இந்தியாவின் அண்டை நாடான பங்களாதேஷ் நாட்டில் 2024 ஆகஸ்டில் மாணவர்கள் தலைமையில் நடந்த மக்கள் எழுச்சி, அப்போதைய பிரதமர் ஷேக் ஹசினாவை பதவி விலகி இந்தியாவுக்கு ரகசியமாக தப்பிச் செல்ல வைத்தது, இப்போது ஆட்சியை நிர்வாகம் செய்யும் முகமது யூனுஸ் தனது பதவியை ராஜினாமா செய்யப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே அந்நாட்டின் பொருளாதாரம் மிகவும் மோசமாக இருக்கும் வேளையில் தற்போது முகமது யூனுஸ்-ம் ராஜினாமா செய்தால் அந்நாட்டின் பொருளாதாரத்தை காப்பற்றாபோவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது..? பங்களாதேஷ் நாட்டில் என்ன நடக்கிறது..?
கடந்த ஆண்டு பங்களாதேஷ் நாட்டில் அரசு வேலைவாய்ப்புகளில் 30% ஒதுக்கீட்டை எதிர்த்து தொடங்கியது மக்கள் போராட்டம், ஹசினா தலைமையிலான ஆட்சிக்கு எதிராக திரும்பி அவர் தனது தாய் நாட்டையே விட்டு வெளியேற வைத்தது.

இதன் தொடர்ச்சியாக ராணுவத்திற்கு ஆட்சி கைமாறி நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ் இடைக்கால அரசின் தலைவராக நியமிக்கப்பட்டார். இவரது நிர்வாகம், நாட்டில் ஜனநாயகத்தை மீட்டெடுக்கவும், தேர்தலுக்கு வழி வகுக்கவும் முயன்று வருகிறது. ஆனால் முகமது யூனுஸ் முயற்சிகளுக்கு அடுத்தடுத்து முட்டுக்கட்டை உருவாகி வரும் காரணத்தால் தற்போது அதிரடியாக முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு உள்ளார்.
தற்போது, வங்கதேசத்தின் தலைநகர் டாக்காவில் அரசியல் கட்சிகளிடையே முரண்பட்ட கோரிக்கைகளால் பதற்றம் அதிகரித்துள்ளது. வங்கதேச தேசியவாத கட்சியான BNP, முதல் முறையாக இடைக்கால அரசுக்கு எதிராக பெருமளவு போராட்டங்களை நடத்தியுள்ளது.
இந்தப் போராட்டங்கள், யூனுஸின் நிர்வாகத்தின் மீதான அதிருப்தியை காட்டும் விதமாக அமைந்துள்ளன. மேலும், அனைத்து அரசியல் கட்சிகளும் ஒரே நிலைப்பாட்டை எட்ட முடியாமல், பங்களாதேஷ் நாட்டில் அரசியல் குழப்பம் தீவிரமடைந்துள்ளது.
இந்த நிலையில் தான் 84 வயதான முகமது யூனுஸ், அரசியல் கட்சிகளின் ஒத்துழைப்பு இல்லாததால் தனது பதவியை ராஜினாமா செய்யும் எண்ணத்தில் உள்ளதாக தெரிவித்துள்ளார். இது குறித்து, மாணவர் தலைமையிலான தேசிய குடிமக்கள் கட்சியின் (NCP) தலைவர் நஹித் இஸ்லாம், BBC பங்களா பத்திரிக்கையிடம் பேசியபோது, "யூனுஸ் இன்று காலை முதல் ராஜினாமா குறித்து சிந்தித்து வருவதாகக் கூறினார். தற்போதைய சூழ்நிலையில் அவரால் பணியாற்ற முடியவில்லை," என்று தெரிவித்தார்.
மேலும், யூனுஸ் தனது அமைச்சரவையிடம், அரசியல் கட்சிகளின் முழு ஆதரவு இல்லையெனில் பதவி விலகுவேன் என எச்சரித்ததாக AFP பத்திரிக்கையும் தெரிவித்துள்ளது.
அரசியல் மட்டத்தில் ஒத்துழைப்பு இல்லாத காரணத்தால் முகமது யூனுஸ் நிர்வாகத்தால் அந்நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த முடியாமலும், புதிய முதலீடுகள், வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியாமலும் மாட்டிக்கொண்டுள்ளார். மேலும் மக்கள் மத்தியில் இந்த அரசியல் பிரச்சனை பெரும் அதிர்ப்திக்கு வழிவகுத்து வருகிறது.
அரசியல் கட்சிகளிடையே ஒருமித்த கருத்து இல்லாதது, முகமது யூனுஸ் நிர்வாகத்தை பலவீனப்படுத்தியுள்ளது. இதனால் BNP உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சிகள், உடனடி பொது தேர்தலை வலியுறுத்துவதாகவும், ஆனால் மற்ற சில அரசியல் கட்சிகள் தேர்தலை தாமதப்படுத்த விரும்புவதாகவும் தெரிகிறது. இந்த முரண்பாடுகள், யூனுஸின் நிர்வாகத்தின் மீதான நம்பிக்கையை குறைத்து, அவரை ராஜினாமா முடிவுக்கு தள்ளியுள்ளன.
வங்கதேசத்தின் அரசியல் எதிர்காலம் தற்போது நிச்சயமற்ற நிலையில் அந்நாட்டில் இருக்கும் பல வர்த்தகம் பிற நாட்டிற்கு மாற வாய்ப்பு உள்ளது. 2024 மக்கள் போராட்டத்தின் போது பங்களாதேஷ் நாட்டில் இருந்து அதிகப்படியான டெக்ஸ்டைல் ஆர்டர்கள் இந்தியாவுக்கும், திருப்பூர்-க்கும் வந்தது. இதனால் திருப்பூரின் ஏற்றுமதி வர்த்தகம் தடாலடியாக உயர்ந்தது.
தற்போது உருவாகியுள்ள அரசியல் நிலையற்ற தன்மை கூடுதல் வர்த்தக வெளியேற்றத்திற்கு வழி வகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பங்களாதேஷ் நாட்டில் உருவாகியுள்ள புதிய பதற்றம் இந்திய வர்த்தக சந்தைக்கு சாதகமாக மாறலாம். மேலும் முகமது யூனுஸ் பதவி விலகினால் அவர் இடத்திற்கு வரப்போவது யார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது..?
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications