இந்தியாவின் அண்டை நாடான பங்களாதேஷ் கடந்த 10- 15 வருடத்தில் மிகப்பெரிய அளவிலான பொருளாதார வளர்ச்சியை பதிவு செய்த நாடு, ஆனால் கொரோனா தொற்று காலத்தில் ஏற்பட்ட பாதிப்பு பெரும் தாக்கத்தை அந்நாட்டில் உருவாகி வர்த்தகம் பாதிக்கப்பட்டது. இதேவேளையில் நிதி நிலையும் பாதிக்கப்பட்டது.
இந்த சூழ்நிலையில் Bangladesh அரசு தனது நிதி நிலை, நாணய மதிப்பு ஆகியவற்றை மேம்படுத்த முக்கிய முடிவை எடுத்துள்ளது. பங்களாதேஷ் அரசு அந்நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பை அதிகரிக்கவும், தொடர்ந்து அமெரிக்க டாலர்களை தனது வர்த்தகத்திற்கு பயன்படுத்துதை குறைக்கவும் முடிவு செய்துள்ளது.

இதற்காக பங்களாதேஷ் அரசு சில மாதங்களுக்கு முன்பு பல்வேறு ஏற்றுமதி வர்த்தகத்திற்கு டாலருக்கு பதிலாக சீன யுவான் நாணயத்தை பயன்படுத்த உள்ளதாக அறிவித்தது. இதை தொடர்ந்து தற்போது பங்களாதேஷ் நாட்டின் இரண்டு வங்கிகள் இந்திய ரூபாயில் வர்த்தக பரிவர்த்தனைகளை செய்யும் வசதிகளை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளன.
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா மற்றும் ஐசிஐசிஐ வங்கி உடன் ரூபாய் கணக்குகளை பங்களாதேஷ் நாட்டின் ஈஸ்டர்ன் வங்கி மற்றும் சோனாலி வங்கி துவங்கியுள்ளது. இதன் மூலம் ஜூலை 11 முதல் ரூபாய் வர்த்தகத்திற்கான திட்டத்தை இந்தியா - பங்களாதேஷ் நாடுகள் மத்தியில் நடக்க உள்ளது.
ஈஸ்டர்ன் வங்கி மற்றும் சோனாலி வங்கி ஆகியவை இந்தியா உடனான வர்த்தகத்தில் மட்டும் அல்லாமல் வெளிநாட்டு வர்த்தகத்திற்கும் இந்திய ரூபாயை பயன்படுத்த உள்ளது. இதன் மூலம் டாலர் இருப்பை நிலை நிறுத்தி தனது நிதி நிலை மற்றும் நாணய மதிப்பை மேம்படுத்தும் என நம்புகிறது.
இது மறைமுகமாக இந்தியா ரூபாய்க்கான டிமாண்ட் அதிகரித்து அதன் மதிப்பீட்டை உயர்த்தி டாலரின் ஆதிக்கத்தை குறைக்கவும், அமெரிக்க டாலருக்கு எதிரான மதிப்பை உயர்த்தவும் முடியும். வளரும் நாடுகள் மத்தியில் டாலருக்கு எதிரான போராட்டத்தில் சீனா யுவான் மற்றும் இந்திய ரூபாய் முக்கிய பங்கு வகிக்கிறது.
2021-22 ஆம் நிதியாண்டில் பங்களாதேஷ், இந்திய நாட்டில் இருந்து 14 பில்லியன் டாலர் அளவிலான பொருட்களை இறக்குமதி செய்துள்ளது. சீனாவுக்கு அடுத்த படியாக இந்தியா, பங்களாதேஷ் நாட்டிற்கு முக்கிய சப்ளையராக உள்ளது. இதவேளையில் பங்களாதேஷ் நாட்டில் இருந்து இந்தியாவுக்கு வெறும் 2 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்கள் மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டு உள்ளது.
More From GoodReturns

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications