இதெல்லாம் பெங்களூரில் மட்டும் தாங்க நடக்கும்.. கொட்டு அடிப்பவர் கையில் டெக்னாலஜி..!

ஒட்டுமொத்த பெங்களூரும் நாளை பந்த் என்பதால் மிகவும் பரபரப்பாக இருக்கிறது, பள்ளி, கல்லூரி, ஐடி அலுவலகம் என அனைத்தும் மூடப்படும் வேளையில் தனியார் நிறுவனங்களின் ஊழியர்கள் அனைவரும் வெர்க் ப்ரம் ஹோம் அளிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவின் டெக் ஹப் ஆக இருக்கும் பெங்களூரில் தான் அனைத்து புதிய சேவைகளும், டிஜிட்டல் சேவைகளும் அறிமுகம் செய்யப்படும்.

அப்படி பெங்களூரில் மத்திய அரசால் அறிமுகம் செய்யப்பட்ட யூபிஐ பேமெண்ட் தற்போது நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு வேகமாகவும், அனைத்து மட்டத்திலும் மக்களின் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. பெங்களூரில் ஸ்டார்பக்ஸ் காஃபி ஷாப் முதல் சாலையோர கடைகள் வரையில் யூபிஐ வந்துள்ளது.

இதெல்லாம் பெங்களூரில் மட்டும் தாங்க நடக்கும்.. கொட்டு அடிப்பவர் கையில் டெக்னாலஜி..!

இதற்கு அடுத்தக்கட்டமாக சமீபத்தில் பெங்களூரில் கொட்டு அடிப்பவர் ஒருவர் சாலையில் மோளம் அடித்துக்கொண்டு பணம் கேட்ட போது அவருடைய மோளத்தின் மீது போனில் யூபிஐ QR ஸ்கேனிங் கோட் வைத்துக்கொண்டு பணம் கேட்டு வந்த போட்டோ பெரிய அளவில் டிவிட்டரில் பேசப்பட்டு வருகிறது.

யூபிஐ வந்த பின்பு மக்கள் கைகளில் பணம் இருப்பதே பெரிய அளவில் குறைந்துள்ளது, பலரின் கையில் 500 ரூபாய்க்கும் குறைவான பணம் மட்டுமே உள்ளது. 10 ரூபாய்க்கு டீ குடித்தால் கூட கடைக்காரர் யூபிஐ-யில் பணத்தை செலுத்த கோருகிறார், காரணம் சில்லரை இல்லாதது தான். இப்போதெல்லாம் 200 ரூபாய் கொடுத்து பொருள் வாங்கினால் கூட சில்லறை கொடுக்க கடைக்காரர்கள் தடுமாறுவது அதிகம் பார்க்க முடிகிறது.

இதெல்லாம் பெங்களூரில் மட்டும் தாங்க நடக்கும்.. கொட்டு அடிப்பவர் கையில் டெக்னாலஜி..!

கொட்டு அடிப்பவர் கையில் ஸ்மார்ட்போன், அதில் யூபிஐ, வங்கி கணக்கு என வங்கி சேவைகள் அனைத்தையும் ஆன்லைனில் பயன்படுத்தும் அளவுக்கு பெங்களூரில் இருப்பவர்கள் டெக்லானஜியை பயன்படுத்த துவங்கியுள்ளனர்.

இது மட்டும் அல்லாமல் மதுரைகாரன் எப்படி ஸ்பெஷலோ அதேபோல பெங்களூர் மக்களும் ஸ்பெஷல். இரண்டு நாட்களுக்கு முன்பு அனுஜ் என்பவர் பெங்களூர் ஆட்டோவில் பயணித்த போது ஆட்டோ ஓட்டுநர் ஆபீஸ் சேர் போட்டு ஆட்டோவை இயக்கிய போட்டோ டிரெண்டானது. பலர் லம்பார் சப்போர்ட்டு-க்காக இதை செய்திருப்பார் என பலர் கூறியுள்ளனர். பெங்களூர்காரனும் கொஞ்சம் ஸ்பெஷல் தான்ப்பா..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+