இந்தியாவில் வாழ்வது கஷ்டம் தான்.. நாளுக்கு நாள் அதிகரிக்கும் செலவு.. பெங்களூரு பெண் குமுறல்

இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் லிவிங் காஸ்ட் குறித்து பெங்களூருவைச் சேர்ந்த பெண் ஒருவர் எக்ஸ்-இல் பதிவிட்ட கருத்து வைரலாகி, நாடு முழுவதும் பணவீக்கம், மக்களின் வாங்கும் திறன் மற்றும் நடுத்தர, குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களின் அன்றாடப் போராட்டங்கள் குறித்த தீவிர விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஐஐடி பாம்பே பட்டதாரியான மோனாலி டம்ப்ரே என்பவர் தனது எக்ஸ் பதிவில் தான் நாள்தோறும் சந்திக்கும் பிரச்சனைகளை பகிர்ந்துகொண்டுள்ளார். அதில், இந்தியாவில் சிறிய, இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் கூட லிவிங் காஸ்ட் மிகவும் அதிகமாகி வருவதை உணர்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், அத்தியாவசியப் பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து வருவதால், கீழ் மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட குடும்பங்கள் எப்படித்தான் சமாளிக்கின்றனரோ என்று தான் உண்மையிலேயே கவலைப்படுகிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்தியாவில் வாழ்வது கஷ்டம் தான்.. நாளுக்கு நாள் அதிகரிக்கும் செலவு.. பெங்களூரு பெண் குமுறல்

ஒட்டுமொத்தமாக, இந்தியாவில் நகர்ப்புறங்களில் வசிப்பவர்களின் நிலை குறித்துப் பேசிய டம்ப்ரே, பெங்களூருவில் எனது மளிகைக் பொருட்களுக்கான செலவு (Grocery bills) வழக்கத்திற்கு மாறாக அதிகமாக உள்ளன. நான் வாங்கிய மளிகை பொருட்களில் அத்தியாவசியப் பொருட்கள் மட்டுமே உள்ளது. உதாரணமாக இதில் பழங்கள், காய்கறிகள் மற்றும் அன்றாடத் தேவைகளான மளிகைப் பொருட்கள் மட்டுமே உள்ளது. இதன் விலை கடந்த சில மாதங்களுக்கு முந்தைய விலையை ஒப்பிடுகையில் தற்போது விலைகள் அதிகமாகிவிட்டதாக நான் உணர்கிறேன் என்று தனது பதிவில் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்

தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வரும் இந்தப் பதிவு, பல பயனர்களிடமிருந்து தங்களது சொந்த அனுபவங்களையும், நாடு முழுவதும் பகிர்ந்து கொள்ளும் விதமாக கருத்துகளை உருவாக்கியுள்ளது.

இதுகுறித்து ஒரு பயனர் தனது கருத்தைப் பதிவிடுகையில், இதிலிருந்து ஒரு குறிப்பிட்ட நிகழ்வை நான் குறிப்பிட விரும்புகிறேன். நான் ஒருமுறை இந்திராநகரில் உள்ள எனது வீட்டிற்கு அருகிலுள்ள உள்ளூர் சந்தையில் மளிகைப் பொருட்கள் வாங்கச் சென்றேன். அங்கு காய்கறிகளின் விலைகள் ஜெப்டோவில் இருந்த அதே விலையில் இருந்தன. மேலும் பருப்பு வகைகள் போன்ற மற்ற பொருட்களின் விலையோ அதைவிட அதிகமாக இருந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.

மற்றொரு பயனர் சிறிய நகரங்களில் தான் கண்ட அனுபவத்தை ஒப்பிட்டு கூறியுள்ளார். பெருநகரங்களில் அதிகரித்து வரும் விலைகளுடன் நான் முழுமையாக உடன்படுகிறேன். ஆனால் ஆச்சரியப்படும் விதமாக, இரண்டாம் நிலை அல்லது மூன்றாம் நிலை நகரங்களில் பழங்கள், காய்கறிகள் மற்றும் பால் பொருட்கள் மிகவும் மலிவானதாகவும், அதே நேரத்தில் சிறந்த தரத்துடனும் கிடைப்பதையும் நான் கண்டறிந்துள்ளேன். இதை நான் பல மேற்கத்திய மாநிலங்களில் நேரடியாகப் பார்த்திருக்கிறேன். அங்கு விளைபொருட்கள் மிகவும் புத்துணர்ச்சியுடனும், ஆரோக்கியமாகவும் உள்ளன. நாம் சாப்பிடப் பழகிவிட்ட கோதுமை தானியங்களை விட தினைகள் மிகவும் மலிவானவையாகவும் உள்ளன என்று கூறியுள்ளார்.

மற்றொரு பயனர் இன்று வாழ்க்கைச் செலவு மிக அதிகமாக உள்ளது. குறிப்பாக குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் உள்ளவர்களுக்கு என்றும், மக்கள் இடைவிடாமல் வேலை செய்கிறார்கள் ஆனால் அவர்களுக்கு சமூகமயமாக்கவோ அல்லது பயணம் செய்யவோ போதுமான நேரம் கிடைப்பதில்லை என்று தனது கவலையை வெளிப்படுத்தினார்.

இன்னொரு பயனர் கூறுகையில், இதை நான் இரண்டு வருடங்களுக்கு முன்பே உணரத் தொடங்கினேன். அதனால் நான் உறுதியாக ஒரு முடிவெடுத்தேன் என் சொந்த ஊருக்குத் திரும்புவது என்று, இயற்கையின் மடியில், மலைகளின் அழகிய காட்சிகளுடன் அமைதியான வாழ்க்கை வாழலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆம், உணவு மற்றும் மளிகைப் பொருட்களின் மீதான பணவீக்கம் மிகவும் அதிகமாக உள்ளது. பொதுவாக, வாழ்க்கைச் செலவு வழக்கமான 5-6% ஆண்டு அதிகரிப்பு என்ற வரம்பை விட மிக அதிகமாக உயர்ந்துள்ளது என்று ஒரு பயனர் கருத்து தெரிவித்துள்ளார்.

இருப்பினும், இந்த விரக்திக்கு மத்தியிலும், சில பயனர்கள் நம்பிக்கையுடன் கருத்து தெரிவித்துள்ளனர். கிராமப்புற தொழில்முனைவோர்களின் வளர்ச்சியையும், இணையப் பயன்பாட்டின் எதிர்பாராத அதிகரிப்பையும் பற்றிப் பேசுகையில், ஒரு பயனர் கூறினார். சிறு அளவில் பார்க்கும்போது, கடந்த காலத்துடன் ஒப்பிடும்போது குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களிடையே மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.

இந்த வைரல் பதிவு, இந்தியாவில் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு மற்றும் அதன் சமூகப் பொருளாதார தாக்கங்கள் குறித்த ஒரு முக்கியமான விவாதத்தைத் தொடங்கியுள்ளது. அரசாங்கம் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவும், மக்களின் வாங்கும் திறனை அதிகரிக்கவும் என்ன மாதிரியான நடவடிக்கைகளை எடுக்கப் போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். அதே நேரத்தில், தனிநபர்கள் தங்கள் செலவுகளைக் குறைத்து, சிக்கனமாக வாழும் முறைகளை பின்பற்றுவது இந்த கடினமான சூழ்நிலையில் ஓரளவு நிவாரணம் அளிக்கலாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+