50 வருடங்களுக்கும் முன்பு மார்ச் 1971ஆம் ஆண்டுத் தன்னை விடவும் பணக்கார மற்றும் சக்திவாய்ந்த பாகிஸ்தான் நாட்டிடம் இருந்து பங்களாதேஷ் சுதந்திரம் பெற்றது. கடும் பஞ்சம் மற்றும் போருக்கு மத்தியில் சுதந்திரம் பெற்ற காரணத்தால் பங்களாதேஷ் நாட்டில் இருந்து பல இந்தியாவிற்கு வந்து தங்களது உயிரைக் காப்பாற்றிக் கொண்டனர். பல ஆயிரம் பேர் பாகிஸ்தான் ராணுவத்தால் கொல்லப்பட்டனர்.
இந்தப் புதிய நாடு தோல்வியடையும் என்று தோன்றுகிறது என்று ஹென்றி கிஸ்ஸிங்கர் கூறியது மறக்க முடியாத வரலாறு. ஆனால் இன்று பாகிஸ்தான் நாட்டை விடவும், ஏன் இந்தியாவை விடவும் மிகவும் சிறப்பான நிலைக்கு உயர்ந்துள்ளது என்றால் மிகையில்லை.
பங்களாதேஷ் சுதந்திரம்
சில வாரங்களுக்கு முன்பு பங்களாதேஷ் நாடு தனது தனிநபர் வருமான அளவீட்டை வெளியிட்டுப் பல நாடுகளின் பாராட்டைப் பெற்று வருகிறது. பங்களாதேஷ் சுதந்திரம் அடையும் போது பாகிஸ்தான் சுமார் 70 சதவீத பணக்கார நாடு. இன்று பங்களாதேஷ் பாகிஸ்தானை விடவும் 45 சதவீத பணக்கார நாடாக உயர்ந்துள்ளது.
50 வருட வளர்ச்சி
இந்த 50 வருட வளர்ச்சியில் பங்களாதேஷ் நாட்டின் தனிநபர் வருமானம் 2,227 டாலராக உயர்ந்துள்ளது, ஆனால் பாகிஸ்தான் நாட்டின் தனிநபர் வருமானம் 1,543 டாலர். இதுமட்டும் அல்லாமல் பாகிஸ்தான் கடுமையான நிதி நெருக்கடியில் தவித்து வருகிறது.
பாகிஸ்தான் நிலை
இதையும் தாண்டி பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஒரு பொருளாதார வல்லுனர் 2030ஆம் ஆண்டுக்குள் பாகிஸ்தான் தனது நாட்டின் வளர்ச்சிக்காகப் பாங்களாதேஷ் நாட்டிடம் கடன் பெறவும் வாய்ப்பு உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் தனிநபர் வருமானம்
இவ்வளவு ஏன் பங்களாதேஷ் நாட்டை விடவும் வளத்திலும், செல்வத்திலும், வர்த்தகத்திலும் பல மடங்கு பெரிய நாடாக விளங்கும் இந்தியாவின் 2020-21 நிதியாண்டுக்கான தனிநபர் வருமானம் 1,947 டாலர் மட்டுமே.
இந்தியா - பங்களாதேஷ் பிரச்சனை
இந்த நிலையில் தான் மத்திய அரசு பங்களாதேஷ் நாட்டில் இருந்து பலர் இந்தியாவிற்கு முறைகேடான வகையில் நுழைவதாகக் கூறி வருகிறது. பொருளாதாரத்திலும், வர்த்தகத்திலும் சிறந்து விளங்கும் நாட்டில் இருந்து ஏன் இந்தியா வரப் போகிறார்கள்.
தன்னம்பிக்கை மேம்பட்டு உள்ளது
மேலும் இந்தியா, பாகிஸ்தான் நாட்டை விடவும் தனிநபர் வருமானத்தில் வளர்ச்சி அடைந்துள்ள நிலையிலும், பங்களாதேஷ் அரசும் சரி, மீடியாக்களும் சரி பெரிய அளவில் இந்தியாவை ஒப்பிட்டுப் பேசவில்லை. இந்த 50 வருடத்தில் அவர்களின் தன்னம்பிக்கை மேம்பட்டு உள்ளதைக் காண முடிகிறது.
பங்களாதேஷ் ஏற்றுமதி
பங்களாதேஷ் நாடு 3 முக்கியக் குறிக்கோள்களை வைத்து தனது பொருளாதாரத்தைக் கட்டமைத்துள்ளது: ஏற்றுமதிகள், சமூக முன்னேற்றம் மற்றும் நிதி விவேகம். இதன் வாயிலாக 2011 முதல் 2019 வரையில் பங்களாதேஷ் நாட்டின் ஏற்றுமதி சராசரியாக 8.6 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது.
பெண்களின் அதிகம்
இந்த இடைப்பட்ட காலத்தில் பங்களாதேஷ் நாட்டின் வேலைக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது. ஆனால் இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாட்டிலும் இக்காலகட்டத்தில் வேலைக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை பெரிய அளவில் குறைந்துள்ளது.
கடன் - ஜிடிபி அளவீடு
மேலும் பங்களாதேஷ் தனது கடன் அளவீட்டை ஜிடிபி அளவில் 30 முதல் 40 சதவீதம் வரையிலேயே தொடர்ந்து நிலைநிறுத்தி வருகிறது. ஆனால் இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளில் கடன் அளவு நாட்டின் மொத்த ஜிடிபி அளவில் 90 சதவீதத்தை எட்டியுள்ளது.
வியட்நாம் முன்னோடி
இந்நிலையில் பங்களாதேஷ் நாட்டின் பொருளாதாரம் தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வரும் நிலையில் வியட்நாம் மற்றும் இதர நாடுகளைப் போல் டெக்ஸ்டைல் மட்டும் அல்லாமல் அதிக மதிப்புடைய பொருட்களைத் தயாரித்து உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யத் தயாராக உள்ளது.
7 வருட மோடியின் ஆட்சி
பங்களாதேஷ் நாட்டிடம் இருந்து இந்தியாவும், இந்திய அரசும் கற்றுக்கொள்ள ஏராளமாக உள்ளது, ஆனால் இதை ஒருபோதும் சிலர் ஏற்றுக்கொள்வது இல்லை. சரி இந்தியா கடந்த 7 வருட மோடியின் ஆட்சியில் எப்படியெல்லாம் பாதித்துள்ளது உங்களுக்குத் தெரியுமா..? இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்: மோடியும்.. இந்திய பொருளாதாரமும்.. 7 வருடப் பயணம்..!
More From GoodReturns

ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வருவாரா பிரதமர் மோடி? ரம்ஜான் நாளில் தொடங்கிய முக்கிய பேச்சுவார்த்தை..!!

ஜியோ ஹாட் ஸ்டாரின் தலைமை அதிகாரியை தேடி வந்து பதவி கொடுத்த ஓபன் ஏஐ நிறுவனம்!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!



Click it and Unblock the Notifications