வங்கி மெசேஜ்-ஆ? போலி மெசேஜ்-ஆ? உறுதி செய்வது எப்படி.. உஷார் மக்களே..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்று பல இடங்களில் நாம் கேள்விபட்டிருக்கும் ஒரு விஷயம் வங்கி கணக்குகள் ஹேக் செய்யப்படுவது? அதன் மூலம் நூதன முறையில் பணம் திருடப்படுவது என பல வகையில் ஏமாந்திருக்கலாம்.

 

அதிலும் இன்றைய காலக்கட்டத்தில் நமது ஸ்மார்ட்போனுக்கு வரும் SMS, அது வங்கிகளில் இருந்து எஸ்.எம்.எஸ் வந்தது போலவே இருக்கும்.

இப்படி வங்கிகளில் இருந்து வருவது போல இருக்கும் எஸ்.எம்.எஸ்கள், உண்மையில் வங்கியில் இருந்து வருகின்றதா? அல்லது வேறு ஏதேனும் மூன்றாம் நபர், ஏமாற்று பேர் வழிகளிடம் இருந்து வருகின்றதா? என்பதை எப்படி தெரிந்து கொள்வது என பார்க்கவிருக்கிறோம்.

வங்கி வட்டியை விட அதிக வட்டி கொடுக்கும் அஞ்சலக தொடர் வைப்பு நிதி.. எப்படி இணைவது.. சலுகைகள்..? வங்கி வட்டியை விட அதிக வட்டி கொடுக்கும் அஞ்சலக தொடர் வைப்பு நிதி.. எப்படி இணைவது.. சலுகைகள்..?

இது வங்கி உடையதா?

இது வங்கி உடையதா?

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ தொடர்ந்து தனது சேவையினை, வாடிக்கையாளர்களிடம் எளிதில் கொண்டு சேர்க்கும் வகையில், பல டிஜிட்டல் தொழில் நுட்பங்களை பயன்படுத்தி வருகின்றது. பல ஆப்களை அறிமுகப்படுத்தி வருகின்றது. இந்த நிலையில் உங்களது மொபைலுக்கு வரும் எஸ் எம் எஸ் அல்லது மெயில் வங்கியுடையதா? இல்லையா? இதனை எப்படி அறிந்து கொள்வது வாருங்கள் பார்க்கலாம்.

ட்விட்டரில் அலர்ட்

ட்விட்டரில் அலர்ட்

இது குறித்து சமீபத்தில் எஸ்பிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் எஸ்பிஐ வாடிக்கையாளர்களை எச்சரித்து இருந்தது. உங்களின் மொபைலுக்கு வரும் எஸ்.எம்.எஸ் எங்கிருந்து வருகின்றது? இதன் பின்னால் யார் இருக்கிறார்கள். பாதுகாப்பாக இருங்கள் என்றும் அறிவித்து இருந்தது. அதோடு எப்படி பாதுகாப்பாக இருப்பது என்பதையும் கூறியிருந்தது.

எஸ்பிஐயில் இருந்து வந்ததா?
 

எஸ்பிஐயில் இருந்து வந்ததா?

ஒரு எஸ்.எம்.எஸ் எஸ்பிஐயில் இருந்து வந்ததா? என்பதை பார்க்க அதன் ஷார்ட்கோடில் இருந்து வந்ததா என்பதை முதலில் சரிபார்க்க வேண்டும். எஸ்பிஐயில் இருந்து வரும் எஸ்.எம்.எஸ்-கள் SBI/SBயில் இருந்து வருகின்றதா என்பதை பார்க்க வேண்டும். உதாரணத்திற்கு SBIBNK, SBIINB, SBIPSG, SBYONO.

இது ஏமாற்று வழியாக இருக்கலாம்

இது ஏமாற்று வழியாக இருக்கலாம்

இது தவிர அறியப்படாத நபரிடம் இருந்து எஸ்.எம்.எஸ் வந்தால், அது கவனிக்கப்பட வேண்டிய விஷயம். ஏனெனில் பிஷிங் மூலம் ஏமாற்ற வாய்ப்புகள் உண்டு. ஃபிஷிங் என்பது இ-மெயில் அல்லது எஸ்.எம்.எஸ் மூலம், ஒரு நம்பகமான நிறுவனம் போன்று ஏமாற்றி, பயனர் பெயர், பாஸ்வர்டுகள், PIN, வங்கி கணக்கு, கிரெடிட் கார்டு விவரங்கள் போன்ற தகவல்களை பெற முயற்சிக்கும் ஒரு வழி.

ஃபிஷிங் செயல்பாடு

ஃபிஷிங் செயல்பாடு

ஃபிஷிங் என்பது பொதுவாக இ-மெயில் அல்லது உடனடி செய்தி அனுப்பும் செயல்பாடுகள் வழியாக நடத்தப்படுகிறது. மேலும் நிஜமான வளைதளங்களின் தோற்றம் மற்றும் உணர்வுகளை ஒத்திருக்கும் போலியான வலைதளங்களில், பயனர்களின் விவரங்களை பதியுமாறு வலியுறுத்துகின்றன. ஃபிஷிங், பயனர்களை ஏமாற்ற பயன்படுத்தப்படும் ஒரு பொறியியல் நுட்பங்களாகும்.

இதனையும் பாருங்க

இதனையும் பாருங்க

எப்போதும் ஆன்லைன் பேங்கிங்கை பாதுகாப்பான சேனலில் செய்யவும். அதாவது பாட்லாக் (Padlock) ஐகானை சரிபார்த்து, சேனலை பாதுகாத்து வங்கி பணியைத் தொடரவும்.
எப்போதும் நம்பிக்கையான வலைதளங்களை உறுதி செய்ய https மற்றும் பாட்லாக் உள்ளதா என்று சரிபார்க்கவும்.

உறுதி செய்யுங்கள்

உறுதி செய்யுங்கள்

எப்போதும் நிதி அல்லது பிற தனிப்பட்ட தகவல்களை கோறும் இ-மெயில்கள் அல்லது எஸ்.எம்.எஸ்களை சந்தேகத்துடன் அணுகவும். நீங்கள் பெற்ற தகவல்களின் நம்பகத்தன்மையை உறுதி செய்ய கூறப்பட்ட நபரை நீங்கள் தொடர்புகொள்ளலாம். அதாவது எஸ்பிஐ அனுப்பியதாக இருந்தால், எஸ்பிஐ இடத்தில் கன்பார்ம் செய்து கொள்ளலாம்.

இணைய வங்கி வாடிக்கையாளர்கள்

இணைய வங்கி வாடிக்கையாளர்கள்

பெரும்பாலும் மோசடியாளர்கள் இணைய வங்கி பயனர்களையே குறி வைக்கின்றனர். இவர்கள் ஒரு இணைய முகவரியிலிருந்து ஒரு பொய்யான மெயிலை பெறுகின்றனர். அந்த மெயில் கொடுக்கப்பட்ட லிங்கினை கிளிக் செய்து, உள்நுழைந்தால், உண்மையான வங்கி தளத்தினை போல தோற்றமளிக்கும் பொய்யான தளத்திற்கு செல்ல வாய்ப்புள்ளது.

இணைய தாக்குதல்

இணைய தாக்குதல்

வழக்கமாக இந்த மெயில்கள் வாடிக்கையளர்களை கவர ரீவார்டு பாயிண்ட்டுகளை கொடுக்கலாம். அப்படி இல்லையேல் அபராதம் என எச்சரிக்கலாம். இதனால் வாடிக்கையாளர்கள் தங்களது லாகின் ஐடி, பாஸ்வேர்டினை கொடுக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். பயனர்கள் இது உண்மையான பக்கம் தான் என நம்பி, தங்களது விவரங்களை கொடுத்து சப்மிட் கொடுக்கும்போது, Error என்று வரும். இதன் மூலம் நீங்கள் பிஷிங் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளீர்கள் என தெரிந்து கொள்ளலாம்.

இதனை செய்யாதீர்கள்

இதனை செய்யாதீர்கள்

ஆக உங்களுக்கு அறியப்படாத எந்த நபரிடம் இருந்து வரும் மெயிலையும் கிளிக் செய்து விவரங்களை கொடுக்க கூடாது. இதனால் நீங்கள் ஹேக் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இதே போன்று தான் எஸ்.எம்.எஸ் -களும். இது உங்களை ஹேக் செய்வதற்கான ஒரு ஆயுதமாக ஹேக்கர்கள் பயன்படுத்துகின்றனர். ஆக தெரியாத எந்தவொரு விஷயத்தினையும் கண்டிப்பாக செய்யக்கூடாது. மேலும் தகவல்களுக்கு onlineSBI.comல் சென்று தெரிந்து கொள்ளலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Bank Alert! How to check whether a message is from your bank ; Check details

State bank of India customers must be aware of the unknown sources
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X