பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் பெங்களூரு அரண்மனை மைதானம் தொடர்பாக கர்நாடக அரசுக்கும் மைசூர் அரசு குடும்பத்தினருக்கும் இடையே பல ஆண்டுகளாக பிரச்சினை நீடித்து வருகிறது. ஏன் இந்த பிரச்சினை ஏற்பட்டது, இந்த மைதானம் யாருக்கு தான் சொந்தம் என்பதை பார்க்கலாம்.
பெங்களூருவின் மையப்பகுதியில் அமைந்திருக்கு அமைந்திருக்கிறது 19 ஆவது நூற்றாண்டில் கட்டப்பட்ட பெங்களூரு அரண்மனை. 472.16 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த பெங்களூரு அரண்மனை மற்றும் அதனை சுற்றியுள்ள மைதானம் யாருக்கு சொந்தமானது என்பது குறித்து கர்நாடக அரசுக்கும் மைசூர் மன்னர் குடும்பத்தினருக்கும் இடையே தொடர்ந்து சச்சரவு நீடித்து வருகிறது.

1996 ஆம் ஆண்டு பெங்களூரு அரண்மனை கையகப்படுத்துதல் மற்றும் பரிமாற்ற மசோதா கர்நாடக மாநிலத்தில் நிறைவேற்றப்பட்டது. வரலாற்று ரீதியாகவும் கட்டிடக்கலை ரீதியாகவும் சிறப்பு பெற்ற இந்த பெங்களூரு அரண்மனையை தொடர்ந்து அப்படியே பராமரிக்க வேண்டும் என அந்த சட்டம் குறிப்பிட்டது.
மாளிகையை சுற்றியுள்ள பகுதிகளை பொது நிகழ்ச்சிகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என அந்த சட்டம் கூறியது. அரசு இந்த அரண்மனையை சுற்றியுள்ள பகுதியில் தோட்டங்களை அமைப்பது பூங்காவை நிறுவுவது என ஒரு பசுமையான பகுதியாக இதனை பராமரிக்க வேண்டும் என திட்டமிட்டது.
அரசு அந்த மாளிகையை கையகப்படுத்தியதற்கு நஷ்ட ஈடாக மைசூர் மன்னர் குடும்பத்தினருக்கு 11 கோடி ரூபாய் வழங்கப்படும் என அப்போது தெரிவிக்கப்பட்டது. இந்த சட்டத்தை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டபோது கர்நாடக உயர் நீதிமன்றம் அரசுக்கு சாதகமான தீர்ப்பையே வழங்கியது. இதனை அடுத்து மைசூர் மன்னர் குடும்பத்தினர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இதனிடையே 1999 ஆம் ஆண்டு பெங்களூரு மாநகராட்சி நிர்வாகம் பெங்களூரு அரண்மனை மைதானத்திற்கு உட்பட்ட 13,000 சதுர மீட்டர் இடத்தை வாங்கி அருகில் இருக்கும் சாலையை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டது.
இதனிடையே மைசூர் மன்னர் குடும்பத்தினர் பெங்களுரு மாநகராட்சிக்கு எதிராக 2014 ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அப்போது உச்ச நீதிமன்றம் அந்தப் பகுதியில் பெங்களூரு மாநகராட்சி நிர்வாகம் நகரத்திற்கு தேவையான மேம்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் அதற்கான நிகரான இழப்பீட்டை மனுதாரர்களுக்கு டிடிஆர் என்ற பிரிவின் கீழ் கணக்கீடு செய்து வழங்க வேண்டும் என அறிவித்தது.
பெங்களூரு மாநகராட்சி நிர்வாகம் 1996 ஆம் ஆண்டு பெங்களூரு அரண்மனை கையகப்படுத்துதல் சட்டத்தின்படி இந்த இடத்திற்கு 11 கோடி ரூபாய் தான் இழப்பீடு வருகிறது, ஆனால் இந்த டிடிஆர் சட்டத்தின் கீழ் இழப்பீடு கணக்கீடு செய்தால் 1396 கோடி ரூபாயை வழங்க வேண்டி இருக்கிறது என கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதியது.
இதனை அடுத்து கர்நாடகா அரசு உச்சநீதிமன்றத்தில் ஒரு இடைக்கால மனுவை தாக்கல் செய்தது. அதன்படி 1996 ஆம் ஆண்டு பெங்களூரு மாளிகை கையகப்படுத்துதல் சட்டத்தின்படி இந்த நிலத்திற்கு 37.28 லட்சம் ரூபாய் மட்டுமே இழப்பீடாக வழங்க முடியும் என கூறியது.
இந்த நிலையில் உச்ச நீதிமன்றம் கடந்த டிசம்பர் மாதம் அளித்த உத்தரவில் மைசூர் மன்னர் குடும்பத்தினருக்கு டிடிஆர் சட்டத்தின்படி குறிப்பிட்ட 15 ஏக்கர் அளவிலான நிலத்திற்கு அரசு 3,000 கோடி ரூபாய் இழப்பீட்டினை வழங்கி விட வேண்டும் என உத்தரவிட்டது. இந்த நிலையில் தான் கர்நாடக அரசு திடீரென ஒரு அவசர சட்டத்தை கொண்டு வந்திருக்கிறது.
இதன்படி பெங்களூரு அரண்மனை நில பயன்பாடு அவசர சட்டம் என்ற பெயரில் கொண்டு வரப்பட்டுள்ள இந்த சட்டத்தில் பெங்களூரு அரண்மனைக்கு உட்பட்ட பகுதியில் இருக்கும் நிலத்தை அரசு பயன்படுத்தாது என்றும் டிடிஆர் சட்டத்தின் படி இழப்பீடு வழங்கப்படும் என்ற வாக்குறுதியை திரும்ப பெறுவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் 3,000 கோடி ரூபாயை மிச்சப்படுத்த அரசு முயற்சி செய்துள்ளது. இதனை மைசூர் மன்னர் குடும்ப வாரிசுகள் எப்படி எதிர்கொள்ள போகின்றனர் என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications