இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் மக்களை பாடாய்படுத்தி வரும் நிலையில், சமூக இடைவெளி, முகக்கவசம் என கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. அதிலும் சில மாநிலங்கள் லாக்டவுனும் அமல்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழக்கத்தில் முழு லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது.
அத்தியாவசியம் தவிர மற்ற சேவைகளை தடை செய்துள்ளது மாநில அரசு. எனினும் வங்கிகளுக்கு செயல்பட அனுமதி கொடுத்துள்ளது. அதே நேரம் வங்கி சேவை நேரம் குறைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சில மாநிலங்களில் இன்று (26, மே 2021 புதன்கிழமை) புத்த பூர்ணிமா காரணமாக வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
வங்கிகளுக்கு பொது விடுமுறை
இந்தியாவில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமையன்று வங்கிகளுக்கு விடுமுறை. இது தவிர இரண்டாவது சனிகிழமை மற்றும் நான்காவது சனிக்கிழமையன்று விடுமுறை. இது தவிர மற்ற பொது விடுமுறை நாட்களிலும் வங்கிகளுக்கும் விடுமுறை. எனினும் மாநிலங்களுக்கு மாநிலம் சில விடுமுறை நாட்கள் சற்று வேறுபடுகிறது. இதனால் மாநில விடுமுறைகளையும் சேர்த்தால், மொத்த விடுமுறை காலத்தில் சற்று மாற்றம் இருக்கலாம்.
தமிழகத்தில் விடுமுறை இல்லை
இன்று மே 26, 2021 புதன்கிழமை புத்த பூர்ணிமா / வெசக் * ரெஸ்ட்ரிக் ஹாலிடேயாகும். இந்த நாளில் தமிழக்கத்தில் வங்கிகள் வழக்கம்போல செயல்படும். இதனையடுத்து இம்மாதத்தில் மே 30, 2021 ஞாயிற்றுக்கிழமை என்பதால் அன்று வங்கிகளுக்கு பொது விடுமுறையாகும்.
எங்கெல்லாம் விடுமுறை
இந்த விடுமுறையானது அகர்தலா, பெலாப்பூர், போபால், சண்டிகர், டேராடூன், கான்பூர், லக்னோ, கொல்கத்தா, மும்பை, நாக்பூர், நியூ டெல்லி, ராய்ப்பூர், ராஞ்சி, சிம்லா, ஸ்ரீ நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வங்கிகளுக்கு இன்று விடுமுறையாகும்.
திட்டமிட்டு செயல்படுங்கள்
தமிழகத்தில் இன்று விடுமுறை இல்லாவிட்டாலும், வங்கிகள் மதியம் 2 மணி வரை மட்டுமே செயல்படும். எனினும் வாடிக்கையாளர்கள் முடிந்த அளவில் டிஜிட்டல் சேவைகளை பயன்படுத்தலாம். இதன் மூலம் நீங்கள் வெளியில் செல்வதை தவிர்க்க முடியும். அப்படி அத்தியாவசிய தேவை என்றாலும் கூட, டோர்ஸ்டெப் வங்கி சேவையை நாடலாம். உங்கள் வங்கிகளில் அந்த சேவை இல்லாவிடில், அவசியம் வங்கிகளுக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் மாஸ்க், சமூக இடைவெளி என்பதை கட்டாயம் கடைபிடித்து செல்வது நல்லது.
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!



Click it and Unblock the Notifications