பெங்களூரு: செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட சிக்னல்கள் வாயிலாக பெங்களூருவில் பிரதான சாலை பிரிவுகளில் பயண நேரம் 20 முதல் 33 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது என பெங்களூரு போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.
பெங்களூரு நகரில் போக்குவரத்து நெரிசல் மிகப் பெரிய பிரச்சினையாக இருந்து வருகிறது. இதனை அடுத்து பெங்களூரு போக்குவரத்து காவல்துறையினர் அடாப்டிவ் டிராபிக் கண்ட்ரோல் சிஸ்டம் (Adaptive Traffic Control System - ATCS ) என்ற ஒரு புதிய நடைமுறையை கொண்டு வந்தனர். இந்த ஏடிசிஎஸ் திட்டம் கடந்த மே மாதம் செயல்பாட்டுக்கு வந்தது. இதன்படி 136 சாலை சந்திப்புகளில் ஏஐ முறையில் இயங்கும் சென்சார் அமைப்புகள் பொருத்தப்பட்டு அவை 165 சிக்னல்களுடன் இணைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதுவரை பசவனகுடி, ஜெயநகர், ஜே பி நகர் மற்றும் ஹட்சன் சர்கிள் ஆகிய பகுதிகளில் உள்ள மொத்தம் 60 சாலை சந்திபுகளில் இந்த அடாப்டிவ் டிராபிக் கண்ட்ரோல் சிஸ்டம் அமைக்கப்பட்டுள்ளது. வரும் ஜனவரி மாதத்திற்குள் நகரின் 165 ட்ராபிக் சிக்னல்களில் இந்த நவீன அமைப்பு பொருத்தப்படும் என பெங்களூரு நகர காவல் ஆணையர் தயானந்தா தெரிவித்துள்ளார். இவ்வாறு இந்த நவீன தொழில்நுட்பம் பொருத்தப்பட்ட இடங்களில் எல்லாம் போக்குவரத்து நேரம் பயண நேரம் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளார்.
ஏடிசிஎஸ் அமைப்பு என்பது Centre for Development of Advanced Computing இல் போக்குவரத்து நெரிசல்களை சீரமைப்பதற்காகவே உருவாக்கப்பட்டது. இதன்படி குறிப்பிட்ட சாலை சந்திப்புகளில் எல்லாம் கேமரா மற்றும் சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இவை சிக்னல்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. இந்த சென்சார்கள் வாகனங்களின் எண்ணிக்கையை கணக்கீடு செய்து அதற்கேற்ற வகையில் சிக்னல் நேரத்தை மாற்றி அமைக்கிறது. இதன் காரணமாக போக்குவரத்து சீராகி பயண நேரம் குறைகிறது. எனவே வாகன ஓட்டிகள் தேவையில்லாமல் சிக்னல்களில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய தேவை இருக்காது.
தற்போது கே ஆர் ரோடு காரிடாரில் 4 டிராபிக் சிக்னல்கள் இருக்கின்றன. இந்த பகுதியில் ஏடிசிஎஸ் பொருத்தப்பட்ட பின்னர் பயண நேரம் 20% வரை குறைந்துள்ளது. ஹட்சன் சர்கிள் பிரிவில் ஐந்து சிக்னல்கள் இருக்கின்றன இங்கே பயண நேரம் 33 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல ஜெயா நகர் பகுதியில் 3 சிக்னல்கள் செயல்படுகின்றன.
இங்கே பயண நேரம் 20 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது. இந்த நவீன தொழில்நுட்பம் காரணமாக நகரின் முக்கியமான பகுதிகளில் எல்லாம் பயண நேரம் கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது என போக்குவரத்து காவல்துறை இணை ஆணையர் அனுசேத் தெரிவித்துள்ளார்.
இது போக்குவரத்து நெரிசலை குறைத்ததோடு மட்டுமில்லாமல் மக்களின் பயண நேரத்தையும் குறைத்து இருப்பது முக்கியமாக பார்க்க வேண்டியதாக இருக்கிறது என தெரிவித்துள்ளார். அதேபோல குறிப்பிட்ட ஒரு சாலையின் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசர தேவைக்கான வாகனங்கள் வருகிறது என்றால் அதனை இந்த அமைப்பு தானாகவே அறிந்து கொண்டு அவற்றுக்கு முன்னுரிமை அளித்து சிக்னல்களை செயல்பட வைக்கும் எனவே வருங்காலங்களில் அனைத்து சிக்னல்களிலும் இந்த அமைப்பு பொருத்தப்படும் என அவர் கூறியுள்ளார்.
Written by: Devika
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications