வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஒரு முக்கிய செய்தி வெளியாகியுள்ளது. இன்று நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கியது. முதல் நாளன்று அதானி ஊழல் விவகாரம் காரணமாக நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட அமலியை தொடர்ந்து மதியம் 12 மணி நேரம் வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. இந்த அமர்வில் வங்கி துறையில் கொண்டுவரப்படும் முக்கிய மாற்றங்கள் குறித்து முடிவெடுக்கப்படும்.
வங்கி கணக்கு வைத்திருப்பவர்களுக்கான புதிய விதிகள்: வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு தங்கள் கணக்கில் சேர்க்கப்படும் நாமினி குறித்த புதிய விதிகள் வர உள்ளன. வங்கி சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பிறகு இது தொடர்பான அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

பொதுவாக நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் வங்கி திருத்த மசோதாவை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நிறைவேற்றுவார். இதில் செய்யப்படும் முக்கிய மாற்றங்கள் வங்கி கணக்குகளுக்கு மிகவும் முக்கியமானவை.
இந்த மசோதாவில் வங்கி கணக்கு வைத்திருக்கும் நபர்கள் நான்கு நாமினி வரை சேர்த்துக் கொள்ளும் திட்டமும் உள்ளது. மசோதா நிறைவேற்றப்பட்டதும் அதன் பிறகு ஒவ்வொருவரும் தங்களுடைய வங்கி கணக்கில் 4 நாமினிகளை பரிந்துரைப்பது கட்டாயமாக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
நாடு முழுவதும் பல்வேறு வங்கிகளில் உரிமை கோரப்படாமல் இருக்கும் பணம் 2024-ஆம் ஆண்டின் மார்ச் மாத நிலவரப்படி 78,000 கோடி ரூபாயாக உள்ளது. அவர்களுடைய குடும்பத்தினரும் பல்வேறு காரணங்கள் காரணமாக பணத்தை எடுக்க முடியாமல் இருந்து வருகின்றனர். பொதுவாக வங்கி கணக்கு வைத்திருப்பவர் ஒருவர் இறந்து விட்டால் அவர் சார்பாக நாமினிக்கு அவருடைய அக்கவுண்டில் இருக்கும் பணம் வழங்கப்படும். ஒரு வேலை இறந்தவர் எந்த நாமினியையும் பரிந்துரைக்கவில்லை என்றால் அந்தப் பணம் உரிமை கோரப்படாத பணமாக இருக்கும்.
இதற்கு தீர்வு காணும் வகையில் தான் ஒருவர் தன் வங்கிக் கணக்கிற்கு நான்கு பேர் வரை நாமினிகளை நியமனம் செய்யும் வசதியை கொண்டு வர உள்ளனர். தற்போது வங்கிகள் போஸ்ட் ஆபீஸ்களில் ஒரு நாமினியை மட்டுமே பரிந்துரைக்கும் வசதி உள்ளது. வங்கி கணக்குகள் மட்டுமின்றி, லாக்கர்கள், பங்குகள் உட்பட பல்வேறு நிதி கணக்குகளுக்கு குறைந்தது நான்கு பேரை அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதோடு வங்கி கணக்கு வைத்திருப்பவர் எந்த நாமினுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதை தேர்வு செய்யலாம் அல்லது கணக்கு வைத்திருப்பவர்கள் நான்கு பேருக்கு மேல் தங்களுடைய சொத்தை சமமாக பிரிக்க உரிமை வழங்கலாம். இது முற்றிலுமாக கணக்கு வைத்திருப்பவரைப் பொறுத்தது.


Click it and Unblock the Notifications