பங்களாதேஷில் நடந்த முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சியான பங்களாதேஷ் நேஷனலிஸ்ட் கட்சி (BNP) மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. BNP மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 297 இடங்களில் குறைந்தது 207 இடங்களை கைப்பற்றியுள்ளன என்று அந்நாட்டு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
BNP கட்சியின் தலைவர் தாரிக் ரஹ்மான் நாளை (பிப்ரவரி 14) பிரதமராக பதவியேற்க வாய்ப்புள்ளது. 17 ஆண்டுகளாக பங்களாதேஷ் நாட்டை விட்டு லண்டனில் வாழ்ந்து வரும் 60 வயதான தாரிக் ரஹ்மான் இப்போது பங்களாதேஷின் புதிய முகமாக உருவெடுத்துள்ளார். அவரது தந்தை ஜியாவூர் ரஹ்மான் தொடங்கிய BNP கட்சி 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சிக்கு திரும்புகிறது.

பங்களாதேஷ் நாட்டில் மக்கள் போராட்டம் வெடித்து பெரும் தடுமாற்றத்திற்கு பின்பு பொது தேர்தல் நடந்து புதிய மற்றும் நிலையான ஆட்சி அமைக்கப்பட்டு உள்ள வேளையில், அந்நாட்டு மக்கள் மத்தியில் புதிய நம்பிக்கை பிறந்துள்ளது. பங்களாதேஷ் ஆட்சி மாற்றம் இந்தியாவுக்கும், தமிழ்நாட்டுக்கும் எத்தகைய தாக்கம் இருக்கும்..?
தமிழ்நாடும், பங்களாதேஷ் நாடும் டெக்ஸ்டைல் துறையில் மிகப்பெரிய அளவில் போட்டிப்பட்டு வருகிறது என்பதால் இந்த ஆட்சி மாற்றம் தமிழ்நாட்டுக்கும் முக்கியமானதாகும்.
இந்தியாவுக்கு என்ன பொருள்?
இந்த வெற்றி இந்தியா-பங்களாதேஷ் உறவுகளில் புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளது. இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் மேற்கு வங்கத்தின் பாதுகாப்பு இதில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.
BNP ஆட்சியில் "கிரேட்டர் பங்களாதேஷ்" என்ற கருத்து முன்வைக்கப்பட்டால், மேற்கு வங்கம் மற்றும் வடகிழக்கு பகுதிகள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகலாம் என்ற கவலை இந்தியாவுக்கு உள்ளது. மேலும், மேற்கு வங்கம் மற்றும் அசாம் ஆகிய மாநிலங்கள் சட்டமன்ற தேர்தல்களை மே மாதத்தில் சந்திக்க உள்ள நிலையில் இந்த மாற்றம் இன்னும் முக்கியத்துவம் பெறுகிறது.
சீனா, பாகிஸ்தான், இந்தியா - தாரிக் ரஹ்மானுக்கு சமநிலை சவால்
தாரிக் ரஹ்மான் இப்போது மிகப்பெரிய சமநிலை கான வேண்டிய சவாலை எதிர்கொள்ள உள்ளார். சமீபத்தில் பாகிஸ்தானுடன் பாதுகாப்பு உறவுகள் ஆழமாக்கப்பட்டுள்ளன. 1971 போருக்குப் பிறகு முதல் முறையாக நேரடி வர்த்தகம் தொடங்கியுள்ளது. ராணுவ பரிமாற்றங்களும் மீண்டும் தொடங்கியுள்ளன. இது இந்தியாவுக்கு கவலையை ஏற்படுத்தும்.
2024ல் ஆட்சி மாற்றத்திற்கு பின்பு பாகிஸ்தான் நாட்டில் இருந்து அரிசி ஏற்றுமதி அதிகரித்துள்ளது. இதேபோல் பங்களாதேஷ் நாட்டில் இகுந்து ஜூட் மற்றும் டெக்ஸ்டைல் பொருட்களின் ஏற்றுமதி செய்யப்படுவது அதிகரித்துள்ளது.
அதேநேரம் சீனா பங்களாதேஷின் ஆயுதங்கள் மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு மிகப்பெரிய ஆதரவாளராக உள்ளது. சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு இனிஷியேட்டிவ்-க்கு பங்களாதேஷ் முக்கிய முனையாக உள்ளது. சீன முதலீடுகள் அரசியல் மாற்றங்களை தாண்டி நீடிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன இந்தியாவுக்கு முக்கிய பிரச்சனையாக உள்ளது.
பொருளாதாரம்
இந்தியா-பங்களாதேஷ் இடையேயான பொருளாதார உறவுகள் மிக முக்கியமானவை. வர்த்தகம், போக்குவரத்து, எல்லை தாண்டிய பொருளாதார திட்டங்கள் ஆகியவை பங்களாதேஷின் பொருளாதார வளர்ச்சிக்கு மிக முக்கியம்.
தாரிக் ரஹ்மான் சமீபத்தில் "பொருளாதார அடிப்படையிலான வெளியுறவு கொள்கை" மற்றும் "பங்களாதேஷ் ஃபர்ஸ்ட்" அணுகுமுறையை தான் செய்தியாளர் சந்திப்பில் வலியுறுத்தியுள்ளார். மேலும் தனது ஆட்சி உலக நாடுகள் உடன் பரஸ்பர நம்பிக்கை, மரியாதை மற்றும் நாட்டின் நலன்களை அடிப்படையாகக் கொண்டது என்று அவர் கூறியுள்ளார்.
தமிழ்நாடு
தமிழ்நாட்டு மக்களுக்கு பங்களாதேஷ் நாட்டில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றம் மறைமுகமாக பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. தமிழ்நாட்டின் திருப்பூர் டெக்ஸ்டைல் ஏற்றுமதிக்கும், பங்களாதேஷ் டெக்ஸ்டைல் ஏற்றுமதிக்கும் பெரும் போட்டி காலம் காலமாக இருந்து வருகிறது.
சமீபத்தில் டிரம்ப், ரெசிப்ரோக்கல் வரியை குறைத்த போது இந்தியாவுக்கு 18 சதவீதமும், பங்களாதேஷ்-க்கு 19 சதவீதம் என வரியை குறைத்து அறிவித்தார். ஆனால் டிரம்ப் இதில் டிவிஸ்ட் வைத்தார்.
அமெரிக்காவில் இருந்து பங்களாதேஷ் பருத்தி வாங்கினால், அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் ஆடைகளுக்கு ஜீரோ வரி என டிரம்ப் அறிவித்துள்ளார். இது திருப்பூர்-க்கு பெரும் போட்டியையும் நெருக்கடியையும் உருவாக்கும் விதமாக உள்ளது.
இதேவேளையில் இந்தியாவில் ஏற்றுமதி செய்யப்படும் பருத்தியில் 45 சதவீதம் பங்களாதேஷ் நாட்டிற்கு செல்கிறது. தற்போது அந்நாடு அமெரிக்காவில் இருந்து வாங்கினால் இதுவும் பாதிக்கும். இந்த நிலையில் தாரிக் ரஹ்மான், டிரம்ப் கொடுத்த ஆஃபரை பயன்படுத்துவாரா..? அல்லது தொடர்ந்து இந்தியாவிடம் இருந்து பருத்தியை வாங்குவாரா..? என்பது தான் பில்லியன் டாலர் கேள்வி.
பங்களாதேஷ் அமெரிக்காவிடம் இருந்து பருத்தி வாங்கினால் டாலர் செலவு மூலம் நாணய மதிப்பு பாதிக்கும், ஆனால் ஆடை ஏற்றுமதிக்கு 19 சதவீத சலுகை கிடைக்கும் என்பதால் அதிகப்படியான வருமானத்தையும், வர்த்தகத்தையும் பார்க்க முடியும். இதோடு பங்களாதேஷ் நாட்டில் டெக்ஸ்டைல் உற்பத்தி அதிகரித்தால் நாட்டில் வேலைவாய்ப்பும் அதிகரிக்கும்.
பங்களாதேஷ் 0 சதவீத வரியில் அமெரிக்காவுக்கு ஆடைகளை ஏற்றுமதி செய்தால் திருப்பூர் ஏற்றுமதியாளர்களால் இந்த விலையுடன் போட்டிப்போடுவது பெரும் சவால் தான்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்கி இருக்கும் 700 எண்ணெய் கப்பல்கள்:ஒரு இன்ச் நகர்ந்தா கூட சோலி முடிஞ்சிடும்

சவுதி அரேபியாவில் இருக்கும் இந்தியர்களே உஷார்.. இந்திய தூதரகத்தின் முக்கிய அறிவிப்பு வெளியானது..! #NRI



Click it and Unblock the Notifications