சில காலமாக இளம் ஊழியர்கள் வேலை அழுத்தத்தின் காரணமாக வேலையை விடும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. அதோடு தாங்கள் பணிபுரிந்த நிறுவனங்களில் எந்தெந்த விஷயங்களில் பிரச்சனை இருந்தது என்பது குறித்தும் சிலர் அவ்வப்போது தங்களுடைய சோசியல் மீடியா பக்கங்களில் பகிர்ந்து கொள்கின்றனர். அப்படித்தான் இன்போசிஸ் நிறுவனத்தில் பணிபுரிந்த ஒருவர் ரெட்டிட்டில் ஒரு பதிவை பகிர்ந்துள்ளார்.
பெங்களூரைச் சேர்ந்த அந்த நபர் இன்ஃபோசிஸில் பணிபுரிந்த போது தனது கடந்த கால அனுபவம் கசப்பாக இருந்ததாகத் தெரிவித்துள்ளார். அவருடைய பதிவின்படி அவர் இன்ஃபோசிஸில் 9 ஆண்டுகள் பணியாற்றினார் என்பது தெரிகிறது. ஐடி நிறுவனத்தில் தனது நேரத்தை நினைவு கூர்ந்து அந்த நபர் தான் பணியாற்றியதை சங்கிலி இல்லாத அடிமைத்தனம் என விவரித்திருந்தார்.

தனது ரெட்டிட் பதிவில், "இன்போசிஸ் எனது 9 ஆண்டுகால சங்கிலியில்லாத அடிமைத்தன அனுபவம் "என்று பதிவிட்டிருந்தார். இவர் 2008-ஆம் ஆண்டு முதல் 2017-ஆம் ஆண்டு வரையில் இந்நிறுவனத்தில் பணிபுரிந்துள்ளார். ஆனால் நிறுவனத்தை விட்டு வெளியேறிய பிறகு தான் இன்போசிஸ் நிறுவனத்தில் தனக்கு கிடைக்காத சலுகைகள் குறித்து உணரத் தொடங்கியுள்ளார். இவருடைய பதிவு விரைவில் பலராலும் பகிரப்பட்டது.
சமீபத்தில் இன்போசிஸ் நிறுவனத்தின் நிறுவனர் நாராயண மூர்த்தி வாரத்திற்கு 70 நாள் வேலை செய்ய வேண்டும் என்ற கருத்தை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தினார். எனவே இந்த நபரின் போஸ்டுக்கு பலரும் இவருடைய கருத்தை முன்வைத்து கமெண்ட் செய்ய தொடங்கினர்.
பணிபுரிந்த ஊழியரின் பதிவுக்கு ஒரு பயனர் 9 ஆண்டுகளுக்கு வெறும் ரூ.35,000 சம்பாதிப்பது மிகவும் குறைவு. இதை வைத்து 70 மணி நேரம் வேலை செய்ய சொல்லும் நாராயணமூர்த்தி துணிச்சல் கொண்டவர் என்று கமெண்ட் செய்திருந்தார். உங்களுடைய பதிவு என்னை சிறந்த வாய்ப்புகளைத் தேடத் தூண்டியுள்ளது. ஆனால் இந்நிறுவனத்தை விட்டு வெளியேற நீங்கள் ஏன் இவ்வளவு நாள் எடுத்துக் கொண்டீர்கள்? என்று ஒரு பயனர் கேள்வி எழுப்பியிருந்தார்.
இன்போசிஸ் நிறுவனம் தனது நிதிநிலை அறிக்கையை அறிவித்த பிறகு 5 முதல் 6 சதவீதம் வரை ஊதிய உயர்வு வழங்க இருப்பதாக தெரிவித்திருக்கிறது. முதல் கட்ட சம்பள உயர்வு இந்த மாதமும், இரண்டாம் கட்ட சம்பள உயர்வு ஏப்ரல் மாதமும் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்தியாவில் 6 முதல் 8 சதவீதம் வரை இன்ஃபோசிஸ் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு இருக்கும் என்று இன்ஃபோசிஸின் தலைமை நிதி அதிகாரியான ஜெயேஷ் சங்கராஜ்கா தெரிவித்திருக்கிறார். 2025-ஆம் நிதி ஆண்டிற்கான மூன்றாம் காலாண்டு முடிவுகளை அறிவித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் இந்த விவரங்களை தெரிவித்துள்ளார்.
முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் இந்நிறுவனத்தில் 3.23 லட்சத்திற்கும் அதிகமான பணியாளர்கள் பணியமர்த்தப்படுகின்றனர். இந்த ஐடி ஜாம்பவான் கடந்த 2023-ஆம் ஆண்டின் நவம்பர் மாதம் சம்பள உயர்வை அறிவித்தது. அதன் பிறகு தற்போது அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!



Click it and Unblock the Notifications