பெரு நகரங்களில் வாழ்வது ஒரு பக்கம் நாளுக்கு நாள் கடினமாகி வந்தாலும், மறுபுறம் நமக்கு பிடித்தமான வீடு, சரியான ரூம்மேட் கிடைப்பதெல்லாம் ரொம்ப பெரிய விஷயம். இந்த நிலையில் பெங்களூரில் ஒருவர் புதிய ரூம்மேட் தேடுவது மட்டும் அல்லாமல் லட்டு மாதிரி ஒரு வாய்ப்பையும் கொடுத்துள்ளார். இதன் மூலம் கோடி கணக்கில் பணம் சம்பாதிக்கவும் வழி உண்டு.
சமூக வலைத்தளத்தில் தினமும் பல கோடி பதிவுகள் செய்யப்படுகிறது, அதில் சில நூறு மட்டுமே பார்க்கிறோம். இதில் ஒரு சில போஸ்ட் மட்டும் தான் டிரென்டாகும். அப்படிப்பட்ட போஸ்ட் தான் இது.

இரண்டு ஸ்டார்ட்அப் நிறுவனங்களை உருவாக்கியுள்ள Sankeerth என்பவர் டிவிட்டரில் தான் குடியிருக்கும் வீட்டில் தன்னுடன் தங்க ஒரு பிளாட்மேட்-ஐ தேடுவதாக போஸ்ட் போட்டு இருந்தார். அவர் தங்கியிருக்கும் வீடு பெங்களூரில் முக்கிய பகுதிகளில் ஒன்றான Banerghatta சாலையில் கேட்டெட் கம்யூனிடி-யில் ஜிம், ஸ்விம்மிங் ஃபுல், செல்ல பிராணியாக நாய், மீன், பசுமையான பகுதியில் அமைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஜூலை முதல் தனது வீட்டில் தங்க ஒரு பிளாட்மேட் வேண்டும் என்றும், மாதம் 8300 ரூபாய் வாடகை என்றும் அறிவித்திருந்தார். இதில் என்ன இருக்கிறது என்றால் முக்கியமான விஷயம் இருக்கிறது, இவருடைய பதிவில் பிளாட்மேட் தன்னுடைய Vibe-க்கு செட்டாகும் பட்சத்தில் தனது ஸ்டார்ட்அப்-ல் Co-Founder ஆகும் வாய்ப்பும் உண்டு என அறிவித்திருந்தார்.
இந்த போஸ்ட் வைரலான நிலையில் பீக் பெங்களூர் ரீடிவிட் செய்த போது, ஒரு சிறப்பான Coder கிடைத்தால் என்னுடைய ஸ்விம்மிங் ஃபுல் பார்வை கொண்ட ரூம்-ஐ அவருக்கு கொடுக்கவும் தயார் என தெரிவித்துள்ளார்.
I will trade my pool facing room with balcony if i get a coder 🥺😅
— Sankeerth (@trippy_hustler) June 28, 2023
பெங்களூரில் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் உருவாக்குவது என்பது தற்போது பள்ளி மாணவர்கள் முதல் பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் வரையில் செய்கிறார்கள், இப்படியிருக்கும் சூழ்நிலையில் அதை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்வதிலும், முதலீட்டை பெறுவதிலும் தான் பெரிய சவால்கள் உள்ளது. இப்படிப்பட்ட கட்டத்தில் தான் Sankeerth உள்ளார்.
தனது ஸ்டார்ட்அப் ஐடியாவை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்லும் முயற்சியுடன், பிளாட்மேட்-ஐ தேடும் பணியை இணைத்துள்ளார். இது இளம் டெக் வல்லுனர்கள் மத்தியில் பெரிய அளவிலான வரவேற்பு பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications