பங்களாதேஷ்-ல் ஜூலை மாதம் வெடித்த மாணவர் போராட்டம் பெரும் வன்முறையாக மாறி தற்போது அந்நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, அவருடைய சகோதரி ஷேக் ரெஹானாவுடன் வங்கதேசத்தை விட்டு வெளியேறி, இந்தியாவுக்குக் கடைசி நேரத்தில் தப்பித்துள்ளார். இவர் வெளியேறிய அடுத்த சில நிமிடங்களில் இன்று போராட்டக்காரர்கள் பிரதமர் இல்லமான Ganabhaban-க்குள் நுழைந்து மொத்த வீட்டையும் சூறையாடினர்.
இந்த நிலையில் பங்களாதேஷ் ராணுவத் தலைவர் வேக்கர்-உஸ்-ஜமான் திங்கள்கிழமை போராட்டக்காரர்களிடம் வன்முறையை முடிவுக்குக் கொண்டு வாருங்கள், உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவோம் என்று கூறியுள்ளார். பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்த பின்னர் இடைக்கால அரசாங்கத்தை அமைப்பேன் என்றும் நாட்டு மக்களுக்கு அரசு தொலைக்காட்சியின் வாயிலாக உத்தரவாதம் கொடுத்துள்ளார்.

"நாடு நிறைய பாதிக்கப்பட்டுள்ளது, பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது, பலர் கொல்லப்பட்டுள்ளனர் - வன்முறையை நிறுத்த வேண்டிய நேரம் இது" என்று அவர் மேலும் கூறினார். "என் பேச்சுக்குப் பிறகு, நிலைமை சீராகும் என்று நம்புகிறேன்." எனவும் ராணுவத் தலைவர் வேக்கர் பேசியுள்ளார். மேலும் பங்களாதேஷ்-ல் ஆட்சி அமைக்க எதிர்க்கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தத் துவங்கியுள்ளனர்.
பங்களாதேஷின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகத் திகழ்வது டெக்ஸ்டைல் துறை, இந்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) பெரும் பங்களிப்பை இத்துறை செய்கிறது. மேலும், பங்களாதேஷின் மொத்த ஏற்றுமதியில் இதுவே அதிகமான பங்கைக் கொண்டுள்ளது.
2023ஆம் ஆண்டில், பங்களாதேஷின் மொத்த ஏற்றுமதி 55.79 பில்லியன் டாலர்களை எட்டியது, இது கடந்த 10 வருடத்தில் இல்லாத உச்ச அளவாகும். இதற்கு முந்தைய சாதனை அளவான 54.7 பில்லியன் டாலரை 2022ஆம் ஆண்டில் எட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. இதேவேளையில் பங்களாதேஷ் நாட்டின் மொத்த ஏற்றுமதியில் சுமார் 47 பில்லியன் டாலர் மதிப்பிலான டெக்ஸ்டைல் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இது 2022ஆம் ஆண்டின் சாதனையை விட 10.27% அதிகம். இது மொத்த ஏற்றுமதியில் சுமார் 84 சதவீதமாகும்.
பங்களாதேஷ் நாட்டில் வெடித்த மாணவர் போராட்டத்தாலும், ஆட்சி மாற்றத்தாலும் அடுத்த சில மாதங்களுக்கு இந்நாட்டின் டெக்ஸ்டைல் துறையில் புதிய முதலீடுகள், புதிய ஆர்டர்கள் வருவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. சர்வதேச சந்தையில் பங்களாதேஷ் நாட்டிற்கு அடுத்தபடியாக அதிக டெக்ஸ்டைல் ஏற்றுமதி வர்த்தகத்தைக் கொண்டது இந்தியா, அதிலும் ஏற்றுமதியில் பெரும் வர்த்தகத்தைக் கொண்டது தமிழ்நாட்டின் திருப்பூர் மாவட்டம்.
இத்தகைய சூழ்நிலையில் பங்களாதேஷ் நாட்டிற்கு செல்ல உள்ள டெக்ஸ்டைல் ஆர்டர்கள் திருப்பூர்-க்கு வர அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது, கடந்த சில மாதங்களாக பங்களாதேஷ் நாட்டின் டெக்ஸ்டைல் ஊழியர்களுக்கான அடிப்படை சம்பளத்தை அதிகரித்த காரணத்தால் குறிப்பிட்ட அளவிலான வர்த்தகம் திருப்பூர்-க்கு மாறியது.
இந்த நிலையில் பங்களாதேஷ் நாட்டின் அரசியல் தலைகீழாகப் புரண்டு கிடக்கும் வேளையில் அதிகப்படியான ஆர்டர்கள், முதலீடுகள் திருப்பூர்-க்கு வர வாய்ப்பு அதிகமாகவே உள்ளது.
கடந்த சில தசாப்தங்களில் பங்களாதேஷ் நாட்டின் டெக்ஸ்டைல் துறை அபரிமிதமான வளர்ச்சியைப் பெற்றுள்ளது. 1980களில் அரசு வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்கும் கொள்கைகளை அறிமுகப்படுத்தியதிலிருந்து இந்தத் துறை வளர்ச்சிப் பாதையில் உள்ளது. குறைந்த தொழிலாளர் செலவு மற்றும் தொழில் செய்வதற்கு ஏற்ற சூழல் ஆகியவை பல சர்வதேச ஆடை பிராண்டுகளை பங்களாதேஷில் தொழிற்சாலைகளை அமைக்க வைத்தன. இன்று, சீனாவைத் தொடர்ந்து உலகின் இரண்டாவது பெரிய டெக்ஸ்டைல் ஏற்றுமதியாளராக பங்களாதேஷ் விளங்குகிறது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications