இந்தியாவின் டெக் நகரமான பெங்களூரில் வாடகை வீடு என்பது கடந்த சில மாதங்களாக ஹாட் டாப்பிக் ஆகவே உள்ளது. வாடகை வீட்டுக்கான டிமாண்டில் துவங்கி அதிகப்படியான வாடகை, குடியிருக்க வருபவர்களிடம் இண்டர்வியூவ், இணையத்தில் வாடகை வீடு பதிவிட்ட உடன் டிமாண்ட் காரணமாக விலை உயர்ந்தது என பல விஷயங்கள் டிரெண்டானது.
இது அனைத்தையும் தாண்டி பெங்களூரில் வருடத்தின் 365 நாட்களும் இருக்கும் முக்கிய பிரச்சனை வாடகை வீடு தேடுவது. பெங்களூரில் வாடகை வீடு தேடும் ஓவ்வொருவரிடம் ஓராயிரம் கதைகள் இருக்கும், ஒவ்வொன்றும் சாமானிய மக்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் இருக்கும் என்றால் மிகையில்லை.

ஆனால் இதை அனைத்தையும் தவுடுபொடியாக்கும் வகையில் பெங்களூரில் ஒரு சம்பவம் நடந்துள்ளது, இதை இணையவாசிகள் anti-peak Bengaluru moment என்ற அங்கிகாரத்தை கொடுத்துள்ளனர். Grapevine என்ற சமுக வலைத்தளத்தில் ஒருவர் செய்த பதிவு தான் தற்போது பெங்களூர் இளைஞர்கள் குறிப்பாக வீடு தேடும் இளைஞர்கள் மத்தியில் முக்கிய பேச்சாக உள்ளது.
Grapevine நிறுவனத்தின் நிறுவனரான சவுமில் திரிபாதி டிவிட்டரில் ஒரு ஸ்கிரீன் ஷாட் பதிவிட்டு உள்ளார். இந்த பதிவில் ஒருவர் ஓரே நாளில் பெங்களூரில் வாடகை வீடு தேடி கண்டுப்பிடித்துள்ளேன் என மீடியம்மசாலா என்ற பெயர் கொண்டவர் Grapevine தளத்தில் பதிவிட்டு உள்ளார்.
வியாழக்கிழமை பெங்களூர்-க்கு வந்தேன், வெள்ளிக்கிழமை கோரமங்களாவில் வீட்டு ப்ரோக்கர் உடன் சுற்றினேன். சனிக்கிழமை வீட்டை தேர்வு செய்தேன். ஞாயிற்றுகிழமை புதிய வீட்டுக்கு குடியேறினேன் என தெரிவித்துள்ளார். இந்த பதிவை தான் சவுமில் திரிபாதி டிவிட்டரில் பதிவிட்டு anti peak Bengaluru moment என பதிவிட்டு உள்ளார்.

சவுமில் திரிபாதி-யின் 37000 பேர் பாத்துள்ளனர். இதை கலாய்க்கும் விதமாக POTATOMATO என்ற பெயரில் ஒருவர் வெள்ளிக்கிழமை கோரமங்களாவில் ஒரு ஸ்டார்ட்அப் ஃபவுண்டர் உடன் சுற்றினேன், சனிக்கிழமை புதிய வேலையை பெற்றேன், ஞாயிற்றுக்கிழமை புதிய வேலையில் சேர்ந்தேன் என பதிவிட்டு உள்ளார். இது உண்மையாக கூட இருக்க வாய்ப்புகள் உள்ளது.



More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications