ஸ்தம்பித்த பங்களாதேஷ்.. 600 டெக்ஸ்டைல் தொழிற்சாலைகள் மூடல்.. நாடு முழுவதும் மக்கள் போராட்டம்!!

உலகின் முன்னணி ஆடை பிராண்டுகளின் உற்பத்தி தளமாகவும், முன்னணி ஆடை ஏற்றுமதி நாடாக விளங்கும் பங்களாதேஷ் ஸ்தம்பித்துள்ளது. அந்நாடு முழுவதும் டெக்ஸ்டைல் தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம் காரணமாக 600க்கும் அதிகமான தொழிற்சாலை மூடப்பட்டு மிகப்பெரிய நெருக்கடியில் சிக்கியுள்ளது.

2 வருடத்திற்கு முன்பு தான் பங்களாதேஷ் நாட்டில் மாணவர்களின் போராட்டம் காரணமாக ஆட்சி மாற்றம் நடத்து புதிய அரசின் கீழ் மெல்ல மெல்ல மீண்டு வரும் வேளையில் தற்போது டெக்ஸ்டைல் ஊழியர்களின் போராட்டம் வெடித்துள்ளது.

ஸ்தம்பித்த பங்களாதேஷ்.. 600 டெக்ஸ்டைல் தொழிற்சாலைகள் மூடல்.. நாடு முழுவதும் மக்கள் போராட்டம்!!

தற்போது டெக்ஸ்டைல் தொழிற்சாலை ஊழியர்கள் ஊதிய உயர்வு வேண்டும் என தொடர்ந்து 5வது நாளாக நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த போராட்டத்தில் லட்ச கணக்கான தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்திலும், சாலை மறியலிலும் ஈடுபட்டு வருவதால் அந்நாட்டின் முக்கிய தொழிற்துறை பகுதிகள் அனைத்திலும் பதற்றம் அதிகரித்து போலீஸ், பாரா மில்லிட்டரி அதிகாரிகளையும் பங்களாதேஷ் அரசு குவித்துள்ளது.

பங்களாதேஷ் நாட்டில் பணவீக்கம் 8 சதவீத அளவில் உள்ள நிலையில், உணவு, மருத்துவம், வீட்டு வாடகை போன்ற அடிப்படைச் செலவுகளைக் கூட டெக்ஸ்டைல் துறை ஊழியர்களால் சமாளிக்க முடியவில்லை என இத்துறை ஊழியர்கள் புலம்பி வருகின்றனர்.

இதேவேளை பங்களாதேஷ் நாட்டின் ஜிடிபியில் சுமார் 10 - 13 சதவீதம் வரையிலான பங்கீட்டை டெக்ஸ்டைல் துறை கொண்டு இருக்கும் காரணத்தால் இந்த போராட்டம் அந்நாட்டின் பொருளாதாரத்தைக் கடுமையாகப் பாதிக்கக் கூடியதாக உள்ளது.

பங்களாதேஷ் டெக்ஸ்டைல் ஊழியர்கள் தற்போது பெற்று வரும் குறைந்தபட்ச அடிப்படை சம்பளமான 12,500 டாக்காவை 30,000 டாக்காவாக உயர்த்த வேண்டும் வலியுறுத்தி இந்த மாபெரும் போராட்டம் வெடித்துள்ளது. இந்த சம்பளம் தற்போதைய அளவை காட்டிலும் 2 மடங்கு அதிகமாக இருக்கும் காரணத்தால் அரசும், நிறுவனங்களும் உடனடியாக முடிவு எடுக்க முடியாமல் தவிக்கிறது.

டெக்ஸ்டைல் ஊழியர்களின் போராட்டம் கடந்த 5 நாட்களில் அந்நாட்டின் தலைநகர் டாக்காவின் மிர்பூர் தாண்டி, உத்தரா, காஸிப்பூர், சாவர், அஷுலியா, நாராயண்கஞ்ச் உள்ளிட்ட முக்கியத் தொழில்துறை மையங்களிலும் தீவிரமடைந்துள்ளது.

இந்த போராட்டத்தால் இப்பகுதிகளில் இருக்கும் 500 - 670க்கும் அதிகமான தொழிற்சாலைகள் மூடப்பட்டு உள்ளது.

போராட்டக்காரர்கள் நெடுஞ்சாலைகளை முடக்குவதும், தொழிற்சாலைகள் மீது தாக்குதல் நடத்துவதும், காவல்துறை வாகனங்கள் மீது தீவைப்பதும் எனப் பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

5வது நாளாக போராட்டம் கட்டுக்குள் வராததால், கூடுதல் துணை ராணுவப் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த பிரச்சனையை விரைவாகச் சரி செய்ய பங்களாதேஷ் பிரதமர் தாரிக் ரஹ்மான் கடந்த 5 நாட்களில் பல அமைச்சரவைக் கூட்டங்களை நடத்தியுள்ளார்.

மேலும் டெக்ஸ்டைல் தொழிலாளர்களின் ஊதியத்தை நிர்ணயம் செய்ய பங்களாதேஷ் அரசு மூத்த நீதிபதி தலைமையில் ஆறு பேர் கொண்ட ஊதிய வாரியம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் விரைவில் தீர்வு காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் போராட்டத்திற்கு எதிராக ஆளும் கட்சியான வங்கதேச தேசியவாதக் கட்சியின் ஆதரவாளர்கள் போராட்டத்திற்கு எதிரான பிரசாரங்களில் ஈடுபட்டுள்ளனர்.

இதேபோல் அந்நாட்டில் தடை செய்யப்பட்ட அவாமி லீக் கட்சியைச் சேர்ந்தவர்கள் போராட்டத்திற்குள் ஊடுருவி வன்முறையைத் தூண்டுவதாகவும் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு உள்ளது. முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவும் இப்போராட்டத்தைப் பெரியளவில் தூண்டிவிடுவதாகவும் ஆளும் கட்சியினர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+