இந்தியாவில் சினிமா நடிகர்கள் ஒருவர் வந்துவிட்டால் போதும் டிராபிக் ஜாம் ஆகும் அளவுக்கு மக்கள் கூட்டம் அலைமோதும். ஆனால் வெளிநாடுகளில் அப்படியில்லை பல பிரபலங்கள் ஜாலியாக சாலையில் நடந்து செல்வதையும் ஹோட்டல்களில் சாப்பிடுவதையும் பல புகைப்படங்களில் நாம் பார்க்க முடியும். இதில் பெரிய நிறுவனங்களின் சிஇஓ-க்களும் அடக்கம்.
அப்படி அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ சாலையில் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை தனது பர்சனல் செக்யூரிட்டிகள் உடன் நடந்து சென்று கொண்டு இருந்தார். இது அமெரிக்க மக்களுக்கு மிகவும் இயல்பான ஒன்றாக இருந்தாலும், குறிப்பாக சான் பிரான்சிஸ்கோ போன்ற டெக் நிறுவனங்கள் நிறைந்த பகுதியில் இது சாதாரண விஷயம்.

ஆனால் இந்தியாவில் இருந்து சான் பிரான்சிஸ்கோ சென்ற Retool நிறுவனத்தின் வளர்ச்சி பிரிவின் தலைவரான சித் பூரி-க்கு இது சாதாரணமான விஷயமில்லை. சித் பூரி-யும் சாலையில் நடந்துக்கொண்டு இருக்கையில் சுந்தர் பிச்சையை பார்த்த போது உடனே அவரிடம் சென்று போட்டோ எடுத்துக்கொள்ள விரும்புவதாக கேட்டுள்ளார்.
வழக்கம் போல் எவ்விதமான ஆர்பாட்டமான ஆடையும் இல்லாமல் வெறுமென ப்ளூ ஜீன்ஸ், ப்ளூ டீ சர்ட், கருப்பு ஜாக்கெட் அணிந்திருந்தார். சித் பூரி கேட்ட உடன் உடனே ஓகே என சொன்ன சுந்தர் பிச்சை, அவருடைய செக்யூரிட்டி-யிடம் போன் கொடுத்து போட்டோ எடுத்துக்கொண்டார்.
இந்த போட்டோவை சித் பூரி சான் பிரான்சிஸ்கோ வந்த உடனே நடந்தது என்பதால் அவருக்கு மிகவும் ஸ்பெஷலான விஷயமாக இருந்துள்ளது. சித் பூரி இந்த போட்டோ-வை பதிவிட்டு 24 மணிநேரத்திற்குள் 6 லட்சம் பேர் அவருடைய டிவிட்டர் அதாவது X பதிவை பார்த்துள்ளனர்.
உலகின் மிகப்பெரிய டெக் நிறுவனமாகவும், மக்களின் வாழ்க்கையில் ஒரு பகுதியாகவும் மாறியுள்ள கூகுள் நிறுவனத்தின் சிஇஓ-வாக சுந்தர் பிச்சை பொறுப்பேற்ற நாளில் இருந்து பல முக்கிய பணிகளை செய்தது மூலம் ஆல்பபெட் பங்கு மதிப்பு உயர்ந்துள்ளது.
இதேவேளையில் அடுத்தடுத்து பல டெக் சேவைகள், எலக்ட்ரானிக்ஸ் கருவிகளின் அறிமுகம், ஏஐ சேவை, கிளவுட் என பல துறையில் வளர்ச்சி அடைந்துள்ளது. அனைத்தையும் தாண்டி சுந்தர் பிச்சை தமிழர் என்பதால் இவருடைய வெற்றி ஒவ்வொன்ரும் இளைஞர்களுக்கு புதிய இன்ஸ்பிரேஷனாக அமைகிறது.


Click it and Unblock the Notifications