பெங்களூரு கப்பன் பார்க் மெட்ரோ ஸ்டேஷன் அருகே உள்ள மின்ஸ்க் ஸ்கொயர் பகுதியில் ஒரு சிவப்பு நிற டெஸ்லா எக்ஸ் மாடல் கார் பரபரப்பைக் கிளப்பியபடி சென்றது. டெஸ்லா நிறுவனத்தின் ஸ்போர்ட்ஸ் யுடிலிட்டி மாடல் காரான டெஸ்லா எக்ஸ் சென்றதைப் பார்த்தவர்கள் அதைப் படம் பிடித்து சோசியல் மீடியாவில் பகிர்ந்தனர். இந்தப் படங்கள் எல்லாம் செமயாக வைரலாகின.
கப்பன் பார்க் அருகேயுள்ள மின்ஸ் ஸ்கொயர் பகுதியில் சிவப்பு நிற டெஸ்லா கார் ஒன்று டிராபிக் சிக்னலில் நின்று கொண்டிருந்தபோது ஒரு படம் எடுக்கப்பட்டுள்ளது. பின்னர் அந்த கார் வேகமெடுத்து போகையில் மற்றொரு படம் எடுக்கப்பட்டது. இந்த இரண்டு படங்களும் இப்போது சமூக தளங்களில் பகிரப்பட்டு பயங்கரமாக வைரலாகி வருகின்றன.

இந்தப் பதிவுக்கு ஏராளமானவர்கள் ரீடுவீட் செய்துள்ளனர். நிறைய பேர் கமெண்ட்களை பதிவிட்டுள்ளனர். சிலர் இந்தக் கார் ஒரு டெஸ்ட் டிரைவ்வுக்காக வந்திருக்காது. அந்தக் காரில் துபாய் நம்பர் பிளேட் பொருத்தப் பட்டிருந்தது என்று சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஒரு இணையவாசி இது டெஸ்ட் டிரைவ் அல்ல. யாரோ ஒருவர் அபிஷியல் விசிட்டாக இந்த துபாய் காரை ஓட்டிச் சென்றுள்ளனர். இதற்கு குறிப்பிட்ட காலம் மட்டுமே அனுமதி இருக்கும். இது யாரோ தனியாருக்குச் சொந்தமான காராக இருக்கும். அதில் துபாய் நம்பர் பிளேட் பொருத்தப்பட்டிருந்தது எனக் குறிப்பிட்டுள்ளார்.
மற்றொரு இணையவாசி இதேபோல மற்றொரு காரை சிலநாட்களுக்கு முன்னர் பார்த்தவர்கள் விடியோ பகிர்ந்துள்ளனர் எனக் கூறியுள்ளார். மற்றொருவர் இதே காரை நான் கோரமங்களாவில் சில நாட்களுக்கு முன்பு பார்த்தேன். அது ஒரு தனியாருக்குச் சொந்தமான காராகும். இந்த டெஸ்லா கார் கடந்த சில நாட்களாக பெங்களூரில் உலாவி வருகிறது எனப் பதிவிட்டுள்ளார்.
2021 ஆம் ஆண்டில் டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் ஒரு கார் தயாரிப்பு தொழிற்சாலை மற்றும் ரிசர்ச் அண்டு டெவலப்மென்ட் பிரிவை தொடங்கியது. டெஸ்லா இந்தியா மோட்டார்ஸ் அண்டு எனர்ஜி பிரைவேட் லிமிடெட் என்று இந்தப் பிரிவுக்குப் பெயரிடப்பட்டது. பெங்களூரில் இந்த நிறுவனம் அமைந்துள்ளது.
வைபவ் தனேஜா, வெங்கட்ரங்கம் ஸ்ரீராம், டேவிட் ஜான் ஃபெயின்ஸ்டைன் ஆகியோர் இதன் இயக்குநர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய கார்ப்பொரேட் விவகாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications