பங்களாதேஷில் நிலவும் அரசியல் பதட்டங்கள், இந்தியாவில் உள்ள ஜீன்ஸ் உற்பத்தியாளர்களுக்கு வரப்பிரசாதமாக மாறியுள்ளது. சில மாதங்கள் முன்பு வரை பங்களாதேஷ் மிகப்பெரிய ஜீன்ஸ் ஏற்றுமதியாளராக இருந்து வந்தது. ஆனால் சமீபத்தில் அங்கு ஏற்பட்ட நிதி நெருக்கடி காரணமாக அந்நாட்டின் ஜீன்ஸ் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக கர்நாடகா மாநிலத்தின் பல்லாரியில் உள்ள ஜீன்ஸ் தொழிற்சாலைகள் 30 சதவீதம் வரை அதிக லாபம் ஈட்டியுள்ளன.
சில தொழில் வல்லுனர்களின் கூற்றுப்படி இந்தியாவில் விற்பனை செய்யப்படும் முன்னணி ஜீன்ஸ் பிராண்டுகள் பங்களாதேஷில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டன. தற்போதைய பிரச்சனைக்கு முன்பு பங்களதேசத்திலிருந்து தான் இந்தியாவிற்கு ஜீன்ஸ்கள் கொண்டுவரப்பட்டன. ஆனால் அவை இப்போது இந்தியாவின் ஜீன்ஸ் தலைநகர் என்று அழைக்கப்படும் பல்லாரியிலிருந்து பெறப்படுகின்றன.

வணிகத் தரவுகளின் படி பங்களாதேஷில் நிலவும் அரசியல் பதட்டங்கள் அங்குள்ள தொழில் துறையை கடுமையாக பாதித்திருக்கிறது. இதன் காரணமாக பல்லாரியில் உள்ள ஜீன்ஸ் யூனிட்டுகள் ஒவ்வொன்றும் மாத மாதம் ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை லாபம் ஈட்டியுள்ளன. பல்லாரியை சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட ஜீன்ஸ் உற்பத்தி தொழிற்சாலைகள் உள்ளன. இங்கு தயாரிக்கப்படும் பொருட்களை மும்பை மற்றும் சூரத்தில் உள்ள வர்த்தகர்கள் மற்றும் டீலர்கள் வாங்குவது வழக்கம். ஆனால் இப்போது சில சர்வதேச பிராண்டுகளும் பல்லாரி ஜீன்ஸ் மீது ஆர்வமாக உள்ளன.
பொல்லக்ஸ் ஜீன்ஸ் உரிமையாளரும், பல்லாரி ஜீன்ஸ் இண்டஸ்ட்ரி வெல்ஃபேர் அசோசியேஷன் உறுப்பினருமான பொல்லக்ஸ் மல்லிகார்ஜுன் கூறுகையில், உள்ளூரில் நடைபெற்ற ஜீன்ஸ் தொழில் தற்போது உலகமயமாகிவிட்டது. உலக ஜீன்ஸ் சந்தையில் என்ன மாற்றங்கள் ஏற்பட்டாலும், அது பல்லாரியில் உள்ள தொழிலிலுக்கும் மாற்றங்களை ஏற்படுத்துகிறது. பங்களாதேஷின் நெருக்கடி இதற்கு ஒரு சிறந்த உதாரணம். ஏனெனில் பங்களாதேஷ் பிரச்சனைக்கு பிறகு பல்லாரியில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கான தேவை அதிகரித்துள்ளது.
பங்களதேஷின் நிதி நெருக்கடிக்கு பிறகு சில சர்வதேச பிராண்டுகளும் பல்லாரியில் உள்ள தயாரிப்பாளர்களை தொடர்பு கொள்ள தொடங்கியுள்ளனர். கடந்த செப்டம்பர் மாதம் முதல் பல்க் ஆர்டர்களை பெற்று வருகிறோம். தயாரிப்புகளை சரியான நேரத்தில் வழங்குவதற்காக எங்கள் பணியாளர்களின் எண்ணிக்கையையும் அதிகரித்து வருகிறோம்", என்று கூறியுள்ளார். வெளியான பல்வேறு ஆதாரங்களின்படி பல்லாரியில் உள்ள ஒவ்வொரு யூனிட்டும் கடந்த மாதம் ரூ.35 லட்சம் ஆர்டர்களை பெற்றுள்ளன.


Click it and Unblock the Notifications