அக்டோபர் மாதத்தில் 21 நாட்கள் வங்கி விடுமுறையா.. உண்மை நிலவரம் என்ன.. தமிழகத்தில் எத்தனை நாட்கள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

செப்டம்பர் மாதம் முடிவடைய இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில், அக்டோபர் 2021ம் மாதத்தில் வங்கி விடுமுறைகள் எத்தனை நாட்கள் என்பதை தான் பார்க்க இருக்கிறோம்.

 

இது இரண்டாவது சனி, ஞாயிற்றுக்கிழமை, 4வது சனிக்கிழமை, மாநில விடுமுறைகள் என பல விடுமுறை நாட்கள் உள்ளது. இந்த விடுமுறை எல்லாம் சேர்த்தால், இந்த அக்டோபர் 2021ல் 21 நாட்கள் விடுமுறையாகும்.

மேற்கண்ட இந்த 21 நாட்களில், ரிசர்வ் வங்கியின் பட்டியலின் படி, அவற்றில் 14 நாட்கள் மட்டுமே விடுமுறை. மற்ற 7 நாட்கள் வார இறுதி விடுமுறை நாட்களாகும்.

அக்டோபர் 1 முதல் வரவிருக்கும் 5 முக்கிய மாற்றங்கள்.. சாமனியர்களுக்கு சாதகமா..!

ரிசர்வ் வங்கி லிஸ்ட் என்ன?

ரிசர்வ் வங்கி லிஸ்ட் என்ன?

அதோடு இந்த 14 நாட்கள் விடுமுறை நாட்களும் அனைத்து மாநிலங்களுக்கும் அல்ல. இது மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடலாம். ஆக எந்த மாநிலத்தில் என்ன விடுமுறை. குறிப்பாக தமிழகத்தில் எத்தனை நாட்கள் விடுமுறை. அரசு பொது விடுமுறை நாட்கள் எத்தனை என வாருங்கள் பார்க்கலாம்.

முன்கூட்டியே திட்டமிட்டு செயல்படலாம்

முன்கூட்டியே திட்டமிட்டு செயல்படலாம்

ஆக மேற்கண்ட விடுமுறை கால கட்டத்தினை தெரிந்து வைத்துக் கொண்டால், அதற்கேற்ப மக்கள் செயல்படலாம். ஏனெனில் தொடர்ச்சியான விடுமுறைகளுக்கு மத்தியில், அந்த சமயத்தில் ஏடிஎம்களில் பணத் தட்டுப்பாடு ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது. இதனால் பயனாளர்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

அக்டோபர் மாத விடுமுறை தினங்கள்
 

அக்டோபர் மாத விடுமுறை தினங்கள்

அக்டோபர் 1, 2021 - வெள்ளிக்கிழமை - வங்கிக் கணக்குகளின் அரையாண்டு நிறைவு (சிக்கிம்)

அக்டோபர் 2, 2021 - சனிக்கிழமை - காந்தி ஜெயந்தி (பொது விடுமுறை)

அக்டோபர் 3, 2021 - ஞாயிற்றுக்கிழமை

அக்டோபர் 6, 2021 - புதன்கிழமை - மஹாளய அமாவாஸ்யை (அகர்தலா, பெங்களூரு, கொல்கத்தா)

அக்டோபர் 7, 2021 - வியாழக்கிழமை - லைனிங்தோ சனமஹி (இம்பால்)

அக்டோபர் 9, 2021 - இரண்டாவது சனிக்கிழமை

அக்டோபர் 10, 2021 - ஞாயிற்றுக்கிழமை

அக்டோபர் 12, 2021 - செவ்வாய்க்கிழமை - துர்கா பூஜை (மகாசப்தமி) - (அகர்தலா, கொல்கத்தா)

அக்டோபர் 13, 2021 - புதன்கிழமை - துர்கா பூஜை ( மகா அஷ்டமி) - (அகர்தலா, கொல்கத்தா, புபனேஷ்வர், குவகாத்தி, இம்பால், பட்னா, ராஞ்சி., சிக்கிம்)

அக்டோபர் 14, 2021 - வியாழக்கிழமை - துர்கா பூஜை/ தசரா/ மஹா நவமி, ஆயுத பூஜை (மேற்கு வங்கம், உத்தரபிரதேசம், திரிபுரா, தமிழ்நாடு, சிக்கிம், புதுச்சேரி, ஓடிசா, நாகாலாந்து, மேகாலாந்து, கேரளா, கர்நாடகா, ஜார்க்கண்ட், பீகார் மற்றும் அசாம்)

அக்டோபர் 15, 2021 - வெள்ளிக்கிழமை - துர்கா பூஜை, தசரா அல்லது விஜய தசமி (மணிப்பூர், இமாச்சல பிரதேசம் தவிர மற்ற அனைத்து மாநிலங்களிலும் விடுமுறை)

அக்டோபர் 16, 2021 - சனிக்கிழமை - துர்கா பூஜை அல்லது தாசைன் (சிக்கிம்)

அக்டோபர் 17, 2021 - ஞாயிற்றுக்கிழமை

அக்டோபர் 18, 2021 - திங்கட்கிழமை - கதி பிஹு (குவகாத்தி - அசாம்)

அக்டோபர் 19, 2021 - செவ்வாய்க்கிழமை - ஈத்-இ-மிலாத் அல்லது முகமது நபியின் பிறந்தநாள் (குஜராத், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, உத்தரகாண்ட், ஆந்திரா, தெலுங்கானா, ஜம்மு, காஷ்மீர், உத்தரபிரதேசம், கேரளா, டெல்லி, சத்தீஸ்கர் மற்றும் ஜார்க்கண்ட்)

அக்டோபர் 20, 2021 - புதன் கிழமை - மகரிஷி வால்மீகியின் பிறந்த நாள், லட்சுமி பூஜை, ஐடி-இ-மிலத் (திரிபுரா, பஞ்சாப், மேற்கு வங்கம், கர்நாடகா, ஹரியானா மற்றும் இமாச்சல பிரதேசம்)

அக்டோபர் 22, 2021 - வெள்ளிக்கிழமை - ஈத்-இ-மிலாத்-நபி (ஜம்மு-காஷ்மீர்)

அக்டோபர் 23, 2021 - நான்காவது சனிக்கிழமை

அக்டோபர் 24, 2021 - ஞாயிற்றுக்கிழமை

அக்டோபர் 26, 2021 - சேர்க்கை நாள் (ஜம்மு காஷ்மீர்)

அக்டோபர் 31, 2021 - ஞாயிற்றுக்கிழமை

முன்னதாக திட்டமிட்டு செயல்படுங்கள்

முன்னதாக திட்டமிட்டு செயல்படுங்கள்

இந்த வங்கிகளில் விடுமுறை நாட்களில் உங்களது பண பரிவர்த்தனை செய்ய முடியாமல் போகலாம் என்பதால், வங்கி வாடிக்கையாளர்கள் அதற்கேற்றவாறு தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும், கடைசி நேரத்தில் அவதிப்படுவதை விட, இப்போதிலிருந்தே அதற்காக தங்களை தயாராக வைத்துக் கொள்ளலாம். குறிப்பாக பணம் செலுத்த வேண்டிய இடங்களிலும் விரைவில் முன் கூட்டியே செலுத்தி விடலாம்.

விடுமுறைகள் மாறுபடலாம்

விடுமுறைகள் மாறுபடலாம்

மேற்கண்ட விடுமுறை நாட்கள் மாநிலத்துக்கு மாநிலம் சற்று வேறுபடுவதால், மக்கள் அதற்கேற்ப செயல்படுவது நல்லது. வங்கிகள் பொதுவாக நம் பணத்தேவையை பூர்த்தி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கும் ஒரு அம்சமாகும். ஆக முன்கூட்டியே திட்டமிட்டு, செயல்பட்டால் தேவையற்ற அலைச்சலையும் நேர விரயத்தையும் தவிர்க்கலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Bank alert! Bank holidays in October 2021: check full list here

Bank holidays in 2021: Bank alert! Bank holidays in October 2021: check full list here
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X