இந்தியாவின் மிகப்பெரிய டெக் நகரமாக இருக்கும் பெங்களூரில் டிராபிக் பிரச்சனை குறித்து வருடம் முழுவதும் பேசும் ஒரு விஷயமாக உள்ளது. பெங்களூர் டிராபிக் குறித்து பள்ளி செல்லும் மாணவர்கள் முதல் வயதானவர்கள் வரையில் ஒரு கருத்து இருக்கும், இதை அப்படி செய்யவேண்டும், இதை இப்படி மாற்ற வேண்டும் என கருத்துக்களை பட்டியலிடுவார்கள்.
பெங்களூரில் டிராபிக் குறித்து புலம்பி தள்ளும் மக்கள் மத்தியில் ஒரு பெண் இந்த டிராபிக்-ஐ எப்படி சிறப்பாக பயன்படுத்தலாம் என ஐடியா கூறியுள்ளார். இதற்கு பலரும் வரவேற்பு கொடுத்துள்ளனர் என்றால் மிகையில்லை.

பிரகிருதி சர்மா என்பவர் டிவிட்டர் தளத்தில் பெங்களூர் டிராபிக் வைத்து ஒரு டேட்டிங் டிப் கொடுத்துள்ளார். இவருடைய பதிவு, பெங்களூர் டேட்டிங் டிப் என்ற தலைப்பில் துவங்குகிறது, உங்களுடைய டேட்டிங் பார்ட்னர் உடன் பிடித்த இடத்திற்கு செல்வதற்கு முன்பு, இருவரும் ஒரு பொதுவான இடத்தில் சந்தித்து பீக் டிராபிக் நேரத்தில் இருவரும் சேர்ந்து நீங்கள் விரும்பும் இடத்திற்கு ஒன்றாக பயணியுங்கள்.
இதன் மூலம் அதிக நேரம் உங்களுடைய டேட்டிங் பார்ட்னர் உடன் செலவழிக்க முடியும், இதே நேரத்தில் இந்த டிராபிக் மத்தியில் உங்களுடைய பார்ட்னரின் கோபம், பொறுமை ஆகியவற்றை கண்டுப்பிடிக்க முடியும் என தெரிவித்தார்.
இந்த பதிவு சுமார் 1.5 லட்சம் பேர் பார்த்துள்ளனர், சுமார் 2750 பேர் லைக் செய்துள்ளனர். இதற்கு நெட்டிசன்கள் சிறப்பான வரவேற்பை கொடுத்துள்ளனர். ப்ரோதிமா என்பவர் இது தான் என்னுடைய Litmus test என கூறியுள்ளார். அப்போ சில்க் போர்ட், மாரத்தஹள்ளி, வொயிட்ஃபீல்ட் சாலைகள் தான் டேட்டிங் செய்ய சிறந்த இடம்.
சஜால் என்பவர், பெங்களூர் ஆண்களுக்கான டேட்டிங் டிப்ஸ் - பணக்காரரான மாறுங்கள் என டிவீட் செய்த நிலையில் இதற்கு பிரகிருதி சர்மா சரியாக சொன்னீர்கள் என தெரிவித்தார். ஓஜஸ்வரி என்பவர் CARPOOLING ஆப்கள் டேட்டிங் ஆப் ஆக மாற்றும் வாய்ப்பு இருந்தது. ஆனால் தடை செய்யப்பட்டு உள்ளது என தெரிவித்தார்.

சமீபத்தில் பெங்களூரில் செப்டம்பர் 27 ஆம் தேதி திடீரென அவுட்டர் ரிங் ரோட்டில் யாரும் எதிர்பார்க்காத வகையில் டிராபிக் உருவானது, 4 மணிக்கு துவங்கிய மோசமான டிராபிக் இரவு 9 மணி வரையில் நீடித்தது. 20 கிலோமீட்டர் பயணம் செய்வோர் அனைவரும் சுமார் 4 மணிநேரம் பயணம் செய்ய வேண்டிய நிலை உருவானது, பல கல்லூரி, பள்ளி வாகனங்களும் இந்த டிராப்பிக்கில் மோசமாக மாட்டிக் கொண்டது.
இந்த பிரச்சனை இந்தியா முழுவதிலும் பேசப்பட்டது, செப்டம்பர் 27 மோசமான டிராபிக் பிரச்சனையை தொடர்ந்து அடுத்த 3 நாட்களுக்கு டிவிட்டரில் மக்கள் மத்தியில் முக்கிய விவாத பொருளாக இருந்தது மறக்க முடியாது.


Click it and Unblock the Notifications