நாட்டில் நாளுக்கு நாள் இணைய மோசடி சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. குறிப்பாக, ஆன்லைனில் கொட்டிக்கிடக்கும் டேட்டிங் செயலிகளால் பெரிய அளவிலான ஆபத்துக்கள் அதிகரித்து வருகின்றன. இதனால், பண இழப்புகள் உள்ளிட்ட பல சிக்கல்கள் நேர்ந்து வருகிறது. இப்படிபட்ட ஒரு சூழலில் பெங்களூருவில் விவாகரத்து பெற்ற நபர் ஒருவர் இணைய மோசடியில் ஈடுபடுபவர்களுக்கு இரையாகி ரூ.21 லட்சத்தை இழந்துள்ளார்.
பெங்களூரைச் சேர்ந்த 40 வயது விவாகரத்து பெற்ற நபர் ஒருவர், டேட்டிங் ஆப் மூலம் புதிய வாழ்க்கைத் துணையைத் தேடும் போது ரூ.21 லட்சத்தை இழந்துள்ளார். தனது நண்பர்களின் ஆலோசனையின் பேரில், அந்த நபர் வாழ்க்கைத் துணையைக் கண்டுபிடிக்க "Ur my life" என்ற டேட்டிங் செயலியை டவுன்லோடு செய்து பெண்ணை தேடி வந்துள்ளார்.

அப்போது, அந்த டேட்டிங் ஆப் மூலம் இந்த ஆண்டு கடந்த ஏப்ரல் மாதத்தில் மித்ரா என்ற பெண்ணுடன் நட்பு ஏற்பட்டுள்ளது. அப்போது இருவரும் விவாகரத்து பெற்றவர்கள் என அறிமுகப்படுத்தி கொண்டுள்ளனர். அப்போது மித்ரா, தனக்கும் பொருத்தமான வாழ்க்கை துணையை தேடுவதாக அவரிடம் கூறியுள்ளார். அத்தகைய சூழ்நிலையில், இருவரும் மிகவும் நல்ல நண்பர்களாகி, தங்கள் உறவை வளர்த்து வந்துள்ளனர்.
அப்போது அந்த நபர் தனக்கு சில கடன்கள் நிலுவையில் இருப்பதாகவும், வேலை தேடிக் கொண்டிருப்பதையும் கூறியுள்ளார். அதற்கு அந்த பெண் அந்நிய செலாவணி வர்த்தகத்தில் ஈடுபட பரிந்துரைத்துள்ளார். அத்தகைய சூழ்நிலையில், பெண்ணின் ஆலோசனையின் பின்னர், அந்த நபர் அந்நிய செலாவணி வர்த்தகத்தில் நுழைவதற்காக மற்றொரு கடன் வாங்கியுள்ளார். அந்த பெண் அந்த நபர் புரோக்கிங் நிறுவனத்தில் அறிமுகப்படுத்தினார்.
ஆரம்பத்தில், அவர் தனது சகோதரியிடம் கடன் பெற்று ரூ.50,000 முதலீடு செய்யத் தொடங்கியபோது, அவர் லாபம் ஈட்டினார். இதற்கிடையில், அந்த பெண் அதிக பணத்தை முதலீடு செய்யுமாறு அந்த நபரை வற்புறுத்தியுள்ளார். இப்படிப்பட்ட சூழ்நிலையில், அந்த நபருக்கு ரூ.21 லட்சம் கடன் வாங்கி, முழுப் பணத்தையும் புரோக்கரேஜ் நிறுவனம் மூலம் சந்தையில் முதலீடு செய்துள்ளார்.
சில நாட்களுக்குப் பிறகு, அந்த பெண் மித்ராவும் தரகு நிறுவனமும் அந்த நபருக்கு பதிலளிப்பதை நிறுத்தியுள்ளனர். அப்போது தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து போலீசில் புகார் அளித்துள்ளார். அதில், தகவல் தொழில்நுட்ப சட்டம் மற்றும் பிஎன்எஸ் பிரிவு 318 (மோசடி) ஆகியவற்றின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications