ரிசர்வ் வங்கியின் புதிய வழிகாட்டுதல்களின் படி 2025-ஆம் ஆண்டின் ஜனவரி 1-ஆம் தேதி முதல் சில வங்கி கணக்குகள் மூடப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. பொதுவாக RBI-யின் அறிவுரையின் படி தான் வங்கிகள் செயல்படும். பாதுகாப்பை மேம்படுத்தவும், மோசடிகளை குறைக்கவும், வங்கி நடவடிக்கைகளை மேம்படுத்தவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் குறிப்பிட்ட சில வங்கி கணக்குகள் ஜனவரி 1-ஆம் தேதி முதல் மூடப்படவுள்ளது. அவை எந்தெந்த கணக்குகள் என்பது குறித்து பார்ப்போம்.
ஒருவேளை உங்கள் வங்கி கணக்கு மூடப்பட்டால் உங்களால் அதன் பிறகு எந்தவித பரிவர்த்தனையும் செய்ய முடியாது. வங்கிக் கிளையை அணுகி அதற்கான விண்ணப்பம் பெற்று மீண்டும் கணக்கை செயல்படுத்த வேண்டும்.

செயலற்ற கணக்குகள்: 2 வருடங்கள் அல்லது அதற்கும் மேலாக எந்த வித பரிவர்த்தனையும் இல்லாமல் இருக்கும் கணக்குகள் செயலற்ற கணக்காகக் கருதப்படும். இந்த கணக்குகள் ஹேக்கர்கள் மற்றும் மோசடி நபர்களால் பயன்படுத்தப்படும் அபாயம் அதிகம். அத்தகைய கணக்குகளை மூட ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது.
12 மாதங்களாக செயல்பாட்டில் இல்லாத கணக்குகள்: கடந்த 12 மாதங்கள் அல்லது அதற்கு மேலாக எந்தப் பரிவர்த்தனை நடவடிக்கையும் இல்லாத கணக்குகள் செயலற்றதாக கருதப்படும். எனவே கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் வங்கிக் கிளையை அணுகி கணக்கை மீண்டும் செயல்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த முயற்சி வங்கிகளுக்கான பணிச் சுமையை குறைக்கவும், செயல் திறனை மேம்படுத்தவும் ஆன்லைன் மோசடியை குறைக்கவும் குறைக்கும் விதத்திலும் கொண்டுவரப்பட்டுள்ளது.
ஜீரோ பேலன்ஸ் கணக்குகள்: நீண்ட காலமாக ஜீரோ பேலன்ஸ் இருக்கும் கணக்குகளும் மூடப்படலாம், ஆர்பிஐ-இன் இந்த நடவடிக்கை குறிப்பாக தவறான பயன்பாட்டை நீக்குவதற்காக எடுக்கப்பட்டுள்ளது. நிதி அபாயங்களை குறைத்து வாடிக்கையாளர்களுக்கும் வங்கிகளுக்கும் இடையே உள்ள தொடர்பை ஊக்குவிப்பதே ரிசர்வ் வங்கியின் முதன்மை நோக்கமாகும்.
செயலற்ற கணக்குகளை மூடுவது முக்கியமா? என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். முக்கியமாக செயலற்ற கணக்குகளின் அறிக்கைகளை நாம் அடிக்கடி பார்க்க மாட்டோம். அப்படி இருக்கும் பட்சத்தில் அந்த கணக்குகளைப் பயன்படுத்தி ஏதேனும் தவறான பரிவர்த்தனைகள் நடந்திருந்தால்.. அதற்கு நீங்கள் முழு பொறுப்பேற்கும் அபாயம் ஏற்படலாம். செய்யாத தவறுக்காக நிதி சிக்களில் சிக்கும் வாய்ப்புகள் அதிகரிக்கலாம். ஆனால் இதை முன்கூட்டியே அறிந்து பயன்படுத்தப்படாமல் இருக்கும் கணக்குகளை பிளாக் செய்வதனால் ஹாக்கர்களின் பிடியிலிருந்து விடுபட முடியும்.
அவ்வப்போது ரிசர்வ் வங்கி வழங்கும் புதிய வழிகாட்டுதல்கள் வங்கித் துறைக்கு மட்டுமல்லாமல் வாடிக்கையாளர்களுக்கும் பயனளிக்கும் வகையில் உள்ளது. வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கி கணக்குகளை தவறாமல் பராமரித்து செயலற்ற கணக்குகளைச் செயல்படுத்தி, பேலன்ஸ் விவரங்களை கண்காணித்தால் கணக்குகள் மூடப்படுவதைத் தடுக்கலாம்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications