பெங்களூரில் நடக்கும் அக்கப்போர் எங்கேயும் நடக்காது.. அநியாயம் பண்ணாதீங்கடா..?!

இந்தியாவில் சிலிக்கான் வேலியாக விளங்கும் பெங்களூர் பல லட்சம் மக்களின் கனவுகளை நினைவாக்கிய இடம். வேலைவாய்ப்பு, கல்வி, பிஸ்னஸ் என ஒவ்வொரு மனிதர்களும், ஒவ்வொரு சாதனைகளை அவரவர் வாழ்வில் எட்டி வருகின்றனர். இந்த நிலையில் தற்போது பெங்களூரில் வாடகைக்கு வீடு கிடைப்பது பெரும் தலைவலியாக மாறியுள்ளது.

2023 ஆம் ஆண்டு துவக்கம் முதல் அனைத்து தரப்பு நிறுவனங்களும் ஊழியர்களுக்கான வொர்க் ப்ரம் ஹோம் சலுகையை ரத்து செய்துள்ளது. இதன் மூலம் பெரும்பாலான பெரு நகரங்களில் வாடகை வீடுகளுக்கான டிமாண்ட் அதிகரித்துள்ளது. இந்த திடீர் டிமாண்ட் காரணமாக வாடகை தொகை உயர்ந்தது மட்டும் அல்லாமல் வீட்டு ஓனர்களின் கெடுப்பிடியும் அதிகரித்துள்ளது.

பெங்களூரில் நடக்கும் அக்கப்போர் எங்கேயும் நடக்காது..  அநியாயம் பண்ணாதீங்கடா..?!

வீட்டு ஓனர்களின் கெடுப்பிடியால் பாதிக்கப்பட்ட ஒருவர் டிவிட்டரில் போட்ட பதிவு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீரஜ் மென்டா என்பவர் SuperK Stores என்ற ஸ்டார்ட்அப் நிறுவனத்தை உருவாக்கி வரும் வேளையில் பெங்களூரில் தனது அலுவலகத்திற்கு அருகில் இருக்கும் அப்பார்ட்மென்ட்-ல் வாடகைக்கு வீடு பார்த்துள்ளார். வீட்டு ஓனரும், நீரஜ் மென்டா மத்தியிலான கலந்துரையாடலை டிவிட்டரில் பகிர்ந்துள்ளார்.

நீரஜ் மென்டா தனது டிவிட்டரில் என்னுடைய வாடகை வீட்டு ஓனர் உடனான இண்டர்வியூவ் என்னுடைய நிறுவனத்திற்கு முதலீடு திரட்டும் Seed round pitch கூட்டத்தை விடவும் அதிகம், மிகவும் கடுமையாக இருந்தது என தெரிவித்தார்.

பெங்களூரில் நடக்கும் அக்கப்போர் எங்கேயும் நடக்காது..  அநியாயம் பண்ணாதீங்கடா..?!

இன்டர்வியூவ்-க்கு முன் - என்னுடைய, என் மனைவி குறித்து முக்கிய விபரங்களை data point ஆக பெற்றார். இதோடு ப்ரோக்கர் வாயிலாக அதற்கு முன்பே எங்களுடைய லின்கிடுஇன் ப்ரொபைல் லிங்க்-ஐ பெற்றார். முதல் கட்ட ஆய்வு எங்களுடைய கோரிக்கை வெற்றிப்பெற்ற நிலையில் ப்ரோக்கர் வாயிலாக தொலைபேசியில் பேச ஏற்பாடு செய்யப்பட்டது.

இன்டர்வியூவ்-ல் என்னுடைய மொத்த பேக்கிரவுண்ட், குடும்பம், எத்தனை பேர், போன்ற அடிப்படை விஷயங்களை கேட்டுவிட்டு.. என்னுடைய ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் பிஸ்னஸ் மாடல், burn rate, கடைசி முதலீட்டு சுற்றில் முதலீட்டாளர்கள் யார்..? என்பதை கேட்டார். இதற்கு முன்பே வீட்டு ஓனர் Crunchbase தளத்தில் இருந்து நிறுவனத்தின் மொத்த விபரத்தையும் சேர்த்துள்ளார்.

பெங்களூரில் நடக்கும் அக்கப்போர் எங்கேயும் நடக்காது..  அநியாயம் பண்ணாதீங்கடா..?!

இன்டர்வியூவ் முடிவில் வீட்டுக்கு குடியேற பலர் கேட்டுக்கொண்டு இருக்கும் வேளையில் அடுத்த 1 அல்லது 2 நாளில் அப்டேட் செய்கிறோம் என கூறிவிட்டு, என்னுடைய பிஸ்னஸ்-ஐ எப்படி நடத்த வேண்டும்..? கடைப்பிடிக்க வேண்டிய முக்கியமான விஷயங்களையும் பட்டியலிட்டார். இன்டர்வியூவ் முடித்த உடன் என்னுடைய மனைவி என்ன ஆச்சு என கேட்ட போது நான் It went well, fingers crossed என தெரிவித்தேன் என கூறியுள்ளார்.

நீரஜ் மென்டா-வின் டிவிட்டர் பதிவை பலர் பார்த்துள்ளது மட்டும் அல்லாமல் பெங்களூரில் வாடகைக்கு வீடு கிடைப்பது எவ்வளவு பெரிய விஷயமாக உள்ளது என்பதை வெளிச்சம் போட்டு காட்டுவதாக தெரிவித்துள்ளனர்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+