உலகில் எத்தனையோ வித்தியசாமான உணவகங்களை பற்றி கேள்விப்பட்டிருப்போம். நெடுஞ்சாலைகளில் பயணித்தவர்களுக்கு பல அனுபவங்கள் இருக்கும். குறிப்பாக உணவு விஷயத்தில் உணர்வு பூர்வமான சில அனுபவங்கள் உண்டு. நாம் பெரும்பாலும் வெளியிடங்களுக்கு பயணம் செய்யும் பொழுது தங்குவதற்காக ஹோட்டல் அறைகளை புக் செய்வதுண்டு. ஆனால், உலகில் உள்ள சில வித்தியாசமான ஹோட்டல் அறையை அங்கிருக்கும் அழகினை ரசிப்பதற்காகவே பிரத்தியேகமாக மக்கள் புக் செய்து தங்குகிறார்கள் என்று சொன்னால் நம்பமுடிகிறதா?
அந்தவகையில், விமான உணவகத்தை பற்றி கேள்விபட்டால் நீங்கள் ஆச்சரியத்தின் உச்சிக்கே செல்லலாம். விமானத்தில் பயணிக்கும் பயணிகளுக்கு விமான பணிப்பெண்கள் உணவு பொருட்கள் வழங்கி உபசரிப்பது வழக்கம். அதே போன்ற சூழலில் ஓட்டலுக்கு சாப்பிட வருபவர்களை உபசரிக்கும் உணவகம் கர்நாடக மாநிலம், பெங்களூருவில் தொடங்கப்பட்டுள்ளது. பெங்களூரின் மிகவும் ஆற்றல் வாய்ந்த வழித்தடங்களில் ஒன்றான பன்னர்கட்டா சாலையில் இந்த விமான உணவகம் செயல்பட்டு வருகிறது.

இந்த விமான உணவகத்திற்கு "Tiger Aero Restaurant" என்று பெயரிடப்பட்டுள்ளது. இங்கு அதிகளவில் வாடிக்கையாளர்கள் வந்து செல்கின்றனர். இந்த உணவகம், விமானத்தின் உள்புற தோற்றம் எப்படி இருக்குமோ அதே மாதிரியில் கட்டமைப்பை நிறுவி இருக்கிறார்கள். இந்த உணவகத்திற்குள் நுழையும் பார்வையாளர்கள் உண்மையான விமானத்தில் அமரும் அனுபவத்தைப் பெறுகின்றனர்.
மேலும் இந்த உணவகத்தில் இருக்கை முன்பதிவுகளுக்கு போர்டிங் பாஸ்கள் மூலம் செய்யப்படுகிறது. அதில் தேதி, நேரம், இருக்கை எண், முகவரி, QR குறியீடு போன்றவைகள் இருந்தன. இந்த உணவகத்தில் பல உணவு வகைகளை வழங்கப்படுகிறது. அதாவது இந்திய உணவு வகைகள் உட்பட, இத்தாலியன் மற்றும் சீன உணவு வகைகளும் வித விதமாக பரிமாறப்படுகின்றன. இதுமட்டுமல்ல, சுவைமிக்க சிற்றுண்டி வகைகளும் விநியோகிக்கப்படுகின்றன. மேலும், இந்த விமான உணவகம், குழந்தைகளிடையேவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இதுதொடர்பாக ஸ்ரீஹரி கரந்த் என்ற பயனர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், தனது அனுபவம் குறித்தும் குறிப்பிட்டுள்ளார். "இந்தப் புதிய 'டைகர் ஏரோ உணவகத்தில்' மெனு மிகவும் குறைவாகவே இருந்தது. உணவு சராசரியாக இருந்தது. மேலும், நிஜ விமானத்தில் பயணிப்பது போன்ற உணர்வை இந்த உணவகம் ஏற்படுத்துவதாக குறிப்பிட்டுள்ளார். இந்தப் பதிவு வைரலானதிலிருந்து, சமூக ஊடக பயனர்களின் கவனத்தை விரைவாக ஈர்த்துள்ளது.
இதனால், இந்த உணவகத்தை பார்வையிட ஆர்வமாக இருப்பதாக, சில பயனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் சில பயனர்கள், விமர்சனங்களையும் பதிவிட்டு வருகின்றனர். இருப்பினும், இந்த உணவகத்தின் புதுமையான யோசனைக்காகவும், விமான சூழலுக்காகவும் வாடிக்கையாளர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இந்த டைகர் ஏரோ உணவகத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின்படி, ஆட்டோ ஓட்டுநர்கள் முதல் கார்ப்பரேட் தொழில் வல்லுநர்கள் வரை அனைவரும் அதிக விலை இல்லாமல் சிறந்த உணவை சாப்பிடக்கூடிய வகையில் ஒரு இடத்தை உருவாக்குவதே எங்களின் நோக்கம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேபோல், பெங்களூரில் சேர்மன்ஸ் ரெஸ்டோபார், சிக்கபனாவரா என்ற இடத்தில் பாலி தீம் உணவகம் செயல்பட்டு வருகிறது. இங்கு அழகான அலங்காரம் மற்றும் அமைதியான சூழ்நிலை அனுபவத்தை பெறலாம். நீங்கள் பாலியில் இருப்பது போல் உணர்வீர்கள். காதலர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் ஏற்ற இடமாகும்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!



Click it and Unblock the Notifications