இந்தியாவின் அண்டை நாடான பங்களாதேஷ் கடந்த சில ஆண்டுகளாகவே வர்த்தகம், வேலைவாய்ப்பு, பொருளாதாரம் ஆகியவற்றில் நிலையான வளர்ச்சி அடைந்து வருகிறது.
இதேபோல் சீனாவில் இருந்து வெளியேறிய பல வர்த்தகங்கள் பங்களாதேஷ் நாட்டில் குவிந்துள்ள காரணத்தால் இந்நாட்டின் வளர்ச்சிக்கு நிலையான அடித்தளம் அமைத்துள்ளது.
இந்நிலையில் தற்போது பங்களாதேஷ் நாட்டின் தனிநபர் வருமானம் குறித்துத் தகவல் வெளியாகி இந்திய அரசுக்கும், இந்திய மக்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.
பங்களாதேஷ் நாட்டின் தனிநபர் வருமானம்
பங்களாதேஷ் நாட்டின் தனிநபர் வருமானத்தின் அளவு 2019-20ஆம் நிதியாண்டில் 2,064 டாலராக இருந்த நிலையில் கடந்த ஒரு வருடத்தில் 9 சதவீதம் வளர்ச்சி அடைந்து 2,227 டாலராக உயர்ந்துள்ளது.
பங்களாதேஷில் கொரோனா
இதேபோல் பங்களாதேஷ் நாட்டிலும் இந்தியாவில் கொரோனா தொற்று 2வது அலையில் மக்கள் அதிகப்படியாகப் பாதிக்கப்பட்டனர். ஏப்ரல் 9ஆம் தேதி ஒரு நாளில் மட்டும் 7,462 பேர் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், மே 20ஆம் தேதி இது 1,457 ஆகக் குறைந்துள்ளது.
இந்தியாவின் தனிநபர் வருமானம்
இந்நிலையில் சமீபத்திய வெளியான இந்தியாவின் தனிநபர் வருமான அளவீட்டைப் பார்க்கும் போது இந்தியா பெரிய அளவில் பின்தங்கியுள்ளது. பங்களாதேஷ் நாட்டின் தனிநபர் வருமானத்தின் அளவு 2,227 டாலராக அதிகரித்துள்ள நிலையில் இந்தியாவின் தனிநபர் வருமானம் 1,947.417 டாலராக உள்ளது.
இந்தியாவில் கொரோனா
மேலும் இந்தியா தொடர்ந்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு நாடு முழுவதும் இன்னுமும் லாக்டவுன் நடைமுறையில் வைத்துள்ளது. இதனால் நாட்டின் வர்த்தகம் மற்றும் வேலைவாய்ப்பு பாதிக்கப்பட்டு உள்ளது.
மக்கள் கருத்து
பங்களாதேஷ் அரசு தன் நாட்டின் தனிநபர் வருமான அளவீட்டுத் தகவல்களை விர்ச்சுவல் முறையில் நடந்த நாடாளுமன்ற கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. பங்களாதேஷ் நாட்டின் இந்த வளர்ச்சி பற்றி நீங்க என்ன நினைக்கிறீர்கள்..? கமெண்ட் பண்ணுங்க.


Click it and Unblock the Notifications