பெங்களூரு: பெங்களூரு நகரம் இந்தியாவிலேயே வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் ஒரு நகரமாக இருக்கிறது. அந்த வளர்ச்சிக்கு ஏற்ற வகையில் மக்கள் தொகை மற்றும் போக்குவரத்து நெரிசல் ஆகியவையும் அதிகரித்து வருகின்றன.
பெரும்பாலும் பெங்களூருவுக்கு விமானத்தில் செல்பவர்கள் அல்லது விமான பயணம் மேற்கொள்பவர்கள் கூறும் குற்றச்சாட்டு பெங்களூர் விமான நிலையத்திலிருந்து நகரத்திற்கும் நகரத்தில் இருந்து விமான நிலையத்திற்கும் செல்வதற்கு பல மணி நேரங்கள் ஆகிறது என்பதுதான்.

பெங்களூரு விமான நிலையத்திலிருந்து நகரத்திற்கு செல்வதற்கு ஆயிரக்கணக்கில் வாடகை கார்களில் கட்டணம் செலுத்த வேண்டி இருக்கிறது விமான டிக்கெட்டை விட இது அதிகமாக இருக்கிறது என சமூக வலைத்தளங்களில் பலரும் புலம்புவதை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் இனி பெங்களூருவாசிகள் ஐந்து நிமிடங்களில் விமான நிலையத்தை சென்று அடைந்து விடலாம். அப்படி ஒரு சூப்பரான திட்டத்தை தான் பெங்களூரு சர்வதேச விமான நிலையம் கொண்டுவர இருக்கிறது.
பெங்களூர் இன்டர்நேஷனல் ஏர்போர்ட் லிமிடெட் நிறுவனமும் , சார்லா ஏவியேஷன் நிறுவனமும் இணைந்து ஒரு புதிய முயற்சியை மேற்கொள்ள இருக்கின்றன. இதன்படி பெங்களூர் நகரப் பகுதியில் இருந்து வான் வழியாக விமான நிலையத்தை சென்றடைய முடியும். சாலை வழியாக விமான நிலையத்திற்கு செல்ல ஒன்றரை மணி நேரம் ஆகிறது என்றால் சிறிய விமானங்களை இயக்கி அதன் மூலம் விமான நிலையத்திற்கு செல்லும் போது ஐந்தே நிமிடங்களில் விமான நிலையத்தை அடைந்து விடலாம் என சொல்லப்படுகிறது.
தற்போது எலக்ட்ரானிக் சிட்டியில் இருந்து பெங்களூரு விமான நிலையத்திற்கு செல்ல வேண்டும் என்றால் சாலை மார்க்கமாக செல்லும்போது குறைந்தது 152 நிமிடங்கள் ஆகும் அதுவே இந்த சிறிய ரக விமானத்தை பயன்படுத்தினால் 20 நிமிடங்களிலேயே விமான நிலையத்திற்கு சென்று விட முடியும். இதற்காக மின்சாரத்தால் இயங்கக்கூடிய ஏழு இருக்கைகள் கொண்ட சிறிய ரக விமானமான eVTOL-ஐ பயன்படுத்த உள்ளனர்.
இதற்காக பெங்களூர் சர்வதேச விமான நிலைய நிறுவனமும் சார்லா ஏவியேஷன் நிறுவனமும் இணைந்து புதிய ஒப்பந்தத்தை மேற்கொண்டு இருக்கின்றன. இதன் அடிப்படையில் இந்தியாவிலேயே முதன்முறையாக பெங்களூருவில் தான் மின்சாரத்தில் இயங்கக்கூடிய சிறிய ரக விமானம் புறப்படுவது மற்றும் தரை இறங்குவதற்கான வசதிகள் செய்யப்பட உள்ளன .
இந்த eVTOL டெக்னாலஜி முழுக்க முழுக்க மின்சாரத்திலேயே செயல்படக்கூடிய ஒரு சிறிய ரக விமானம் ஆகும். ஹெலிகாப்டர்களை போலவே இதுவும் வெர்டிகல் முறையில் டேக் ஆப் மற்றும் லேண்டிங் செய்யும் திறன் கொண்டது.
போக்குவரத்து நெரிசல் என்ற பெரிய தலைவலியில் இருந்து மக்கள் தப்பிக்க முடியும். இது தொடர்பாக சார்லா ஏவியேஷன் நிறுவனத்தின் இணையதளம் வெளியிட்டுள்ள தகவலின் படி பார்த்தால் இந்த eVTOL விமானம் ஒரு குறிப்பிட்ட நகரத்திற்குள் 20 முதல் 40 கிலோமீட்டர் தொலைவிற்குள் இயக்கப்படும் என சொல்லப்படுகிறது. இது ஒரு மணி நேரத்தில் 250 கிமீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டதாம்.
இந்த சிறிய ரக விமானம் மூலம் பல மணி நேர பயணங்களையும் சில நிமிடங்களுக்குள்ளாகவே நம்மால் சுருக்கி விட முடியும். ஒரு விமானியும் ஆறு பயணிகளும் அவர்களுடைய லக்கேஜ்களுடன் பயணம் செய்யலாம் .15 நிமிடங்களுக்கு சார்ஜ் செய்தாலே அடுத்தடுத்து 40 கிலோ மீட்டர் தொலைவிற்கு பறக்கும் திறன் கொண்டது இந்த விமானம்.
More From GoodReturns

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!



Click it and Unblock the Notifications