இந்திய வங்கிகளில் மக்கள் செய்யும் வைப்பு நிதிக்கான இன்சூரன்ஸ் அளவீட்டை மத்திய அரசு வெறும் 1 லட்சம் ரூபாயில் இருந்து 5 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.
இதன் மூலம் வங்கியில் டெபாசிட் செய்பவர்களுக்கு மட்டும் பாதுகாப்பு அளிக்கப்படாமல் மொத்த வங்கி துறைக்கும் அதிகப்படியான பாதுகாப்பு அளிக்கப்பட உள்ளது எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இந்திய வளர்ச்சி
இந்தியாவின் வளர்ச்சியில் வங்கிகள் மிக முக்கியப் பங்கு வகிக்கும் நிலையில், வைப்பு நிதியாளர்களின் பணத்திற்குக் கட்டாயம் பாதுகாப்பு அளிக்க வேண்டியது அவசியம். வங்கியின் வைப்பு நிதியாளர்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டுமெனில் வங்கிகளுக்குப் பாதுக்காப்பு அளிக்க வேண்டும் எனப் பிரதமர் பேசியுள்ளார்.
1,300 கோடி ரூபாய்
சமீபத்தில் சுமார் 1 லட்சம் வைப்பு நிதியாளர்களுக்குச் சுமார் 1,300 கோடி ரூபாய் அளிக்கப்பட்டது, அடுத்தச் சில நாட்களில் மீதமுள்ள 3 லட்சம் வைப்பு நிதியாளர்களுக்கும் தங்களின் டெபாசிட் தொகையை இந்த இன்சூரன்ஸ் திட்டத்தின் வாயிலாகத் திருப்பி அளிக்கப்பட உள்ளது எனவும் மோடி தெரிவித்துள்ளார்.
5 லட்சம் ரூபாய் இன்சூரன்ஸ்
வங்கி வைப்பு நிதியாக்கான இன்சூரன்ஸ் தொகையை 1 லட்சம் ரூபாயில் இருந்து 5 லட்சம் ரூபாய் வரையில் அதிகரிக்கச் சுமார் 27 வருடமுமாகியுள்ளது. இதேபோல் வங்கி திவாலாகும் பட்சத்தில் வங்கி வைப்பு நிதியாளர்களுக்குத் தங்களது டெப்பாசிட் தொகையைத் திருப்பி அளிக்கப் பல வருடங்கள் ஆன நிலையில் தற்போது 90 நாட்களில் ரிசர்வ் வங்கி அளிக்கிறது.
98% பேருக்குப் பாதுகாப்பு
மேலும் வங்கி வைப்பு நிதிகளுக்கு அளிக்கப்பட்டும் Deposit Insurance Credit guarantee scheme திட்டம் மூலம் சுமார் 98 சதவீதம் பேர் பாதுகாப்பு பெற்றுள்ளனர். மக்கள் பெரும் நம்பிக்கை உடன் வங்கியில் டெபாசிட் செய்யும் போது அவர்களுக்குத் தகுந்த நம்பிக்கையைக் கொடுக்க வேண்டும் எனவும் மோடி பேசியுள்ளார்.
டெபாசிட் தொகை
Deposit Insurance Credit guarantee scheme என்னும் திட்டத்தின் மூலம் ஒரு வங்கி திவாலாகும் பட்சத்தில் வைப்பு நிதியாளர்களுக்கு 5,00,000 லட்சம் ரூபாய் வரையிலான காப்பீட்டு அளிக்கப்பட்டு, அரசு அவர்களின் டெபாசிட் தொகையைத் திருப்பி அளிக்கும்.
உதாரணம்
உதாரணமாக நீங்கள் வங்கியில் 10 லட்சம் ரூபாய் வரையில் டெபாசிட் செய்திருந்து வங்கி திவாலானால் Deposit Insurance Credit guarantee scheme மூலம் 5,00,000 ரூபாய் மட்டுமே பெற முடியும். இதேவேளையில் 4,50,000 ரூபாய் டெபாசிட் செய்திருந்தால் மொத்தமாக 4,50,000 வரையிலான தொகையும் பெறலாம். முன்பு இந்தக் காப்பீட்டு அளவு வெறும் 1 லட்சம் ரூபாயாக மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது.
பியூஷ் கோயல்
மேலும் இந்தியாவில் சுமார் 17 வங்கிகள் மக்களுக்குத் தங்கள் பணத்தைத் திருப்பிக் கொடுக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளது. Deposit Insurance Credit guarantee scheme திட்டம் மூலம் இன்சூரன்ஸ் பாதுகாப்பை 5 லட்சம் வரையில் அதிகரித்துள்ளது மட்டும் அல்லாமல் செட்டில்மென்ட் காலத்தை வெறும் 90 நாட்களாகக் குறைக்கப்பட்டு உள்ளது என மத்திய அமைச்சரான பியூஷ் கோயல்-ம் தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications