கொரோனா நெருக்கடி.. வங்கி கடன் வளர்ச்சி ரூ.54,000 கோடிக்கு மேல் சரிவு.. கேள்விக்குறியாகும் வளர்ச்சி!

கொரோனா தொற்று நோயின் காரணமாக கடுமையான நெருக்கடி நிலையே நிலவி வருகின்றது.

இதன் காரணமாக வங்கிகளில் கடன் வளர்ச்சியானது கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 54,000 கோடி ரூபாய்க்கு மேல் சரிந்துள்ளது.

இது கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 102.11 டிரில்லியன் ரூபாயாக சரிவினைக் கண்டுள்ளது. இது முந்தைய ஆண்டில் 102.65 டிரில்லியன் ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

கடன் வளர்ச்சி

கடன் வளர்ச்சி

ரிசர்வ் வங்கி தரவின் படி, கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது கடன் வளர்ச்சி ஆகஸ்ட் 28-வுடன் முடிவடைந்த 15 நாட்களில் 5.5 சதவீதமாக இருந்தது. இதே இதற்கு முந்தைய ஆண்டில் இதே 15 நாட்களில் கடன் வளர்ச்சியானது இரு மடங்காக 10.2 சதவீதமாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது. இது நாட்டில் நிலவி வரும் நெருக்கடியான நிலைக்கு மத்தியில் மந்த நிலை, இதன் காரணமாக தேவை குறைவு என்பன பல, வங்கித் துறையில் இத்தகைய பிரதிபலிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடன் வளர்ச்சி குறைவு

கடன் வளர்ச்சி குறைவு

சொல்லப்போனால் ஆகஸ்ட் 2020 மாதத்தில் கொரோனா லாக்டவுனில் விதிகப்பட்ட பல கட்டுப்பாடுகள், தளர்த்தப்பட்டதுடன், அரசும், பணப்புழக்கத்தினை ஊக்குவிக்கும் பொருட்டும், தொழில் துறை வளர்ச்சியினை ஊக்குவிக்கவும், பிணையில்லா கடனை ஊக்குவித்தது. ஆனாலும் இன்று வரையிலும் கூட கடன் வளர்ச்சி குறைந்தே காணப்படுகிறது.

40 வருடங்களில் இல்லாதளவுக்கு வீழ்ச்சி

40 வருடங்களில் இல்லாதளவுக்கு வீழ்ச்சி

நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டிலேயே 40 வருடங்களில் இல்லாத அளவுக்கு இந்தியாவின் வளர்ச்சி வீழ்ச்சி கண்டுள்ளது. இப்படி ஒரு நிலையில் தான் ஆகஸ்ட் மாதத்தில் கடன் வளர்ச்சியும் இந்தளவுக்கு வீழ்ச்சி கண்டுள்ளது. எனினும் இதே ஆகஸ்ட் மாதத்தில் வங்கிகளில் டெபாசிட் 15,000 கோடி ரூபாய்க்கு மேல் செய்யப்பட்டுள்ளது.

கடன் வளர்ச்சி அவசியம்

கடன் வளர்ச்சி அவசியம்

ஒரு நாட்டின் பொருளாதாரத்தின ஊக்குவிக்கவும், வேலை வாய்ப்பினை அதிகரிக்கவும் கடன் வளர்ச்சி மிக அவசியம். வாராக்கடன் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்து, தொழில் நிறுவனங்களுக்கு கடன் கிடைப்பதை அரசு எளிமைப்படுத்த வேண்டும். ஏனெனில் நிறுவனங்கள் முதலீட்டினை அதிகரிக்கும் போது அது வளர்ச்சிக்கு வித்திடும். அவ்வாறு வளர்ச்சி கூடும் போது, வேலை வாய்ப்புகளும் கூடும். இதனால் உற்பத்தி விகிதமும் அதிகரிக்கும். மக்களின் கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும் போது நுகர்வும் அதிகரிக்கும். இது வளர்ச்சிக்கு வித்திடும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+