இந்தியாவின் டெக் நகரமான பெங்களூர் பல விஷயங்களுக்கு ஸ்பெஷலாக உள்ளது, எப்போதும் சில்லென இருக்கும் வானிலை, நினைக்காத நேரத்தில் திடிரென பெய்யும் மழை, இந்தியாவில் இருக்கும் அனைத்து மாநில மக்கள், கலாச்சாரத்தை ஒரே இடத்தில் பார்க்கும் வாய்ப்பு, சர்வ சாதாரணமாக 3 - 4 மொழியில் பேசக்கூடியவர்கள், எங்கு திரும்பினாலும் டெக் பார்க், ஐடி ஊழியர்கள், ஸ்டார்ட்அப் என அடுக்கிக்கொண்டே போகலாம்.
ஆனால் அனைத்தையும் விட பெங்களூர் என்ற உடன் அனைத்து தரப்பு மக்களுக்கும் பொதுவாக மனதில் தோன்றும் ஒரு விஷயம் மோசமான டிராபிக். பெங்களூரில் நாள் முழுக்க டிராபிக் நிறைந்து காணப்படுவது இந்நகர மக்களுக்கு இயல்பான ஒன்றாக இருந்தாலும், வெளியூர்களில் இருந்து வரும் மக்களுக்கு இது பெரிய டார்ச்சராகவே உள்ளது.

இந்த நிலையில் பிற நகரங்களில் இல்லாதது போல் பெங்களூரில் டிராபிக் இருக்கும் காணத்தால், இந்த டிராபிக் நேரத்தில் பலரும் பல விச்சித்திரமான பணிகளை செய்வது வாடிக்கையாகிவிட்டது. பெரும்பாலான மக்கள் பயண நேரத்தில் தூங்குவதை வழக்கமாக கொண்டாலும், சிலர் இந்த நேரத்தையும் ப்ரொடெக்டிவ்வாக மாற்ற நினைப்பார்கள்.
அப்படி பெங்களூர் டிராப்பிக்கில் பெண் ஒருவர் நேரத்தை வீண் செய்யக்கூடாது என்று திட்டமிட்டு, மூன்று கவர் வைத்து காய்கறியை உறிக்க துவங்கியுள்ளார், இந்த தருணத்தை அவரே படம்பிடித்து டிவிட்டரில் பதிவு செய்த நிலையில் செம டிரெண்டாகியுள்ளது.
இந்த போட்டோவுக்கு உங்க மேனேஜர்-ஐ டேக் செய்கிறேன், பயண நேரத்தில் அவர் டாஸ்க் செய்ய சொல்லுவார், இனி அதையும் செய்யுங்கள் என கமெண்ட் செய்துள்ளனர். இப்படி பலரும் பல விதமாக கமெண்ட் செய்துள்ளனர். இதுவரையில் இந்த பதிவை 1 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.
இதுபோன்ற மோசமான பெங்களூர் டிராப்பிக்கில் நீங்கள் மாடிக்கொண்டால் தூங்குவதை தவிர என்ன செய்வீர்கள், மறக்கமாக கமெண்ட் பண்ணுங்க.


Click it and Unblock the Notifications