பங்களாதேஷ் நாட்டில் வெடித்த வன்முறை போராட்டம் அந்நாட்டின் அரசியலை தலைகீழாக புரட்டிப்போட்டுள்ளது. நாட்டின் முழு கட்டுப்பாட்டை ராணுவம் கையில் எடுத்துள்ள நிலையில் 3 நாள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. விரைவில் இடைக்கால அரசு அமைக்கப்படும் என அந்நாட்டின் ராணுவ தளபதி அறிவித்துள்ளார். இந்த அரசியல் குழப்பத்தால், பங்களாதேஷ் நாட்டின் வர்த்தகம், பொருளாதாரம் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளது.
பாகளாதேஷ் நாட்டின் 85 சதவீத ஏற்றுமதி வர்த்தகம் டெக்ஸ்டைல் துறையை நம்பியிருக்கும் வேளையில் தற்போது இத்துறை மொத்தமாக முடங்கியது மட்டும் அல்லாமல் எப்போது மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பும் என்பது தெரியாமல் உள்ளது. இப்படியிருக்கையில் சர்வதேச டெக்ஸ்டைல் மற்றும் ஆடை நிறுவனங்கள் பிற டெக்ஸ்டைல் உற்பத்தி நாடுகளில் முதலீடு செய்யவும், உற்பத்தியைப் பெறவும் முடிவு செய்துள்ளது.

இதில் அதிகம் பலன் பெறப்போவது இந்தியா தான், டெக்ஸ்டைல் உற்பத்தியில் சீனா முதல் இடத்திலும், பங்களாதேஷ் 2வது இடத்திலும் உள்ளது. உலக நாடுகள் தற்போது சீன உற்பத்தியை ஒதுக்கும் வேளையில் ஒரே தீர்வாக இருப்பது இந்தியா அதிலும் குறிப்பாகத் தமிழ்நாட்டின் டெக்ஸ்டைல் நகரமான திருப்பூர் தான்.
பங்களாதேஷ் நாட்டில் வர்த்தகத்தை வைத்திருக்கும் சர்வதேச நாடுகள் தற்போது வெளியேற முடிவு செய்துள்ளதால் இந்திய நிறுவனங்கள் இந்த வர்த்தகத்தைக் கைப்பற்றத் தயாராகியுள்ளது. இதனால் இன்றைய வர்த்தகத்தில் கோகில்தாஸ் எக்ஸ்போர்ட்ஸ், சென்சூரி என்கா மற்றும் எஸ்பி அப்பரல்ஸ் உள்ளிட்ட டெக்ஸ்டைல் பங்குகள் செவ்வாய்க்கிழமை காலை வர்த்தகத்தில் 18% வரை உயர்ந்தன.
பங்களாதேஷ் அரசியல் பிரச்சனை இந்தியாவிலிருந்து ஜவுளி ஏற்றுமதியை அதிகரிக்கும் என்று முதலீட்டாளர்கள் நம்புவதால், கோகில்தாஸ் எக்ஸ்போர்ட்ஸ் பங்குகள் 18% உயர்ந்து புதிய 52 வார உச்சமான ரூ.1,089.40 ஐ எட்டியது. இதை தொடர்ந்து இத்துறையில் அதிகம் லாபம் அடைந்த மற்ற முன்னணி நிறுவனங்களில் கேபிஆர் மில் (16%), அரவிந்த் லிமிடெட் (11%), எஸ்பி அப்பரல்ஸ் (18%), சென்சூரி என்கா (20%), கைட்டெக்ஸ் கேர்மெண்ட்ஸ் (16%) மற்றும் நஹார் ஸ்பின்னிங் (14%) அதிரடியாக உயர்ந்தது.
இதுகுறித்து பிரபுதாஸ் லிலாதர் நிறுவனத்தின் ஆலோசனைத் தலைவர் விக்ரம் காசத் கூறுகையில் "பங்களாதேஷ் நாட்டில் உருவாகியுள்ள அமைதியின்மை நிச்சயமாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நிறுவனங்களை மாற்று உற்பத்தி சந்தையைத் தேட தூண்டும். இதுநாள் வரையில் குறைவான உற்பத்தி செலவுகள் காரணமாகச் சர்வதேச நிறுவனங்கள் பங்களாதேஷ் நாட்டிற்கு அதிகப்படியான வர்த்தகத்தைக் கொடுத்து வந்தனர். ஆனால் இந்த நிலை இனி மாறி இந்தியாவும், திருப்பூர் மாவட்டமும் பெரிய அளவில் நன்மை அடையும்" என்று கூறினார்.
இருப்பினும், இந்தியாவின் நூல் ஏற்றுமதியாளர்கள் பங்களாதேஷ் ஏற்றுமதியால் பாதிக்கப்படலாம். ஏனெனில் பங்களாதேஷ் உலகின் மொத்த நூல் இறக்குமதியில் 25-30% பங்குடன் மிகப்பெரிய வாடிக்கையாளராக உள்ளது.
பங்களாதேஷ் உலகின் இரண்டாவது பெரிய ஆடை ஏற்றுமதி செய்யும் நாடாகும். 2023 ஆம் ஆண்டில் சுமார் 47 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஆடைகளை உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது. பங்களாதேஷ் ஐரோப்பிய ஒன்றியம், பிரிட்டன், அமெரிக்கா என பொருளாதாரத்தில் பலம் படைத்த நாடுகளுக்கு அதிகளவில் ஆடைகளை ஏற்றுமதி செய்கிறது.
| நிறுவனத்தின் பெயர் | இன்றைய வர்த்தக முடிவின் விலை | % மாற்றம் | 52 வார உச்ச அளவு | 52 வார குறைவான அளவு | சந்தை மதிப்பு (கோடிகளில்) |
| Page Industries | 41,139.50 | -0.6 | 42,902.10 | 33,100.00 | 45,886.48 |
| KPR Mill | 950 | 15.2 | 970.2 | 622.85 | 32,472.33 |
| Swan Energy | 663 | -3.34 | 782.55 | 242.25 | 20,782.19 |
| Trident | 37.94 | 3.55 | 52.85 | 31.8 | 19,334.06 |
| Welspun Living | 181.55 | 4.13 | 193.80 | 112.45 | 17,643.18 |
| Raymond | 1,932.00 | 1.27 | 3,493.00 | 1,487.00 | 12,862.04 |
| Alok Industries | 25.16 | 0.92 | 39.24 | 15.15 | 12,492.54 |
| Arvind | 392.15 | 5.73 | 420.00 | 134.45 | 10,259.84 |
| Indo Count | 385.00 | 2.16 | 450.45 | 202.95 | 7,625.09 |
| PDS | 570.6 | 0.13 | 666 | 316.45 | 7,555.36 |
| Gokaldas Export | 1,076.10 | 15.94 | 1,095.00 | 480.05 | 7,684.23 |
| Lux Industries | 2,360.00 | 3.58 | 2,492.00 | 1,072.05 | 7,096.92 |
| Garware Technic | 3,574.00 | -0.48 | 4,287.80 | 3,028.70 | 7,095.52 |
| Jindal Worldwid | 352.3 | 0.16 | 439.8 | 268 | 7,064.33 |
| BOMDYEING | 214.15 | 1.95 | 243.1 | 112 | 4,422.94 |
| Pearl Global In | 908 | -2.34 | 1,053.90 | 319 | 4,144.33 |
| Kewal Kiran | 652 | 0.99 | 825.85 | 624.05 | 4,017.96 |
| Ganesha Ecosph | 1,555.00 | 1.2 | 1,620.00 | 813 | 3,941.46 |
| SG MART | 374.2 | -1.99 | 638.5 | 141.21 | 2,993.60 |


Click it and Unblock the Notifications