இந்தியாவின் சிலிக்கான் வேலி என அழைக்கப்படும் பெங்ளூரில் பல டெக் மற்றும் ஐடி சேவை நிறுவனங்கள் இருந்தாலும் உற்பத்தி துறை சார்ந்த நிறுவனங்களும், உற்பத்தி சார்ந்த பொருளாதாரத்தில் அதன் பங்கீடும் மிகவும் குறைவு. இப்படியிருக்கையில் கடந்த 5 வருடமாக தமிழ்நாட்டுக்கு போட்டியாக உற்பத்தி துறையில் அதிகப்படியான நிறுவனங்களை ஈர்த்து வருகிறது.
இன்று தைவான் நாட்டின் பாக்ஸ்கான் இன்டஸ்ட்ரியல் இன்டர்நெட் நிறுவனத்தின் உயர்மட்ட அதிகாரிகள் அடங்கிய குழு, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து பேச உள்ளதாக செய்திகள் வெளியானது. இந்த சந்திப்பு மூலம் தமிழ்நாட்டில் பெங்களூரில் அறிவித்தது போலவே புதிய முதலீடுகள் தொடர்பாக இருக்க வாய்ப்புகள் உள்ளது.

பாக்ஸ்கான் சில மாதங்களுக்கு முன்பு சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் சுமார் 300 ஏக்கரில் பெரும் தொழிற்சாலையை அமைக்க முடிவு செய்து அதற்கான நில பகிர்வு, கட்டுமான பணிகளை துவங்கும் வேளையில் உள்ளது. இந்த நிலையில் சற்றும் எதிர்பாராமல் பாக்ஸ்கான் கர்நாடகாவில் தனது 2வது தொழிற்சாலை அமைப்பது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பாக்ஸ்கான் நிறுவனம் கர்நாடகாவின் தும்கூர் (Tumkur) பகுதியில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் 8800 கோடி ரூபாய் முதலீட்டில் 2வது தொழிற்சாலை அமைக்க உள்ளது. இதற்காக கர்நாடக முதல்வர், ஐடி துறை அமைச்சர் ஆகியோரை FII நிறுவனத்தின் சிஇஓ செங்க் சந்தித்து ஒப்பந்தம் கையெழுத்தானது. எதற்காக இந்த 2வது தொழிற்சாலை..?
பாக்ஸ்கான் தும்கூரில் அமைக்கப்படும் தொழிற்சாலையில் ஐபோனுக்கான ஸ்கிரீன் மற்றும் ஸ்கிரீனுக்கான வெளிப்புற மெக்கானிக்கல் பகுதிகள் தயாரிக்கப்படும் என தி ஹிந்து தெரிவித்துள்ளது. பெங்களூர் தேவனஹல்லி பகுதியில் அமைக்கப்படும் தொழிற்சாலை 13,500 கோடி ரூபாய் முதலீடிலும், தும்கூர் தொழிற்சாலை 8800 கோடி ரூபாய் முதலீட்டிலும் அமைக்க உள்ளது பாக்ஸ்கான்.

மேலும் பெங்களூர் தொழிற்சாலைக்கு துணை தொழிற்சாலையாக தும்கூர் தொழிற்சாலையாக இருக்கும், இக்கூட்டணி தொழிற்சாலை இந்தியாவில் இருந்து பாக்ஸ்கான் ஐபோன்ற தயாரிப்பு மற்றும் ஏற்றுமதி 2 மடங்கு வளர்ச்சியை அளிக்கும் என கணிக்கப்படுகிறது.
பாக்ஸ்கான் - வேதாந்தா கூட்டணி இந்தியாவில் டிஸ்பிளே கிளாஸ் மற்றும் செமிகண்டக்டர் தொழிற்சாலை அமைக்க கூட்டணி வைத்தது. இக்கூட்டணி தோல்வியில் முடிந்தது. டிஸ்பிளே கிளாஸ் தொழிற்சாலையும், ஐபோனுக்கான ஸ்கிரீன் அசம்பிளி தொழிற்சாலையும் வெவ்வேறு என தெரிகிறது.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!



Click it and Unblock the Notifications