போலவே நடத்துகின்றனர்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+