அமெரிக்கா விதித்துள்ள வரி விதிப்பு உலக நாடுகளைத் திக்குமுக்காட வைத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இந்த நிலையில் சீனா, ஐரோப்பா, கனடா ஆகியவை அமெரிக்காவுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் வரியை விதித்து தனது எதிர்ப்பு தெரிவித்து வரும் வேளையில், இந்தியா உட்படப் பல நாடுகள் அமெரிக்கா உடன் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தை செய்துகொள்ளப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இதன் ஒரு பகுதியாக இந்தியாவின் அண்டை நாடான பங்களாதேஷ் அமெரிக்காவுடன் டீலிங் செய்து வருகிறது. இதில் முக்கியமான ஒரு விஷயம் இந்தியாவைப் பாதிப்பும் வகையில் உள்ளது.

சீனாவிற்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது பெரிய ரெடிமேட் ஆடை ஏற்றுமதி நாடாக பங்களாதேஷ் திகழ்கிறது. இந்நிலையில், அமெரிக்கா விதிக்கும் பரஸ்பர வரிகளைத் தவிர்க்கும் முயற்சியாக, பருத்தி உள்ளிட்ட பல்வேறு அமெரிக்க விவசாயப் பொருட்களை வரி இல்லாமல் வாங்கும் முடிவை அமெரிக்க அரசிடம் முன்வைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
பங்களாதேஷ் அரசின் தலைமை ஆலோசகர் முஹம்மது யூனுஸ் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்புக்கு எழுதிய கடிதம் மூலம் இந்த தகவல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
முஹம்மது யூனுஸ் எழுதிய அந்த கடிதத்தில், முக்கிய கோரிக்கையாக பங்களாதேஷின் ஏற்றுமதிப் பொருட்கள் மீது அமெரிக்கா விதிக்கவுள்ள பரஸ்பர வரி நடவடிக்கையை மூன்று மாதங்களுக்கு ஒத்திவைக்க யூனுஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுமட்டும் அல்லாமல் பங்களாதேஷில் எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க் சேவையை அறிமுகப்படுத்துவது மற்றும் சிவில் விமான போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு போன்ற அதிநவீன தொழில்நுட்பத் துறைகளில் அமெரிக்க நிறுவனங்கள் முதலீடு செய்யவும், தொழில் துவங்கும் திறந்து விடுவது உள்ளிட்ட பல்வேறு சலுகைகளையும் வழங்க பங்களாதேஷ் தயார் என்று இந்த கடித்ததில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வியட்நாம் மற்றும் கம்போடியா போன்ற பல டெக்ஸ்டைல் உற்பத்தி நாடுகளும் இதேபோன்ற சலுகைகளை முன்வைத்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையை துவங்கியுள்ளது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் பங்களாதேஷ் இந்தியாவில் இருந்து வருடத்திற்கு 2 பில்லியன் டாலர் மதிப்பிலான பருத்தி மற்றும் நூல் வாங்கி வருகிறது. தற்போது வைக்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் பங்களாதேஷ் அமெரிக்காவில் இருந்து பருத்தி மற்றும் நூல் வாங்கினால் இந்தியாவில் வர்த்தக பாதிப்பு ஏற்படும்.
அமெரிக்க அரசு வர்த்தக பற்றாக்குறை அடிப்படையில் விதிக்கப்பட்டுள்ள இந்த ரெசிப்ரோக்கல் வரி கணக்கீட்டு முறை சிறிய மற்றும் நடுத்தர பொருளாதாரங்களைக் கொண்ட நாடுகளை அதிகம் பாதித்துள்ளன. இதனால் ஒவ்வொரு நாடும் இந்த வரி விதிப்பில் இருந்து எப்படியாவது தப்பிக்க வேண்டும் என்ற திட்டத்துடன் செயல்பட்டு வருகிறது.
பங்களாதேஷ் மீது அமெரிக்கா 37 சதவீத பரஸ்பர வரியால் பாதிக்கப்பட்டுள்ளது. இது நாட்டின் மிகப்பெரிய அந்நிய செலாவணி வருவாய் ஈட்டும் டெக்ஸ்டைல் துறைக்கு ஒரு பெரிய அடியாக இது உள்ளது. இந்த வரி விதிப்பால், பங்களாதேஷின் டெக்ஸ்டைல் ஏற்றுமதி கடுமையாகப் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
எனவே, இந்த வரிச்சு மையைக் குறைக்கும் முயற்சியாக, அமெரிக்க விவசாயப் பொருட்களை வரி இல்லாமல் வாங்குவதன் மூலம் அமெரிக்காவைச் சமாதானப்படுத்த பங்களாதேஷ் முயல்கிறது. இதன் மூலம், அமெரிக்கா தனது பரஸ்பர வரி விதிப்பு முடிவை மறுபரிசீலனை செய்யலாம் என்று அந்நாடு நம்புகிறது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications