இந்தியா-வை முந்திய பங்களாதேஷ் நிலைமை இப்போ என்ன தெரியுமா..? 3 மாதம் மட்டுமே..!

கொரோனா தொற்றுக்கு மத்தியிலும், சுதந்திரம் அடைந்து 50 வருடங்களுக்குப் பின்பு பங்களாதேஷ் முக்கியமான பொருளாதாரச் சோதனையில் வெற்றி பெற்றது.

கடந்த வருடம் ஐநா பங்களாதேஷ் நாட்டின் பிரமிக்க வைக்கும் வளர்ச்சியைப் பார்த்துவிட்டு உலகிலேயே குறைவான வளர்ச்சியைப் பதிவு செய்யும் நாடுகள் பட்டியலில் இருந்து அந்நாட்டை நீக்கி வளரும் நாடுகள் பட்டியலில் வைத்தது.

அனைத்திற்கும் மேலாகப் பங்களாதேஷ் நாட்டின் தனிமனித வருமானத்தின் அளவு வரலாறு காணாத விதமாக உயர்ந்து இந்தியாவை முந்தியது. இந்தச் செய்தி உலகம் முழுவதும் காட்டுத்தீ போலப் பரவி பல முன்னணி நிறுவனங்கள், பொருளாதார நாடுகள் கவனம் பங்களாதேஷ் மீது திரும்பியது.

ஆனால் இந்த நிலை நீண்ட காலம் நீட்டிக்கவில்லை, தற்போது பல முக்கியமான பிரச்சனைகளைப் பங்களாதேஷ் எதிர்கொண்டு உள்ளது.

பங்களாதேஷ்

பங்களாதேஷ்

பங்களாதேஷ் நாட்டின் மத்திய வங்கியான சென்டர்ல் பேங்க் ஆப் டாக்கா-வின் அன்னிய செலாவணி கடந்த ஒரு வருடத்தில் 13 சதவீதம் சரிந்து 40 பில்லியன் டாலராகச் சரிந்துள்ளது. இதன் மூலம் அமெரிக்க டாலருக்கு எதிரான அந்நாட்டின் நாணயமான Taka-வின் மதிப்பு 95 ஆகக் குறைந்துள்ளது.

4 மாதம் மட்டுமே

4 மாதம் மட்டுமே

தற்போதைய அன்னிய செலாவணி இருப்பான 40 பில்லியன் டாலர் அடுத்த 4 மாத இறக்குமதிக்கு மட்டுமே போதுமானதாக உள்ளது, taka மதிப்பில் ஏற்படும் சரிவை கணக்கிட்டுச் சரியாகச் சொல்ல வேண்டும் என்றால் இந்த இருப்பு அடுத்த 3 மாதத்திற்கு மட்டுமே போதுமானதாக இருக்கும்.

சர்வதேச நாணய நிதியம்

சர்வதேச நாணய நிதியம்

இந்த நிலையைச் சமாளிப்பதற்காகவே தற்போது பங்களாதேஷ் அரசு சர்வதேச நாணய நிதியத்திடம் bailout நிதி உதவிக்காகக் கோரிக்கை வைத்துள்ளது. மேலும் நாணய மதிப்பு சரிவால் அந்நாட்டின் பணவீக்கம் 7.6 சதவீதம் என்ற 9 சரிவை எட்டியுள்ளது. பங்களாதேஷ் நாட்டிற்கும் எனர்ஜி இறக்குமதி தான் பெரும் தலைவலியாக உள்ளது.

எரிபொருள், எரிவாயு விலை

எரிபொருள், எரிவாயு விலை

தொடர்ந்து அதிகரித்து வரும் எரிபொருள், எரிவாயு விலை அந்நாட்டு உற்பத்தி நிறுவனங்களைக் கடுமையாகப் பாதித்துள்ளது. இது மட்டும் அல்லாமல் எரிபொருள் அனைத்து பிரிவுகளையும், துறைகளையும் சார்ந்து இருக்கும் காரணத்தால் சீட்டுக்கட்டு போல அந்நாட்டின் வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் சரிய துவங்கும்.

வாராக் கடன்

வாராக் கடன்

ஒருபக்கம் டாலர் இருப்பு சரிவாலும், உற்பத்தி சரிவு, பணவீக்கம் அதிகரிப்பால் அந்நாட்டுப் பொருளாதாரம் மந்தமடையும் வேளையில் மறுபுறம் பங்களாதேஷ் நாட்டின் வாராக் கடன் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் பங்களாதேஷ்-க்கு மூடிஸ் இன்வெஸ்டார் சர்வீஸ் Ba3 என்ற குறைவான ரேட்டிங்-ஐ கொடுத்துள்ளது.

இந்தியா - பங்களாதேஷ்

இந்தியா - பங்களாதேஷ்

இந்த இடத்தில் தான் இந்தியாவையும் பங்களாதேஷ் நாட்டையும் பொருளாதார வல்லுனர்கள் ஒப்பிட்டுப் பார்க்கின்றனர். அன்னிய நாணய இருப்பு குறையும் போது, நாட்டில் வாராக் கடன் அதிகரிக்கிறது. இதேபோன்ற சம்பவம் 1990-91 காலகட்டத்தில் இந்தியாவிலும் நடந்தது.

தனிநபர் வருமானம்

தனிநபர் வருமானம்

அப்போது இந்தியாவின் தனிநபர் வருமானம் 390 டாலராக இருந்தது, ஐஎம்எப் நிதி உதவியுடன் அடுத்த 3 வருடத்தில் 10 டாலர் அதிகரித்து 400 டாலர் வரையில் உயர்த்தப்பட்டது. இக்காலகட்டத்தில் இந்திய வங்கித் துறையின் 25 சதவீத சொத்துக்கள் வாராக் கடனாக மாறியுள்ளது தெரிகிறது.

இந்தியாவின் போராட்ட காலம்

இந்தியாவின் போராட்ட காலம்

1996-க்கு பின்பு இந்தியாவில் வர்த்தகச் சந்தையில் இருக்கும் தடைகளை வேகமாக உடைக்கப்பட்டு, இன்டஸ்ட்ரீயல் லைசென்ஸ் முறையை நீக்கப்பட்டு, சர்வதேச முதலீடுகள் உடன் உள்நாட்டு நிறுவனங்கள் உருவாக்கப்பட்டது. இதன் மூலம் 1996ல் 400 டாலராக இருந்த தனிநபர் வருமானம் 2012ல் 1500 டாலராக உயர்ந்தது.

இந்தியாவின் தவறு

இந்தியாவின் தவறு

இக்காலகட்டத்தில் இந்தியா செய்த முக்கியமான தவறு என்னவென்றால் இந்திய நிதியியல் தளத்தைச் சிறப்பான முறையில் நிர்வாகம் செய்யவும், கண்காணிக்கவும் போதிய கட்டமைப்பை உருவாக்காதது தான். இதேபோல் இக்காலகட்டத்தில் சிறிய திட்டங்களைக் காட்டிலும் பெரிய நிறுவனங்களுக்கு அதிகப்படியான கடன் கொடுத்தது, சில முக்கிய நிறுவன தோல்வியால் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.

பங்களாதேஷ் பொருளாதாரம்

பங்களாதேஷ் பொருளாதாரம்

இதே காலகட்டத்தில் தான் பங்களாதேஷ் பொருளாதாரம் உயர துவங்கியது, 10 வருடத்திற்கு முன்பு 1000 டாலருக்குக் கீழ் தனிநபர் வருமான அளவீட்டைக் கொண்டு இருந்த பங்களாதேஷ் கடந்த ஆண்டு 2600 டாலர் உடன் இந்தியாவை முந்தியது. பங்களாதேஷ் நாட்டின் வளர்ச்சிக்கு low-skill export, ரெடிமேட் ஆடை ஏற்றுமதி ஆகியவை அதிகளவில் கைகொடுத்தது.

டெக்ஸ்டைல் துறை

டெக்ஸ்டைல் துறை

1980 முதல் பங்களாதேஷ் நாட்டிற்கு டெக்ஸ்டைல் துறை பெரிய அளவில் வளர்ச்சிக்குக் கைகொடுத்தது. ஆனால் தவறாகச் செய்யப்பட்ட முதலீடுகள், நிதி ஒதுக்கீடுகள் போதுமான லாபத்தையும், வருமானத்தையும் அளிக்காத காரணத்தால் தற்போது வர்த்தகம் மற்றும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது.

அப்பர் மிடில் இன்கம் ஸ்டேட்டஸ்

அப்பர் மிடில் இன்கம் ஸ்டேட்டஸ்

பங்களாதேஷ் நாட்டின் முக்கியமான இலக்கு என்ன வென்றால் அப்பர் மிடில் இன்கம் ஸ்டேட்டஸ் பெறுவது தான். இதைப் பெற தனிநபர் வருமானத்தில் தற்போதைய அளவீட்டைக் காட்டிலும் 60 சதவீதம் அதிகம் பெற வேண்டும். இதை அடைய தொழிற்துறை, உள்கட்டமைப்பு துறையில் அதிகப்படியாக முதலீடு செய்ய வேண்டும்.

பொதுத்துறை வங்கி சொத்து

பொதுத்துறை வங்கி சொத்து

இதேவேளையில் பங்களாதேஷ் நாட்டின் பொதுத்துறை வங்கிகள் வெறும் 150 பில்லியன் டாலர் அளவிலான சொத்துக்களை மட்டுமே வைத்துள்ளது, இது அந்நாட்டின் கிராஸ் ஜிடிபி அளவில் 40 சதவீதம் மட்டுமே உள்ளது. இந்த 40 சதவீத சொத்துக்கள் வெறும் 0.5 சதவீத லாபத்தை மட்டுமே அளிக்கிறது என்பது தான் முக்கியமான பிரச்சனையாக உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+