இந்தியாவின் சிலிக்கான் வேலி ஆக விளங்கும் பெங்களூரில் ஒரு நிறுவனத்தை துவங்குவது என்பது எளிதாக இருந்தாலும், முதலீடு பெற்று அதை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்வது என்பது சவாலும், வலியும் நிறைந்த பாதை. அதிலும் குறிப்பாக இந்திய ஸ்டார்ட்அப் சந்தையில் முதலீடுகளே இல்லாமல் இருக்கும் வேளையில் புதிய முதலீட்டை ஈர்க்கும் ஐடியா ஒன்று உருவாகியுள்ளது.
பெங்களூரில் மட்டுமே இப்படி நடக்கும் என்று, சில சம்பவங்கள் சமீபத்தில் நடந்து வருகிறது. அந்த வகையில் தற்போது பெங்களூரில் ஒரு வீட்டில் வாடகைக்கு குடியிருந்த ஸ்டார்ட்அப் நிறுவனருக்கு வீட்டின் உரிமையாளர் முதலீடு செய்து இன்வெஸ்டராக மாறியுள்ள சம்பவம் இணையவாசிகளை அதிர்ச்சியில் மூழ்கடித்துள்ளது.

Betterhalf.ai என்னும் ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் சிஇஓ-வாக இரு்ககும் பவன் குப்தா தனது டிவிட்டரில் தான் எப்படி எதிர்பாராத விதமாக ஒரு முதலீட்டாளர்-ஐ கண்டுப்பிடித்துள்ளதாக தெரிவித்துள்ளார். சமீபத்தில் தான் பெங்களூரில் வீட்டு வாடகையை 25 முதல் 50 சதவீதம் வரையில் உயர்த்தியதாக வீட்டு ஓனர்கள் மீது பெங்களூர் மக்கள் கடிந்துக்கொண்டனர்.
இதேவேளையில் இன்று இந்த வீட்டு ஓனரை மக்கள் குறிப்பாக ஸ்டார்ட்அப் நிறுவனர்கள் பாராட்டி வருகின்றனர். என்ன நடந்தது..? எப்படி பவன் குப்தா தான் வாடகைக்கு குடியிருக்கும் வீட்டு ஓனரிடம் முதலீட்டை பெற்றார்..? இந்த வீட்டு ஓனர் எவ்வளவு முதலீடு செய்தார்..?
Betterhalf.ai என்னும் செயற்கை நுண்ணறிவு அடிப்படையில் இயங்கும் இந்தியாவில் முதல் marriage super app நிறுவனமாகும். தனது நிறுவனம், பயணம், முயற்சிகள் குறித்து பவன் குப்தா தனது வீட்டு ஓனரிடம் பேசி வந்த நிலையில், வாட்ஸ்அப் சேட்டில் தனது வீட்டு ஓனர் முதலீடு செய்வதாக அறிவித்துள்ளார்.

இந்த வாட்ஸ்அப் சேட் ஸ்கிரீன்ஷாட்டை பகிர்ந்துள்ள பவன் குப்தா, தனது வீட்டு ஓனர் தனது Betterhalf.ai நிறுவனத்தில் 10000 டாலர் அதாவது கிட்டத்தட்ட 8 லட்சம் ரூபாய் அளவிலான முதலீட்டை செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார். இந்த பதிவு தற்போது பெரிய அளவில் வைரலாகியுள்ளது.


Click it and Unblock the Notifications